இடி, மின்னலுடன் வெளுக்கப் போகுது மழை.. 19 மாவட்டங்களுக்கு வார்னிங்.. எந்தெந்த பகுதிகளுக்கு தெரியுமா?
சென்னை: சென்னை, திருவள்ளூர், நீலகிரி, கோவை, திருப்பூர் உள்பட 19 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: குமரிக்கடல் முதல் தமிழகம், கேரளா வழியாக தெற்கு கர்நாடகா வரை, வளி மண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தேனி மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் இன்று இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இடி மின்னலுடன் பலத்த மழை
சென்னை, திருவள்ளூர், நீலகிரி, கோவை, திருப்பூர், கடலுார், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சில இடங்களில் இன்று இடி, மின்னல் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
