திமுகவின் கோரிக்கையை பரிசீலிக்கும் பாஜக! தொகுதி மறுவரையில் DMK நிலைப்பாடு என்ன?
சென்னை: மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இல்லாமல், தமிழ்நாட்டிற்கு இப்போது இருக்கும் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் வகையில் தொகுதி மறுவரையறையை செய்ய வேண்டும் என்பது திமுகவின் நிலைப்பாடு. இதை பாஜக பரிசீலித்து வருகிறது. இந்நிலையில், இந்த மசோதாவுக்கு திமுக ஆதரவா? எதிர்ப்பா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
இன்று மதியம் 1 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில், தொகுதி மறுவரையறை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. குறிப்பாக அனைத்து மாநிலங்களிலும் சீராக 50% அளவுக்கு தொகுதிகளை உயர்த்த இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆரம்பத்திலிருந்து திமுக எதிர்ப்பாகத்தான் இருக்கிறது. காரணம் மக்கள் தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் மறுவரையறை செய்யப்படுகிறது என்பதால்தான். மக்களவையில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 7.2% ஆகும். இந்த பங்களிப்பு குறையாமல்.. தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் மசோதாவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக யோசிக்கலாம் என்கிற நிலைப்பாட்டில் திமுக இருக்கிறது.
அதாவது தொகுதி மறுவரையறைக்கு பிறகு.. தமிழ்நாட்டின் பங்களிப்பு 7.2%க்கு கீழ் குறையாமல் இருப்பதாக எழுத்துப்பூர்வமான உத்தரவாதம் மசோதாவில் இடம்பெற்றால் மட்டுமே ஆதரவு.
மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசுக்கு மக்களவையில் 3ல் 2 பங்கு பெரும்பான்மை கிடைக்க வேண்டும். 543 உறுப்பினர்களை கொண்ட மக்களவையில் 3 இடங்கள் காலியாக இருப்பதால், தற்போது 540 எம்பிக்கள் உள்ளனர். குறைந்தது 361 எம்பிக்கள் இருந்தால் மட்டுமே மசோதா நிறைவேறும். பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு தற்போது 346 எம்பிக்கள் மட்டுமே ஆதரவாக இருக்கின்றன. இன்னும் 15 எம்பிக்களின் ஆதரவு தேவை. திமுகவிடம் 22 எம்பிக்கள் இருக்கின்றனர்.
எனவே திமுகவின் ஆதரவை பெற.. அக்கட்சி வைத்த முக்கிய கோரிக்கையான 7.2% பங்களிப்பு குறையக்கூடாது என்கிற டிமாண்டை பாஜக ஏற்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. அதில், தொகுதி மறுவரையறை செய்யும் பணியை மக்கள் தொகை கணக்கெடுப்பிலிருந்து பிரித்து.. அனைத்து மாநிலங்களிலும் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையை ஒரே சீராக 50% அதிகரிக்க முடிவெடுக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. கூட்டம் முடிந்த பின்னர் இது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்.
அப்படி திமுகவின் நிபந்தனைகளை பாஜக ஏற்கிறது எனில்.. திமுக இந்த விஷயத்தில் என்ன நிலைப்பாடு எடுக்கும்? என்பது கேள்வியாக இருக்கிறது. தொகுதி மறுவரையறை விஷயத்தில் திமுக தனது நிலைப்பாட்டை உறுதியாக தெரிவிக்க வேண்டும் என்று சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.


Click it and Unblock the Notifications
