மேகதாதுவிலேயே மெத்தனம்? கர்நாடவுக்கு எதிரான வழக்கில் ஆஜராகாத தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர்!
டெல்லி: இன்றைய தினம் மேகதாது அணை கட்டுமானத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வழக்கறிஞர் ஆஜராக முடியாததால் விசாரணையை வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு நீதிபதிகள் கடும் ஆதிருப்தி தெரிவித்தனர்.
கர்நாடகாவில் காவிரிக்கு குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட அம்மாநில அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. அதிலும் குறிப்பாக டிகே சிவக்குமார் முதல்வராக பதவியேற்ற பிறகு மேகதாது அணை விவகாரத்தை அவர் மிக தீவிரமாக கையில் எடுத்துள்ளார். மேகதாதுவில் அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது என்றே அவர் தொடர்ந்து கூறி வருகிறார்.

இருப்பினும், மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு வரும் காவிரி நீர் பாதிக்கப்படும் என்றும் இதனால் டெல்டா விவசாயிகள் மிக பெரிய சிக்கலை சந்திப்பார்கள் என்பதால் தமிழ்நாடு அரசு இதை எதிர்த்து வருகிறது. இந்தச் சூழலில் தான் உச்ச நீதிமன்றத்திலும் இது தொடர்பாக தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது.
மேகதாது அணை கட்டுமானத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை கேட்டு, உச்ச நீதிமன்றம் அதிருப்தி அடைந்தது. அதாவது மூத்த வழக்கறிஞர் ஆஜராக முடியாததால் விசாரணையை வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மூத்த வழக்கறிஞர் வர இயலாத காரணத்தால் விசாரணையை மற்றொரு நாளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதை கேட்ட நீதிபதிகள், இதே கோரிக்கையை தான் கடந்த விசாரணையின்போதும் தமிழக அரசு தரப்பில் முன்வைத்ததாக குறிப்பிட்டனர். தொடர்ந்து வழக்கை ஒத்திவைக்க கோருவது ஏன் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் கருத்து தெரிவித்தனர். மேலும், இதுபோன்ற மனுக்கள் மற்றும் தொடர்ந்து ஒத்திவைப்பு கோரிக்கைகள் உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதாகவும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
நீதிபதியின் இந்த கருத்துகள் இணையத்தில் பரவி வரும் நிலையில், நெட்டிசன்களும் இது குறித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். மேகதாது என்பது தமிழக மக்கள், குறிப்பாக டெல்டா விவசாயிகளுக்கு உயிர்நாடி பிரச்சினையாகும். அதிலேயே விஜய்யின் தவெக அரசு மெத்தனம் காட்டுவதாக விமர்சித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
