தவெகவுக்கு கோர்ட்டில் டபுள் ஷாக்.. 2 எம்எல்ஏ பதவி காலி? விஜய் வெற்றிக்கும் சிக்கல்.. அடிமேல் அடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் விஜய்யின் தேர்தல் வெற்றிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை ஆரம்பத்திலேயே தள்ளுபடி செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் தவெகவின் மற்றொரு எம்.எல்.ஏ-வுக்கு எதிரான வழக்கிலும் நீதிமன்றம் இதேபோன்ற உத்தரவைப் பிறப்பித்திருந்தது.

அடுத்தடுத்து வெளியாகியுள்ள இந்த இரண்டு முக்கியத் தீர்ப்புகளும் ஆளுங்கட்சியான த.வெ.க வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

tvk vijay

விஜய்க்கு எதிரான வழக்கு என்ன?

கடந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட த.வெ.க தலைவர் விஜய் அமோக வெற்றி பெற்று முதலமைச்சரானார். ஆனால், அவரது வெற்றியை எதிர்த்து பெரம்பூர் தொகுதியைச் சேர்ந்த எஸ். தினேஷ் என்ற வாக்காளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், "தேர்தலில் போட்டியிடும்போது வேட்பாளர் தாக்கல் செய்யும் சொத்து விவரப் பத்திரத்தில், விஜய் தனது உண்மையான வருமானம் மற்றும் சொத்து விவரங்களை மறைத்துள்ளார். குறிப்பாக, சுமார் 30 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் வாங்கியதையும், 35 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து விற்றதையும் அவர் தனது வேட்புமனுவில் குறிப்பிடவில்லை. இது வாக்காளர்களுக்குத் தெரிய வேண்டிய உண்மையான தகவல்களை மறைக்கும் செயல். எனவே, பெரம்பூர் தொகுதியில் விஜய் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும்" என்று வாக்காளர் தினேஷ் கோரியிருந்தார்.

நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு என்ன?

வாக்காளர் தினேஷ் தொடர்ந்த இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என்றும், ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரி முதலமைச்சர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி. லட்சுமிநாராயணன் இன்று முக்கிய உத்தரவைப் பிறப்பித்தார். அதில், "வேட்புமனுவில் சொத்து மற்றும் வருமான விவரங்களை மறைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை தெரியவரும். இந்த வழக்கை விசாரிப்பதற்கு முகாந்திரம் இல்லை என்று கூறி ஆரம்பத்திலேயே தள்ளுபடி செய்ய முடியாது" என நீதிபதி திட்டவட்டமாகத் தெரிவித்து, விஜய்யின் மனுவைத் தள்ளுபடி செய்தார். இதன் மூலம், விஜய்யின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு இனி முழுமையாக விசாரிக்கப்பட உள்ளது.

கூடுதல் சிக்கல்: திருச்சி கிழக்கு இடைத்தேர்தலுக்கும் தடை!

இதுமட்டுமின்றி, பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற விஜய், பின்னர் திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். அங்கு இடைத்தேர்தல் நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு முடிவுக்கு வரும் வரை அங்கு இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மானாமதுரை த.வெ.க எம்எல்ஏவுக்கும் இதே பின்னடைவு!

ஏற்கனவே, கடந்த நவம்பர் 25-ஆம் தேதி, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ டி. இளங்கோவனின் வெற்றியை எதிர்த்து தி.மு.க முன்னாள் அமைச்சர் தமிழரசி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. 1,208 வாக்குகள் வித்தியாசத்தில் இளங்கோவன் வெற்றி பெற்றதை எதிர்த்துத் தொடரப்பட்ட அந்த வழக்கையும் முழுமையாக விசாரிக்க நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.

இப்படி கடந்த சில நாட்களுக்குள் முதலமைச்சர் விஜய் மற்றும் த.வெ.க எம்.எல்.ஏ இளங்கோவன் ஆகிய இருவரின் தேர்தல் வழக்குகளையும் தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் அடுத்தடுத்து மறுத்திருப்பது, தமிழக அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+