தர்ஹாவே இல்லை.. மதுரை ரயில் நிலைய உச்சியில் ஒரு போதும் தீபம் ஏற்ற மாட்டீங்க.. வெங்கடேசன்

Subscribe to Oneindia Tamil

மதுரை: "புனரமைக்கப்படும் மதுரை ரயில் நிலையத்தின் உச்சியில் தீபம் ஏற்றப்படும்" என்று ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியுள்ளார். அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, நீங்களோ, உங்களின் கூட்டமோ ஒருபோதும் ரயில் நிலையத்தின் உச்சியில் தீபமேற்ற முயற்சிக்க மாட்டீர்கள்; ஏனென்றால் மதுரை ரயில் நிலைய வளாகத்தில் எந்த தர்ஹாவும் இல்லை" என்று மதுரை லோக்சபா தொகுதி எம்பி வெங்கடேசன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று பாஜக சார்பில் நடைபெற்ற அரசியலமைப்பு தின நிகழ்ச்சியில் கொண்டார். அப்போது தீபம் ஏற்றுவதற்கு விதிக்கப்படும் தடைகளை எதிர்த்துக் கேள்வி எழுப்பினார். இதுபோன்ற தடைகளைத் தட்டிக்கேட்காமல் விட்டால், எதிர்காலத்தில் மக்கள் கோயில்களுக்குச் செல்லக்கூட தடை விதிக்கப்படுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Madurai MP Venkatesan Hits Back at Ashwini Vaishnaw Over Lamp-Lighting Remark at Railway Station

அஸ்வினி வைஷ்ணவ் மேலும் கூறும் போது, "ஒரு தீபத்தை ஏற்றுவதைத் தடுத்ததன் மூலம், கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை நீங்கள் புண்படுத்தி, சிதைத்து, பாதித்துள்ளீர்கள். இன்று ஒரு தீபத்தை ஏற்றுவதைத் தடுத்துள்ளீர்கள். நாளை யாரும் கோயிலுக்குச் செல்லக்கூடாது என்று சொல்வீர்களா? இதைத்தானா நமது அரசியலமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியுள்ளது?

நமது அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொருவருக்கும் தங்களது மதத்தைப் பின்பற்றும் உரிமையை வழங்கியுள்ளது. காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் நாளை ஒரு மேடையில் நின்று, தான் அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், மதச் சுதந்திரத்தின் மீதான உரிமையின் மீதும் நம்பிக்கை கொண்டிருப்பதாகச் சொல்ல முடியுமா? அவரால் முடியாது.

அவரது தலைவரைப் போலவே, அரசியலமைப்புச் சட்டத்தைத் தனது சட்டைப் பையில் வைத்துக்கொள்ளவே அவர் விரும்புகிறார். அரசியலமைப்புச் சட்டத்தைப் பின்பற்றும் எண்ணம் அவர்களுக்கு இல்லை." என்று கூறினார்.

ரயில்வே அமைச்சர் பேசியது என்ன

அதேபோல் புனரமைக்கப்படும் மதுரை ரயில் நிலையத்தின் உச்சியில் தீபம் ஏற்றப்படும் என்று நேரடியாக ரயில்வே அமைச்சர் அஸ்விணி கூறவில்லை.. எனினும் நேற்று மேடையில் அவர், புனரமைக்கப்படும் மதுரை ரயில் நிலையத்தின் வடிவமைப்பைக் காட்டினார், அதன் முகப்பு மீனாட்சி அம்மன் கோயில் கோபுரத்தைப் போன்ற அமைப்பில் இருப்பதைச் சுட்டிக்காட்டினார். பின்னர், "ரயில் நிலையத்திலேயே ஒரு தீபம் போன்ற அமைப்பு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்" என்கிற தொணியில் தான் பேசினார். மேலும், அந்த நம்பிக்கையின் அடையாளத்தை ரயில் நிலையத்தில் அமைப்பதற்கு முதலமைச்சரும் காங்கிரஸும் தடுக்க முடியுமா என்றும் ரயில்வே அமைச்சர் கேள்வி எழுப்பினார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+