அரசியல் பேச்சுக்கு நடுவே திரிஷா போட்ட 2 ஸ்டோரிகள்.. இது யாருக்கு பதிலடி? கருத்து பலமாக இருக்கு!
சென்னை: நடிகை திரிஷா அரசியலுக்கு வரப்போகிறாரா? என்ற கேள்வி தான் கடந்த சில நாட்களாகவே தமிழ் சினிமா வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் திரிஷா பெயரில் திருநெல்வேலியில் தொடங்கப்பட்ட "இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை" என்ற பெயரில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டிருப்பது பலருடைய கவனத்தை விட்டது. இந்த நிலையில் திரிஷா இப்போ இரண்டு ஸ்டோரிகள் பதிவிட்டு இருப்பதும் கவனம் பெற்று வருகிறது.
இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை என்ற பெயரே அரசியல் விவாதத்திற்கு முக்கிய காரணமாக மாறி இருக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட புரட்சித்தலைவி என்ற பட்டத்துடன் தொடர்புபடுத்தி திரிஷாவுக்கு இளைய புரட்சித்தலைவி என்ற பட்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யுடன் இணைந்து திரிஷா அரசியலில் செயல்பட்டால் மக்களுக்கு நல்லது நடக்கும் என்ற விருப்பத்தையும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால் சொல்லி இருக்கிறார்.
அரசியல் சர்ச்சைகள்
ஆனால் இதுதான் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது, இந்த அமைப்பு த்ரிஷாவின் அனுமதியோடு தொடங்கப்பட்டதா? என்ற கேள்விக்கு அவரிடம் முன்கூட்டியே அனுமதி பெறவில்லை என்று அதன் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்திருக்கிறார். மேலும் இது பொதுமக்களுக்காக நலத்திட்டங்களை செய்யும் அமைப்பு என்றும் சொல்லி இருக்கிறார். அதனால் திரிஷா அனுமதி இல்லாமலேயே இந்த அமைப்பு தொடங்கப்பட்டிருக்கிறதா? அப்படி என்றால் திரிஷா இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்ற கேள்வி சில நாட்களாகவே எழுந்து வரும் நிலையில் திரிஷா இதுகுறித்து எந்த கருத்தையுமே தெரிவிக்காமலேயே இருந்து வருகிறார்.

திரிஷா இன்ஸ்டா ஸ்டோரி
இந்த சூழலில் தான் தற்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் 2 புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். முதலில், ஒரு பிரம்மாண்டமான கோயில் கோபுரத்தின் முன்பு இளஞ்சிவப்பு நிற உடையில் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். அதில் Divine என்று குறிப்பிட்டு இருக்கிறார். அதாவது தெய்வீக உணர்வு என்பதை வெளிப்படுத்தும் வகையில் அந்த பதிவை பகிர்ந்து இருக்கிறார்.

இரண்டாவது போஸ்ட்
அடுத்ததாக, மரத்தின் மீது அமர்ந்திருக்கும் குரங்குகளின் புகைப்படத்தை பகிர்ந்து "let's never comepare monkeys to people" அதாவது, குரங்குகளை மனிதர்களுடன் எப்போதும் தொடர்பு படுத்த வேண்டாம் என்பதுபோல சொல்லி இருக்கிறார். மனிதர்கள் தான் குரங்குகளை விட வேகமாக தாவுபவர்கள் என்பது போல அதற்கு பேக்ரவுண்ட் மியூசிக் வைத்திருக்கிறார். இப்போது இந்த இரண்டு ஸ்டோரிகளும் ரசிகர்களின் கவனத்தைப் பெற்று இருக்கின்றன.
ஏற்கனவே சமீபத்தில் நடந்த அனிருத் திருமணத்தில் முதல்வர் விஜய் தனியாக கலந்து கொண்டார். அப்போதே அது குறித்து பல செய்திகள் வைரல் ஆனது. ஏற்கனவே சமீப காலமாக முதல்வர் விஜய் எந்த பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போதும் அவருடைய தோழியாக திரிஷாவும் அவர் கூடவே கலந்து கொள்கிறார். அதனால் அனிருத் திருமண பங்க்ஷனுக்கு விஜய் திரிஷாவுடன் தான் வருவாரா? என்ற கேள்விகளும் எழுந்து வந்தது. ஆனால் அவர் தனியாக வந்ததால் தான் இப்போ திரிஷா இதுபோன்ற பதிவுகளை வெளியிடுகிறாரா என்றும் சில நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு
ஏற்கனவே முதல்வர் விஜய் தனியாக கல்யாண வீட்டிற்கு போயிட்டு வந்ததால் தான் திரிஷா கட்சி ஆரம்பித்து விட்டார் என்பது போல கூட ப்ளூ சட்டை மாறன் உட்பட சிலர் கலாய்த்து இருந்தார்கள். இப்போது குரங்கு போஸ்ட் திரிஷா போட்டதும் வழக்கம் போல பலர் தங்களுடைய கற்பனையை எல்லாம் கமெண்ட்களில் கொட்டுகிறார்கள். ஆனால் திரிஷா உண்மையில் எதை நினைத்து இந்த போஸ்ட் போட்டார் என்பது அவருக்கு தான் தெரியும். தன்னைப் பற்றி பரவி வரும் சர்ச்சைகளுக்கும், அரசியல் பேச்சுகளுக்கும் திரிஷா விளக்கம் கொடுக்க வேண்டும் என்பது அவருடைய ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.



Click it and Unblock the Notifications
