2 தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல்.. நீதிமன்ற தீர்ப்பால் மீண்டும் தவெகவுக்கு சாதகம்.. எப்படி?
சென்னை: அம்பாசமுத்திரம், பெருந்துறை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடையை நீக்கி சென்னை உயர்நீதுமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதேபோல் விராலிமலை, கரூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளுக்கு வழக்கு முடியும் வரை இடைத்தேர்தல் தடை நீடிக்கிறது. இதனால் அடுத்தக் கட்டமாக பெருந்த்றை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 2 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக் கூடும் என்று கருதப்படுகிறது.
ஏற்கனவே மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டிருந்தது. அந்த தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றது. தற்போது மீண்டும் 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்று பார்க்கப்படுகிறது. இந்த அணுகுமுறை காரணமாக தவெகவுக்கு இடைத்தேர்தல் களத்தில் சாதகம் அதிகரித்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்தும் போது, தவெக சார்பாக பணிகள் பிரித்து கொடுக்கப்படும். தேர்தல் களத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்ற பெரிய அனுபவம் தவெகவிடம் இல்லை. தவெகவின் நட்சத்திர பேச்சாளராகவும், ஒரே முகமாகவும் விஜய் மட்டுமே இருக்கிறார். முழுக்க முழுக்க விஜய்யை மட்டுமே நம்பி தவெக தேர்தல் களத்தை சந்திக்கும்.
விராலிமலை, கரூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தால், அங்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் வலிமையான வேட்பாளர்கள் களமிறங்கப்படக் கூடும். அதிலும் விராலிமலை விஜயபாஸ்கர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், கரூர் தொகுதியில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை திமுக மற்றும் அதிமுக கையில் எடுக்கும்.
அதற்கு தவெக என்ன பதில் சொல்லும் என்று அனைவரின் கவனமும் திரும்பும். ஒவ்வொரு தொகுதிக்கும் விஜய் பிரச்சாரம் செய்தாலும், கட்டமைப்பு ரீதியாக திமுக மற்றும் அதிமுக கடுமையான போட்டியை கொடுக்கும். ஆனால் 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டால், தவெகவின் ஒட்டுமொத்த அமைச்சர்களும் இரு தொகுதிகளிலும் முகாமிடுவார்கள்.
அதேபோல் விஜய்யின் பேச்சும் கவனம் பெறும். இதனால் மீண்டும் இடைத்தேர்தல் களத்தில் தவெகவின் கை ஓங்கி இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 2 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டதால், திமுக, அதிமுக மற்றும் நாதக ஆகிய கட்சிகளால் இனி வேட்பாளரை அறிவித்து சமாளிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications
