"தீபம் ஏற்றாததால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கணுமா?" திருப்பரங்குன்ற விவகாரம்.. உச்ச நீதிமன்றம் கேள்வி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் அது நிறைவேற்றப்படாததற்கு அரசியல் காரணம்தான் என மனுதாரர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் எடுத்த ஒவ்வொரு நடவடிக்கைக்கும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு அமல்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதுதான் ஒரே நோக்கமாக இருந்ததாகவும் மனுதாரர்கள் தரப்பு கடுமையாக வாதிட்டது.

திருப்பரங்குன்றம் அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா, மனுதாரர் தரப்பில் குரு கிருஷ்ணகுமார் ஆஜராகினர்.

Thiruparankundram Deepam Supreme court

வாதம்

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், நவம்பர் 20ஆம் தேதி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், "தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான பொறுப்பு கோயில் நிர்வாகம், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, மாவட்ட ஆட்சியரை ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமித்து, தொல்லியல் துறையுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆனால், அந்த உத்தரவு முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது என்றும், மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்துள்ள அறிக்கையே அவர் தனது பொறுப்பை நிறைவேற்றவில்லை என்பதை ஒப்புக்கொள்ளும் வாக்குமூலமாக உள்ளது.

உத்தரவுக்கு கட்டுப்பட்டவர்கள்

கோயிலில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் இடத்திலேயே தீபம் ஏற்ற வேண்டும் என்று அறங்காவலர் குழு தீர்மானம் நிறைவேற்றியதுதான் இதற்கு காரணம் என்கிறார்கள். அந்த அறங்காவலர் குழு இதற்கு முன்பு இந்த வழக்கில் தனது தரப்பு வாதத்தை முன்வைக்கவே இல்லை. சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி மற்றும் அமர்வு பிறப்பித்த உத்தரவுகளுக்கு அவர்கள் கட்டுப்பட்டவர்கள் தான்" என்றும் வாதிட்டார்.

தீர்மானம்

கடந்த நவம்பர் 13ஆம் தேதிதான் கோயிலுக்கு புதிய அறங்காவலர் குழு அமைக்கப்பட்டதாக குறிப்பிட்ட வழக்கறிஞர் கிருஷ்ணகுமார், அரசியல் காரணங்களுக்கு நியமிக்கப்பட்ட அந்த குழு, தீபம் ஏற்றுவதை தொடர்ந்து தடுக்கவே அமைக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். மேலும், அறங்காவலர் குழு தீர்மானம் எப்போது நிறைவேற்றப்பட்டது என்பதற்கான ஆவணங்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி குமார், "மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த அறிக்கையின்படி மாலை 6.30 மணிக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிகிறது" என்றார்.

அந்த தீர்மானத்தில் கோயில் செயல் அலுவலரின் கையொப்பமும் இருந்ததாக வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் குறிப்பிட்டார். மேலும், மாவட்ட ஆட்சியர் முதலில் தடை உத்தரவை பிறப்பித்துவிட்டு மற நடவடிக்கைகளை எடுத்தாலும் கூட கோயிலிலேயே இருந்த அறங்காவலர் குழுவை அழைத்து கூட பேசவில்லை என்று குற்றம்சாட்டினார்.

கிரிமினல் நடவடிக்கை

மேலும், அரசியல் காரணங்களுக்காகவே உச்ச நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படவில்லை என்றும் இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். அப்போது நீதிபதிகள், "கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறீர்களா அல்லது சிவில் நடவடிக்கை கோருகிறார்களா" என கேள்வி எழுப்பினர். அதற்கு இரண்டுமே எடுக்கப்பட வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பு பதிலளித்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+