ரன் அப்பை மாற்றிய பும்ரா.. பந்தை மறைக்காமல் வருவது ஏன்? விக்கெட் கிடைக்காததற்கு இதுதான் காரணமா!
கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தனது பவுலிங் ரன் அப்பை மாற்றி இருப்பது பேசுபொருளாகி இருக்கிறது. பந்தை மறைக்காமல், வெளிப்படையாக காட்டி வரும் பும்ரா, மீண்டும் தனது ஆரம்ப கால 2015 பவுலிங் ஸ்டைலுக்கு மாறி இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டம் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 246 ரன்களை எடுத்துள்ளது. டாம் பிளெண்டல் 53 ரன்களுடனும், கிளென் பிலிப்ஸ் 36 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

புதிய பந்தில் பவுலிங் செய்த போதும் பும்ராவுக்கு விக்கெட் கிடைக்கவில்லை. பும்ராவின் பந்துகளை நியூசிலாந்து பவுலர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் எதிர்கொண்டனர். அதேபோல் பும்ராவால் தாக்கத்தை ஏற்படுத்த முடியாததற்கு அவருக்கு உறுதுணையாக வேறு பவுலர்கள் யாரும் பவுலிங் செய்யாததே காரணமாக பார்க்கப்படுகிறது.
ஆகாஷ் தீப், அன்சுல் கம்போஜ், குர்னூர் ப்ரார் ஆகியோரால் பும்ராவின் எண்ணவோட்டத்தை புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறுவது கண்கூடாக தெரிகிறது. இந்த இடத்தில் சிராஜ் விளையாடி இருந்தால், பும்ராவின் தாக்கம் கூடுதலாக இருந்திருக்கும். இதனிடையே பும்ராவின் பவுலிங் ரன் அப் மற்றும் ஆக்ஷனில் சிறிது மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக பும்ரா வழக்கமாக இரு கைகளிலும் பந்தை பிடித்து பேட்ஸ்மேனின் கண்களுக்கு தெரியாமல் மறைத்து கொண்டு வந்து, அம்பயர் அருகில் வந்த பின் தான் பந்தை வெளியில் காட்டுவார். அதேபோல் அவரின் முதுகு கொஞ்சம் குனிந்தவாறு இருக்கும். இதன் மூலமாக பும்ராவால் எளிதாக பிட்சில் இருந்து பவுன்ஸ் எடுக்க முடியும்.
ஆனால் இன்று பும்ரா ஒற்றை கையால் பந்தை பிடித்து கொண்டு சாதாரணமாக வீசினார். சரியாக சொல்ல வேண்டுமென்றால், 2015ல் பும்ரா பின்பற்றிய பவுலிங் ஆக்ஷனில் இன்றைய ஆட்டத்தில் வீசினார். பும்ரா திடீரென பவுலிங் ஆக்ஷனை மாற்றியதன் பின்னணி என்ன என்பதும் பேசுபொருளாகி இருக்கிறது. ஒரு கட்டத்தில் மிட்சல் ஜான்சன் வலது கையில் பவுலிங் செய்வதாக பார்க்கப்பட்டது.


Click it and Unblock the Notifications
