திமுக 22 + சரத் பவார் கட்சி 8.. தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு பாஜகவுக்கு இன்னும் 3 MPகள் மட்டும் தேவை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுகவும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் ஆதரவு அளித்தால், அரசியலமைப்பு திருத்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு தேவையான ஆதரவை கிட்டத்தட்ட பாஜக பெற்றுவிடும். அப்படி இந்த இரு கட்சிகளும் ஆதரவு கொடுத்தால் பாஜகவுக்கு 3 எம்பிக்களின் ஆதரவு மட்டுமே தேவைப்படும் என்ற சூழல் உருவாகும்.

இப்போது நமது நாடாளுமன்றத்தில் லோக்சபாவில் 543 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளின் எண்ணிக்கையை 543லிருந்து அதிகபட்சமாக 850 வரை உயர்த்துவது, மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை 2029 தேர்தலுக்கு முன்பே அமல்படுத்துவது உள்ளிட்ட திட்டங்களுடன் தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வர மத்திய அரசு முயல்கிறது.

Delimitation Bill BJP DMK

தொகுதி மறுசீரமைப்பு மசோதா

கடந்த முறையே இது தொடர்பான மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. இருப்பினும், இது அரசியலமைப்பு திருத்த மசோதா என்பதால் அவையில் 3ல் இரு பங்கு ஆதரவு தேவைப்படும். அப்போது பாஜகவுக்கு போதிய ஆதரவு இல்லை என்பதால் அந்த மசோதா தோல்வி அடைந்தது. இதற்கிடையே மீண்டும் அது தொடர்பான மசோதாக்களை கொண்டுவர மத்திய அரசு தயாராகி வருகிறது. இதற்காகவே நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

முன்பே சொன்னது போல இதற்கு அரசியலமைப்பு திருத்தம் தேவைப்படும் என்பதால் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு முக்கியமானதாக உள்ளது. இப்போது லோக்சபாவில் 3 இடங்கள் காலியாக இருப்பதால் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 540ஆகும். அதில் மூன்றில் இரண்டு பங்கு என்பது 360 எம்பிக்கள் ஆகும். தொகுதி மறுசீரமைப்பு மசோதா நிறைவேற்ற 360 என்பது மேஜிக் நம்பராக இருக்கிறது.

மேஜிக் நம்பர் 360

இதில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு 320 எம்பிக்கள் ஆதரவு இருக்கிறது. இந்த மசோதாவுக்கு திமுக ஆதரவு அளிக்க அளிக்கலாம் என சொல்லப்படுகிறது. தமிழகத்தின் தற்போதைய 7.2 சதவீத பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட்டால், தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதை ஆதரிக்க தயார் என்று திமுக முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் திமுகவின் நிலைப்பாடு இந்த விவகாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதேபோல மகாராஷ்டிராவில் உள்ள சரத் பவார் தலைமையிலான என்சிபி கட்சியும் இதில் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இன்னும் 3 சீட்

அதன்படி பார்த்தால் திமுகவின் 22 எம்பிக்கள், சரத் பவார் கட்சியின் 8 எம்பிக்கள் ஆதரவு கிடைத்தால் இந்த நம்பர் 350 ஆகிறது. மேலும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் 4 எம்பிக்கள், யூபிபிஎல் கட்சியின் ஒரு எம்பி, ஜோரம் மக்கள் இயக்கத்தின் ஒரு எம்பி மற்றும் சுயேச்சை எம்பி உமேஷ் படேல் ஆகியோரின் ஆதரவையும் சேர்த்தால் மொத்தம் 357 ஆகிறது. எனவே, மேஜிக் நம்பர் 360ஐ எட்ட மேலும் 3 எம்பிக்களின் ஆதரவு மட்டுமே தேவைப்படும். கடைசி நேரத்தில் 3 எம்பிக்களின் ஆதரவை திரட்டுவது என்பது பாஜகவுக்கு பெரிய விஷயமாக இருக்காது என்றே நெட்டிசன்கள் கூறுகிறார்கள்.

கவனிக்க வேண்டியவை

இருப்பினும், திமுக மற்றும் என்சிபி கட்சிகள் இதுவரை தங்கள் நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதேபோல் 357 என்ற நம்பரும் கூட ஒரு கணிப்பு தான். மேலே சொன்ன அனைத்து கட்சிகளும் தொகுதி மறுசீரமைப்பு மசோதா விவகாரத்தில் தங்கள் முடிவை அறிவிக்கவில்லை என்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

மேலும், அரசியலமைப்பு திருத்த மசோதாவுக்கு மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு என்பது அவையில் கலந்து கொண்டு வாக்களிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் பொறுத்து மாறுபடும். எனவே, 360 என்பது இறுதி இலக்கு இல்லை. ஓரிரு இடங்கள் குறையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+