திரிஷா பேரவை தொடங்கியது ஏன்? சாமி சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ராஜகோபால் சொன்ன பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: திரிஷா அரசியலுக்கு வரப்போகிறாரா? என்ற பேச்சு ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க, அவருடைய பெயரில் நற்பணி இயக்கம் தொடங்கி இருப்பது இன்னொரு பக்கம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. திருநெல்வேலி தச்சநல்லூரை சேர்ந்த தொழிலதிபர் ராஜகோபால், "இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை" என்ற பெயரில் இயக்கம் தொடங்கி இருக்கிறார். திரிஷாவின் பெயரை வைத்து அரசியல் கட்சி தொடங்கி விட்டார்களா? என்று பலரும் கேட்கும் நிலையில், இது ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக தொடங்கப்பட்ட நற்பணி இயக்கம் என அதன் நிறுவனர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

சாமி சூட்டிங் ஸ்பாட் சம்பவம்

ஆனால் திரிஷாவை ஏன் தேர்வு செய்தார் அவரை எப்போது முதல் முதலாக பிடிக்கத் தொடங்கியது என்ற கேள்விகளுக்கு அவரே ஒரு பேட்டியில் இதன் பின்னணி தகவல்களை சொல்லி இருக்கிறார். அதாவது சமீபத்தில் ஒரு பேட்டியில் ராஜகோபால் பேசுகையில், "எனக்கு திரிஷா நடிச்ச படங்களிலேயே ரொம்ப பிடிச்சது சாமி படம் தான். அந்த படத்தின் சூட்டிங் திருநெல்வேலியில் நடந்த போது தான் முதன் முதலில் திரிஷாவை நேரில் பார்த்தேன். அப்போது எனக்கு அவர் மீது ஒரு தனி அபிப்பிராயம் ஏற்பட்டுவிட்டது.

அந்த படத்தில் மிளகாய் பொடி காட்சிக்கு பிறகு விக்ரம் கல்லூரியில் திரிஷாவை ரொம்ப பாராட்டி பேசுவாருல்ல அந்த படப்பிடிப்பு நடந்த போதுதான் நான் திரிஷாவை தூரத்தில் இருந்து பார்த்தேன். அப்பவே எனக்கு அவரை ரொம்ப பிடிச்சு போச்சு. அதுக்கப்புறம் அவருடைய நிறைய படங்களை பார்த்திருக்கிறேன். அவருடைய அமைதி, அவருடைய ஆளுமை எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் " என்று கூறியிருக்கிறார்.

Trisha Rajagopal Trisha Peravai Saamy Tamil Cinema

தூரத்திலிருந்து ரசிப்பு

அவருடைய ஆளுமையை தொடர்ந்து கவனித்து வருவதாக கூறும் ராஜகோபால் அதனால் தான் அவருடைய பெயரில் நற்பணித்தை இயக்கம் தொடங்க வேண்டும் என்று எண்ணம் வந்ததாகவும் சொல்லியிருக்கிறார். இந்த பேரவை மூலமாக ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்வது, இலவச சட்ட உதவிகளை வழங்குவது போன்ற பணிகளை செய்ய திட்டமிட்டு இருக்கிறாராம். இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த பேரவை தொடங்குவதற்கு திரிஷாவிடம் நேரடியாக அனுமதி பெறவில்லை என்பதையும் ராஜகோபால் சொல்லி இருக்கிறார்.

திரிஷாவின் பிஆரை சந்தித்து அனுமதி பெற முயற்சி செய்தோம். அது முடியாததால் தாங்களாகவே பேரவை தொடங்கி விட்டதாகவும் கூறியிருக்கிறார். தொடர்ந்து திருஷாவை நேரில் சந்திக்க முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். அதே நேரத்தில் திரிஷாவுக்கு இந்த பேரவை பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வீங்க என்ற கேள்விக்கு அவர் பதில் சொல்லி இருக்கிறார். "திரிஷாவுக்கு இது பிடிக்கலன்னா அவருடைய பெயரை பயன்படுத்தாமல் நாங்க நற்பணி செய்ய வேண்டியதை தொடர்ந்து செய்வோம்" என்று கூறி இருக்கிறார்.

லோகோ கலர் காரணம்

இதன் மூலம் திரிஷா பெயரில் இயக்கம் தொடங்கி இருந்தாலும் அவருடைய விருப்பம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டோம் என்ற நிலைப்பாட்டை உணர்த்தி இருக்கிறார். அதுபோல பேரவையில் லோகோவில் பச்சை நிறம் இருப்பது குறித்து பல கேள்விகள் எழுந்த நிலையில் அதற்கும் விளக்கம் கொடுத்திருக்கிறார். அந்த நிறத்தை எந்த அரசியல் கட்சியையும் குறிக்கும் வகையில் தேர்வு செய்யவில்லை என்றும், தனது மனதில் தோன்றிய நிறம் என்பதால் பச்சையை வைத்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

பேரவை தொடங்கிய மறுநாள் மகா தீபம் என்பதால் தீபத்தின் ஒளியை போல திரிஷாவும் அரசியலில் ஒளி விட்டு வளர வேண்டும் என்ற நோக்கத்தில் அதை நான் தேர்வு செய்தேன் என அவர் பேசி இருக்கிறார். திரிஷா அரசியலுக்கு வருவாரா? இந்த பேரவையை ஏற்றுக்கொள்வாரா? என்ற கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. ஆனால் ஒரு நடிகையை சாமி படத்தில் சூட்டிங் ஸ்பாட்டில் பார்த்து ரசித்து வந்த ஒருவர் இப்போது அவருடைய பெயரில் மக்களுக்கு உதவ இயக்கத்தை தொடங்கி இருப்பது வித்தியாசமான பின்னணியாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+