புஷ்பா வசூலை பின்னுக்கு தள்ளிய ராமாயணா.. 21 நாளில் இத்தனை கோடி! ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?
சென்னை: அல்லு அர்ஜுனாவின் புஷ்பா 2 படத்தை வசூலில் முந்துவது சாதாரண விஷம் கிடையாது என்ற ஒரு மாயை சினிமா வட்டாரத்தில் இருந்தது. ஆனால் இந்திய சினிமாவில் மிகப்பெரிய வசூல் சாதனைகளில் ஒன்றாக இருந்த படத்தை இன்னொரு படம் வந்து பின்னுக்கு தள்ளி இருக்கிறது என்றால் ரசிகர்கள் மத்தியில் பேசப்படாமல் இருக்குமா? இப்போ ராமாயணம் திரைப்படம் அந்த சாதனையை செய்திருக்கிறது.

ராமாயணா அப்டேட்
நிதேஷ் திவாரி இயக்கத்தில் மிகப்பிரமாண்டமான உருவான இராமாயணா திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 5ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. ரன்பீர் கபூர் ராமராகவும், சாய்பல்லவி சீதையாகவும், யஷ் இராவணனாகவும் நடித்திருக்கிறார்கள். அனுமன் கதாபாத்திரத்தில் சன்னி தியோல் நடித்திருப்பதும் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ஏஆர் ரகுமான் மற்றும் ஹான்ஸ் ஜிம்பர் இணைந்து இசை அமைத்திருப்பதால் படத்தின் இசையும் ரசிகர்களிடம் கவனம் பெற்றது. 2 பாகங்களாக உருவாகன இந்த ராமாயண படத்தின் முதல் பாகம் தற்போது தியேட்டரில் நல்ல வசூலை குவித்து வருகிறது. வெளியான சில நாட்களிலேயே பெரிய வசூலை பெற்ற இந்த படம் தொடர்ந்து 3வது வாரங்களாக தியேட்டரில் ஓடி பல சாதனைகளை செய்து வருகிறது.
ராமாயணா வசூல் நிலவரம்
21 நாட்கள் முடிவில் உலகம் முழுவதும் 1755.60 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மட்டும் 982.55 கோடி நெட் வசூலை எட்டி இருக்கிறது. வெளிநாட்டு வசூல் 582 கோடி என கூறப்படுகிறது. இதன் மூலம் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 படத்தின் உலகளாவிய வாழ்நாள் வசூலான 1742.10 கோடியை ராமாயணா தாண்டி இருக்கிறது.

ராமாயணா ஓடிடி அப்டேட்
இப்போது இந்திய சினிமாவில் உலக அளவில் அதிக வசூல் செய்த படங்கள் பட்டியலில் 4வது இடத்திற்கு ராமாயணா முன்னேறி உள்ளது. இன்னொரு பக்கம் படத்தை தியேட்டரில் பார்க்க முடியாதவர்கள் எப்போது ஓடிடியில் வரும் என்று கேட்டு வருகின்றனர். ராமாயணா படத்தின் டிஜிட்டல் வெளியீட்டு உரிமை ஜியோ ஹாட்ஸ்டார் உடன் இணைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் வழக்கமான சந்தா மூலம் இலவசமாக பார்க்க முடியாது. பே பர் வியூ முறையில் தனியாக பணம் செலுத்தி பார்க்கும் வகையில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஜியோ ஹாட்ஸ்டார் சந்தா வைத்திருந்தாலும் இந்த படத்தை பார்க்க தனியாக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கலாம். ஆனால் ஓடிடி ரிலீஸ் தேதி இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. திரையரங்குகளில் படத்தின் வசூல் இன்னும் ஸ்ட்ராங்காகவே இருப்பதால் டிஜிட்டல் ரிலீஸ் எப்போது இருக்கும் என்ற தகவல்களுக்காக ரசிகர்கள் காத்திருக்க வேண்டியதுதான். டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி மாதத்தில் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்புகள் இருக்கிறது.


Click it and Unblock the Notifications
