சாய் பல்லவியா இது? அடையாளம் தெரியாமல் மாற்றி இருக்கிறாரே மணிரத்தினம்! ட்ரோலாகும் "ஆச்சி ஆச்சி” பாட்டு
சென்னை: சாய்பல்லவி நடிப்புக்கு சமீபத்தில் ரசிகர்கள் கொடுத்த பாராட்டுக்கும், இப்போது மணிரத்தினம் படத்தின் முதல் பாடல் வெளியானதும் அவரது லுக்கை வைத்து வரும் கமெண்ட்ஸுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்கிறது.
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஓம் படத்தில் சாய் பல்லவியின் கேரக்டர் ரசிகர்களாக கொண்டாடப்பட்டது. ஒரு ஹீரோவுக்கு இணையான முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்து தனது நடிப்பால் கவனம் ஈர்த்தார். ஆனால் இப்போது மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இஞ்சி வெல்லம் படத்தின் "ஆச்சி ஆச்சி" பாடல் வெளியாகி இருக்கும் நிலையில் சாய்பல்லவியை புதிய தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.

இஞ்சி வெல்லம் படம்
ஓம் படத்தில் தனுஷ், மம்முட்டி என பெரிய ஜாம்பவான்கள் இருந்தாலும், அவர்கள் இருவரையும் தாண்டி ஸ்கோர் செய்தது சாய் பல்லவி தான். அந்த படத்தின் ஹீரோ சாய் பல்லவி தான் என்று படத்தை பார்த்த பலரும் கொண்டாடி வருகிறார்கள். இப்படி இருக்கையில் இப்போது மணிரத்தினத்தின் "இஞ்சி வெல்லம்" படத்தில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் சாய் பல்லவி வந்திருக்கிறார். அந்த படத்தில் முதல் பாடலான "ஆச்சி ஆச்சி" பாடல் இசை ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றாலும் சாய் பல்லவியின் பாப் கட்டிங் லுக்கு மட்டும் சிலருக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.
மணிரத்தினம் படங்களில் ஹீரோ ஹீரோயின் லுக் என்றாலே தனி எதிர்பார்ப்பு இருக்கும். ஒவ்வொரு கதாபாத்திரத்தின் காட்சிகளையும் அழகாக வடிவமைப்பதில் அவருக்கு ஒரு தனி ஸ்டைல் இருக்கிறது. அதனால் தான் சாய் பல்லவியை இப்படி ஒரு தோற்றத்தில் பார்த்ததும் ரசிகர்களுக்கு கேள்விகள் வர ஆரம்பித்து விட்டன. " மணி சார் சாய் பல்லவியை என்ன பண்ணி வச்சிருக்கீங்க" என்று சிலர் கமெண்ட் செய்கிறார்கள்.

ஆச்சி ஆச்சி பாட்டு
இன்னும் சிலர் அவரது இந்த தோற்றத்தை பார்த்து, " ஒய் ஜி மகேந்திரன் மகள் மதுவதியின் லுக்கை நினைவுபடுத்துவதாக" கலாய்த்து வருகிறார்கள். சாய் பல்லவி இயல்பான அழகையும், வழக்கமாக பார்க்கும் தோற்றத்தையும் ரசித்த ரசிகர்களுக்கு இந்த மாற்றம் கொஞ்சம் புதிதாக இருக்கிறது . ஆச்சி ஆச்சி பாடலில் சாய் பல்லவி கர்ப்பிணியாக பெரிய வயிற்றோடு டான்ஸ் ஆடுகிறார். லிரிக்கல் வீடியோவும் காட்டப்பட்டுள்ளது. அதனால் படத்தில் ஒரு குடும்பத்தின் வாழ்க்கை, காதல், குழந்தை பிறப்பு என பல காலகட்டங்களை மணிரத்தினம் காட்டப் போகிறாரா? என்று எதிர்பார்ப்பும் உருவாகி இருக்கிறது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
விஜய் சேதுபதியும் சாய்பல்லவியும் முதல் முறையாக இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏற்கனவே ஆர்வம் அதிகமாக தான் இருக்கிறது. ஏற்கனவே ஓம் படத்திற்காக தனது தலைமுடியை வெட்டிய சாய்பல்லவியை இன்னொரு ஸ்டைலில் காட்டுகிறேன் என்று மணிரத்தினம் முயற்சி செய்து இருக்கிறார். ஆனால் அந்த ஸ்டைல் இப்போது சோசியல் மீடியாவில் அதிகமாக கலாய்க்கப்பட்டு வருகிறது.
ஒரு கதாபாத்திரத்துக்காக நடிகர்கள் தங்களுடைய தோற்றத்தை மாற்றிக் கொள்வது இயல்பான விஷயம்தான். ஆனால் அந்த மாற்றம் மக்களுக்கு பிடித்ததா? இல்லையா? என்பது படம் வெளியாகும் வரை இப்படித்தான் சோசியல் மீடியாவில் விவாதமாக இருக்கும். ஜனவரி 29ஆம் தேதி படம் வெளியாக்கும்போது இந்த லுக் பற்றிய விமர்சனங்கள் எல்லாம் மாறுமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications
