சென்னை- பெங்களூரு 1¼ மணி நேரம்.. ஐதராபாத் 3 மணி நேரம்..புல்லட் ரயில் குறித்து மத்திய அரசு குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை : புல்லட் ரயில் திட்டம் இந்தியாவில் செயல்பாட்டுக்கு வரும் போது சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு 1¼ மணி நேரத்திலும், ஐதராபாத்துக்கு 3 மணி நேரத்திலும் போக முடியும். இது விமான பயணத்தை விட விரைவானது என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று சென்னையில் பேசினார். இந்த திட்டம் இந்தியாவில் எப்போது முதல்முறையாக பயன்பாட்டிற்கு வரும். இந்தியாவில் சென்னைக்கு எப்போது வர வாய்ப்பு உள்ளது. திடடம் எந்த நிலையில் உள்ளது என்பது பற்றி பார்ப்போம்.

தமிழக பா.ஜனதா சார்பில் இந்திய அரசியலமைப்பு சட்ட நாள் விழா சென்னை தியாகராயநகரில் நேற்று கொண்டாடினார்கள். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்கினார். விழாவில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், "முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தமிழக ரெயில்வே மேம்பாட்டுக்காக ஆண்டுக்கு ரூ.870 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, தற்போது தமிழகத்துக்கான ரயில்வே பட்ஜெட் ரூ.7 ஆயிரத்து 600 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், ரூ.48 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

Bullet Train Bengaluru Hyderabad

தமிழக அரசு மீது புகார்

ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்த மாநில அரசின் ஒத்துழைப்பு மிக அவசியம். தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்குத் தேவையான 4,800 ஹெக்டேர் நிலத்தில், இதுவரை 24 சதவீதம் (1,253 ஹெக்டேர்) மட்டுமே மாநில அரசால் கையகப்படுத்தி வழங்கப்பட்டிருக்கிறது. நிலம் வழங்கினால்தான் திட்டங்களை விரைவாக முடிக்க முடியும். தமிழகத்தில் சென்னை எழும்பூர் உள்ளிட்ட 77 ரெயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 9 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகிறது.

சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு 1¼ மணி நேரம்

அடுத்த இலக்காக புல்லட் ரெயில் திட்டத்தை வைத்துள்ளோம். புல்லட் ரயில் இந்தியாவில் செயல்பாட்டுக்கு வந்தால் சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு 1¼ மணி நேரத்திலும், ஐதராபாத்துக்கு 3 மணி நேரத்திலும் போய்விட முடியும். இது விமான பயணத்தை விட விரைவானது" இவ்வாறு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசினார்.

ஆச்சரியமான உண்மை

அமைச்சர் பேசியதுமே பலர் புல்லட் ரயில் குறித்து ஆச்சரியமாக தேடி வருகிறார்கள். எனினும் ரயில்வே அமைச்சர் பேசியதுபடி உடனடியாக புல்லட் ரயில் சென்னைக்கு வந்துவிடாது. ஏனெனில் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் மும்பை - அகமதாபாத் இடையே செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் சென்னை - பெங்களூரு - ஐதராபாத் புல்லட் ரயில் திட்டம் இன்னும் அதே அளவிலான கட்டுமான நிலையில் கூட கிடையாது..

சென்னைக்கு புல்லட் ரயில்

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் அறிவிப்பின் படி, சென்னை நகரம் எதிர்காலத்தில் புல்லட் ரயில் திட்டத்தில் இடம்பெற வாய்ப்பு உள்ளது. சென்னை - பெங்களூரு - ஐதராபாத் இடையே புல்லட் ரயில் இணைப்புக்கான திட்டம் மத்திய அரசின் 2026-27 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான ஏழு புதிய அதிவேக ரயில் வழித்தடங்களில் இரண்டு சென்னையை நேரடியாக இணைக்கிறது.

சென்னை - பெங்களூரு 73 நிமிடங்களில் போக முடியும்

எனவே புல்லட் ரயில் வந்தால் சென்னை - பெங்களூரு 73 நிமிடங்களில் போக முடியும். சென்னையில் இருந்து ஐதராபாத் போக புல்லட் ரயிலில் மொத்தமே 2 மணி 55 நிமிடங்கள் தான் ஆகும். இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் தென்னிந்தியாவின் முக்கியமான நான்கு நகரங்களான சென்னை, பெங்களூரு, ஐதராபாத், அமராவதி ஆகியவற்றுக்கு இடையிலான போக்குவரத்து உருவாகும்.

மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில்

மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் தான் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் ஆகும். மொத்த 508 கி.மீ. தொலைவுக்கு வருகிறது. மொத்தம் 12 ரயில் நிலையங்கள். வருகிறது. ஜப்பானின் தொழில்நுட்ப உதவியுடன் கட்டப்பட்டு வருகிறது. குஜராத், மகாராஷ்டிரா, தாத்ரா நகர் ஹவேலி வழியாக புல்லட் ரயில் பயணிக்கிறது. இதில் முதலில் சூரத் - பிலிமோரா இடையிலான 50 கி.மீ. பகுதியை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 2027 ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் முதல் சேவையைத் தொடங்க இலக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. முழுத் திட்டத்தையும் 2029 டிசம்பருக்குள் முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதான் கள எதார்த்தம்


சென்னை-திருச்செந்தூர் இடையே நேரடி ரயில்

முன்னதாக நேற்றைய விழாவில் சென்னை-திருச்செந்தூர் இடையே நேரடி ரயில் இயக்க கோரி நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தினர் அளித்த மனுவை பரிசீலிப்பதாக ரயில்வே அமைச்சர் அஸ்விணி விழாவிலேயே உறுதி அளித்தார்.

நயினார் கோரிக்கை நிறைவேற்றம்

அதேபோல் விழாவில் பேசிய நயினார் நாகேந்திரன், நெல்லை பேட்டை-சேரன்மாதேவி இடையே பல ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள கல்லூர் ரயில் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, மேடையில் இருந்தபடியே ரயில்வே வாரிய தலைவரை செல்போனில் தொடர்புகொண்டு பேசிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அடுத்த சில நிமிடங்களிலேயே கல்லூர் ரயில் நிலையம் 100 நாட்களுக்குள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவித்தார். அமைச்சரின் இந்த உடனடி நடவடிக்கை கண்டு அனைவரும் கைதட்டி பாராட்டு தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+