தமிழகத்தை உலுக்கிய கோவை சிறுமி பாலியல் கொலையில் இன்று தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. கடந்த திமுக ஆட்சி, அதற்கு முந்தைய அதிமுக ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனை முக்கிய காரணமாக இருந்தது. ஆட்சிகள் மாறினாலும், மாறாத காட்சியாக தவெக ஆட்சியிலும் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதை கலாச்சாரம் அதிகரித்துள்ளது. அதைத்தடுப்பதற்கு காவல்துறை திணறி வருகிறது. கோவை சூலூரில் 10 வயது சிறுமி கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கோவை போக்சோ நீதிமன்றம் அறிவித்துள்ளது இன்று தீர்ப்பு அறிவிக்கவுள்ளது.

கட்சி ஆரம்பித்த 2 ஆண்டுகளிலேயே ஆட்சியை பிடித்து நாடு முழுவதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது தவெக. மே 10 ஆம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் பதவியேற்றார். பெண்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்படும், சிங்க பெண் பாதுகாப்பு படை உருவாக்கப்படும் என்று அறிவித்தார். இரண்டே வாரங்களில், கோவையில் நடந்த அந்த சம்பவம் மொத்த நாட்டையும் உலுக்கியது. மே 21 ஆம் தேதி.. கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி மாயமானார்.

Coimbatore Girl sexual case Judgement

கோவை சிறுமி பாலியல் கொலை

பெற்றோர், உறவினர், காவல்துறையினர் தேடினர். மே 22 ஆம் தேதி சிறுமியின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து,கொலை செய்யப்பட்டார். மாநிலம் முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனம் தெரிவித்தன. இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் , மோகன் என்கிற இருவர் கைது செய்யப்பட்டனர். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை வாக்குமூலம் அளித்தனர்.

அன்றைக்கு தொடங்கி தற்போதுவரை, கடந்த 6 மாத தவெக ஆட்சியில் ஏராளமான பாலியல் குற்றங்கள் அரங்கேறிவிட்டன. சிங்க பெண் படைக்கே பாதுகாப்பு வழங்க வேண்டிய கட்டாயத்தில் சட்டம் ஒழுங்கு உள்ளது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தார்கள். பல்வேறு திருப்பங்களை சந்தித்த கோவை சிறுமி பாலியல் கொலை வழக்கு விசாரணை கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் 68 சாட்சிகள் விசாரிக்கப்பட்னர். 221 ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஆறு மாதங்களாக, பல்வேறு சாட்சிகள் அடிப்படையில் வாதம், பிரதிவாதம் நடைபெற்றது.

இன்று தீர்ப்பு

அனைத்து தரப்பு விசாரணையும் நிறைவடைந்தது. நவம்பர் 27 ஆம் தேதி (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என்று கடந்த 16 ஆம் தேதி நீதிமன்றம் அறிவித்தது. இதற்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது குற்றவாளி கார்த்திக், எனக்கும், இந்த வழக்குக்கும் சம்பந்தமில்லை. பொய் வழக்கு போட்டுள்ளார்கள் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கோவை போக்சோ நீதிமன்றம் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது. இதை தமிழகமே உற்று நோக்கியுள்ளது.

கார்த்தியை பிடித்து கொடுத்ததே நான் தான்

இந்த வழக்கில், குற்றவாளிகளில் ஒருவரான மோகன் ராஜ் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டபோது செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த வழக்குக்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை என்று கடந்த முறை கூறியதை இந்த முறையும் தெரிவிப்பேன். கார்த்தியைர் பிடித்துக் கொடுத்தது, காட்டிக் கொடுத்ததே நான் தான். அவனுடைய நண்பன் என்று என்னை சொல்லாதீர்கள். நண்பன் என்று சொல்வது தவறு.

கார்த்திக்கிற்கு என் வீட்டு பெண்களோடு தொடர்பில் இருந்தான். எனக்கு நீதி வேண்டும் என்று போராடி வருகிறேன். நீங்களும் நீதிக்காகப் போராடுங்கள், என் மீது எந்தக் குற்றமும் இல்லை. எந்த சம்பந்தமும் இல்லை என்று நீதிபதியிடம் கூறுவேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+