தமிழகத்தில் புதிய எக்ஸ்பிரஸ் சாலைகள் இனி வராதா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடன் சுமை மற்றும் தாமதங்களைக் காரணம் காட்டி, தமிழகத்தில் மத்திய அரசு எந்தவொரு விரைவுச்சாலையையும் முன்னெடுக்க வாய்ப்பில்லை என்ற அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் முன்மொழியப்பட்ட சிங்கப்பெருமாள் கோவில் - மதுரை பசுமைவழிச் சாலை மற்றும் தமிழக அரசால் முன்மொழியப்பட்ட திட்டங்கள் உட்பட, மற்றவை செயல்பாட்டிற்கு வர வாய்ப்பில்லை என்றும், அதற்குப் பதிலாக, ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை விரிவாக்கி போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஏன் இப்படியான கவலைக்குரியை முடிவினை மத்திய அரசு எடுத்தது என்பது பெரிய அளவில் விவாதத்திற்கு உரிய விஷயமாக மாறி உள்ளது. தமிழகத்திற்கு சென்னை சேலம எட்டுவழிச்சாலை உள்பட எந்த ஒரு சாலை திட்டத்தை அறிவித்தாலும் எதிர்ப்புகள் வருவதாகவும் , திட்டங்கள் தொடர்ந்து தாமதம் ஏற்படுவதாகவும் மத்திய அரசு நினைக்கிறதாம். இதனால் தமிழகத்தில் புதிய விரைவுச் சாலைகளுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்காது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tamil Nadu Madurai Singaperumal Koil

சொந்த நிதியில் செயல்படுத்த வேண்டும்

குறிப்பாக சென்னை, கோவை, தூத்துக்குடி ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் தமிழக அரசு முன்மொழிந்துள்ள தொழில் வழித்தடத் திட்டங்களுக்கும் மத்திய அரசு ஆதரவு அளிக்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள. இந்தத் திட்டங்களை மாநில அரசே தனது சொந்த நிதியில் செயல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆதவ் அர்ஜுனா நிதின் கட்காரி உடன் சந்திப்பு

இது தொடர்பாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ள செய்திகளின் படி, கடந்த நவம்பர் 17ஆம் தேதி டெல்லியில் தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்துப் பேசியபோது புதிய திட்டங்களுக்கு மத்திய அரசு ஆதரவு இல்லை என்று கூறியதாகவும், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள சாலைகளை விரிவாக்கம் செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிங்கப்பெருமாள் கோவில் - மதுரை பசுமைவழிச் சாலை திட்டம் என்னவாகும்?

இந்த திட்டம் காரணமாக செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து மதுரை வரை புதிய பசுமைவழி விரைவுச் சாலை (Greenfield Expressway) அமைக்கும் திட்டத்துக்கும் உடனடியாக ஒப்புதல் கிடைக்க வாய்ப்பில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. எனினும் இந்தத் திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தயாரித்து வருகிறது.

கன்னியாகுமரி சென்னை சாலை

ஆனால், புதிய சாலையை அமைப்பதற்குப் பதிலாக, ஏற்கெனவே உள்ள செங்கல்பட்டு - மதுரை ஜிஎஸ்டி சாலையை 8 வழிச்சாலையாக விரிவாக்கவும், மதுரை - கன்னியாகுமரி இடையிலான சாலையை 6 வழிச்சாலையாக மாற்றவும் மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்களில் சொல்கிறார்கள்.
இதன் மூலம் புதிய பசுமைவழிச் சாலையை அமைப்பதற்குப் பதிலாக, தற்போதுள்ள நெடுஞ்சாலைகளின் அகலத்தை அதிகரித்து போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறதாம்


ஏன் இந்த முடிவு

மத்திய அரசின் இந்த முடிவுக்குப் பின்னால் பல்வேறு காரணங்கள் இருப்பதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறுகிறார்கள். ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வரும் சாலைத் திட்டங்களுக்காக வங்கிகளில் அதிக அளவில் கடன் பெறப்பட்டுள்ளது. அதேபோல், முக்கிய சாலைத் திட்டங்களின் பணிகளிலும் தாமதம் நீடித்து வருகிறதாம். குறிப்பாக, சென்னை - பெங்களூரு விரைவுச் சாலை மற்றும் விக்கிரவாண்டி - தஞ்சாவூர் நான்கு வழிச்சாலைப் பணிகள் எதிர்பார்த்த வேகத்தில் நடைபெறவில்லை. சாலை அமைப்பதற்குத் தேவையான மண்ணைச் சேகரிப்பதிலும் தொடர்ந்து சிக்கல்கள் ஏற்படுகிறதம். இதுபோன்ற நிதி மற்றும் நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டே, புதிய விரைவுச் சாலைத் திட்டங்களுக்குப் பதிலாக ஏற்கெனவே உள்ள சாலைகளை மேம்படுத்த மத்திய அரசு விரும்புவதாக சொல்கிறார்கள்.

கைவிடப்பட்ட சென்னை - சேலம் விரைவுச் சாலை

தமிழகத்தின் முதல் புதிய பசுமைவழி நெடுஞ்சாலைத் திட்டமாக சென்னை - சேலம் விரைவுச் சாலை முன்மொழியப்பட்டது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்கள் வழியாக சேலத்திற்கு சுமார் 277 கி.மீ. தொலைவுக்கு ரூ.10,000 கோடி மதிப்பீட்டில் இந்தச் சாலையை அமைக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 2018ஆம் ஆண்டு திட்டமிட்டது. ஆனால், நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு என்று கடுமையான எதிர்ப்பினை அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் முன்னெடுத்ததால் திட்டமே கைவிடப்பட்டது.

சென்னையின் நுழைவு வாயிலில் நெரிசல்

எனினும் ஆறுதலான விஷயம் என்னவென்றால், சென்னையைச் சுற்றியுள்ள 5 முக்கிய நுழைவுப் பகுதிகளில் நெரிசலைக் குறைக்க மத்திய அரசு திட்டங்களை முன் வைத்துள்ளது. கடந்த நவம்பர் 17ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், சென்னையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளின் முக்கியமான 5 நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவுறுத்தினாராம்.

நிதின் கட்காரி அறிவுறுத்தல்

இதற்காக, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தமிழக நெடுஞ்சாலைத்துறையுடன் இணைந்து செயல்பட்டு, தேவையான திட்டங்களைத் தயாரிக்க வேண்டும் என்றும் நிதின் கட்காரி வலியுறுத்தியுள்ளாராம. தற்போது தமிழகத்தில் புதிய விரைவுச் சாலைகள் அமைப்பதற்கான திட்டங்கள் தாமதமாகும் சூழல் உருவாகும் என்கிற நிலையில் ஏற்கெனவே உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை விரிவாக்கும் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவே வாய்ப்பு உள்ளதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் சொல்கின்றன. இது உண்மையிலேயே கவலைக்குரிய விஷயம் தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+