தொகுதி மறுவரையறை.. திமுகவின் இரு நிலைப்பாட்டிலும் எந்த மாற்றமும் கிடையாது.. ஸ்டாலின் அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுகவின் நிலைப்பாட்டில் சமரசம் என்ற பேச்சிற்கே இடமில்லை என்று கூறியுள்ள ஸ்டாலின், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகள் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது என்றும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத் தொடர் நவம்பர் 30ஆம் தேதி நடக்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரமாக உள்ளது. ஏற்கனவே மார்ச் மாதத்தில் இந்த மசோதா கொண்டு வரப்பட்ட போது, அது நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. அதற்கு திமுக மிக முக்கிய காரணமாக அமைந்தது.

Delimitation DMK Stalin

இதனால் திமுகவின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி நாடு தழுவிய அளவில் எழுந்தது. பாஜகவுக்கு திமுக ஆதரவு அளிக்கப் போவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் சோஷியல் மீடியாவில் பதிவிட தொடங்கினர். இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், தொகுதி மறுவரையரை விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.

அதில் ஸ்டாலின், தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்தியாவிலேயே முதன் முதலில் குரல் எழுப்பியது தி.மு.க.தான்!
நியாயமான மறுவரையறை என்ற கோரிக்கையுடன் அகில இந்தியத் தலைவர்களை ஒன்றிணைத்து முதன் முதலில் கூட்டம் நடத்தப்பட்டதும், சென்னையில்தான்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படியும், நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களின்படியும், நாம் முன்வைத்த உறுதியான கோரிக்கைகள் இரண்டு. அவை, நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும், தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18%-ல் இருந்து குறையக் கூடாது!

1971 மக்கள்தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது ஆகியவை தான். எடுத்த இந்த இரண்டு நிலைப்பாட்டிலும் திமுக இன்றும் என்றும் உறுதியாக இருக்கிறது.

இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது. பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும். தமிழ்நாட்டின் நலனைக் கழகம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. கொண்ட கொள்கையில் இருந்து தடம் மாறாது என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+