30 வலிப்பு மாத்திரைகளிலும் உயிர் போகாத மகள்.. தலையணையால் மூச்சை அடைத்த ஈரான் பெற்றோர்! வெளியான ரீசன்

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: காதலித்ததால் கர்ப்பமான மகளை பெற்றோரே கொலை செய்த சம்பவம் ஈரானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 30 வலிப்பு நோய் மாத்திரைகளை கட்டாயப்படுத்தி தந்திருக்கிறார்கள்.. ஆனாலும் மகள் உயிரிழக்கவில்லை.. அதற்கு பிறகு மகளை என்ன செய்தார்கள் தெரியுமா? இதை பற்றின செய்திதான் சோஷியல் முடியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

ஈரானின் குர்திஸ்தான் மாகாணத்தில் உள்ள சனந்தாஜ் நகரை சேர்ந்த இளம்பெண் ஹெலியா ஃபத்தாஹி... இவருக்கு 19 வயதாகிறது.. அங்குள்ள இளைஞர் ஒருவருடன் ஹெலியா நெருங்கி பழகி வந்துள்ளார். இதனால் 2 மாத கர்ப்பமாகி விட்டார்.. இந்த விஷயத்தை கடந்த வாரம் தனது பெற்றோரிடம் சொல்லியிருக்கிறார்.

Iran Honour Killing Helia Fattahi Iran Women s Rights

30 வலிப்பு மாத்திரைகள்

இதைக் கேட்டதுமே பெற்றோர் கொந்தளித்து விட்டார்களாம்.. அவரது அப்பா வோரியா ஃபத்தாஹி, அம்மா லீலா வெயிஸ் 2 பேருமே, மகளை பயங்கரமாக திட்டியிருக்கிறார்கள்.. மகளின் காதலையும், கர்ப்பத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் அவரிடம் சண்டை போட்டுள்ளனர்.

இதையடுத்து நவம்பர் 21-ம் தேதி, பெற்றோர் இருவரும் கோர்ட்டுக்கு சென்று மகள் மீது புகார் தந்து விட்டார்கள்.. அத்துடன் வீட்டுக்கு திரும்பிய பெற்றோர், சுமார் 30 வலிப்பு நோய் மாத்திரைகளை ஹெலியாவை கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்துள்ளனர்.

ஆனால், இத்தனை மாத்திரைகளைச் சாப்பிட்டும் ஹெலியா உயிரிழக்கவில்லை. இதனால் பெற்றோர் மேலும் ஆத்திரமடைந்து விட்டனர்.. இதனால், மகளை கண்மூடித்தனமாக அடித்துள்ளனர்.. அப்போதும் ஆத்திரம் தீராமல் தலையணையால் முகத்தை அழுத்தி மூச்சை அடைத்துள்ளனர்.. இதில் ஹெங்கா மூச்சு திணறி திணறியே இறந்துவிட்டார்..

ஈரான் மகள் காதல்

இந்த கொலை குறித்து தகவலறிந்த போலீசார் விசாரணையை தொடங்கினர். இறுதியில் ஹெலியாவின் தந்தை வோரியா, தாய் லீலா ஆகிய இருவரையும் கைது செய்தனர். விசாரணையின்போது மகளை கொலை செய்ததை இருவருமே ஒப்புக் கொண்டார்கள்.

ஆனால், இந்த கொலை விவகாரம் ஈரானில் பெரும் அதிர்வலையை உண்டுபண்ணி உள்ளது.. காரணம், இந்த ஒரே வாரத்தில் மட்டும் 3 இளம்பெண்கள் கொல்லப்பட்டுள்ளார்களாம்.. ஏற்கனவே நவம்பர் 18-ம் தேதி கிலான் மாகாணத்தில் சதாப் ஹக்பின் (23) என்ற இளம்பெண் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த பெண்ணை அவரது முன்னாள் காதலர் திருமணம் செய்ய வற்புறுத்தினாராம்.. அதற்கு அப்பெண் மறுத்ததால், காதலனே சுட்டுக்கொன்று விட்டாராம்..

அதேபோல கெர்மன்ஷா பகுதியில் சோகந்த் சயாதி (16) என்ற பள்ளி மாணவி 5வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார். அவரை அப்பாவே, தன்னுடைய மகளை 5வது மாடியிலிருந்து தள்ளி விட்டாராம்..

ஈரான் சட்டத்தில் விலக்கு

ஈரானில், பெற்றோரே தங்கள் குழந்தைகளை கொலை செய்தால், அவர்களுக்கான தண்டனை தொடர்பாக அந்நாட்டின் சட்டத்தில் ஒரு முக்கியமான விலக்கு உள்ளது. அதாவது, தந்தை அல்லது தந்தை வழித் தாத்தா தனது குழந்தையை கொலை செய்தால், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படாது. அதேநேரத்தில், குற்றம் செய்ததற்காக எந்த தண்டனையும் கிடையாது என்று அர்த்தமில்லை. மற்ற சட்டப் பிரிவுகளின் கீழ் சிறை தண்டனை உள்ளிட்ட தண்டனைகள் விதிக்கப்படலாம்.

இந்த சட்ட விலக்கு காரணமாகத்தான் ஹெலியாவின் பெற்றோர் அவரை கொலை செய்தார்களா என்பது தெரியவில்லை. ஆனால், பெற்றோரே தங்கள் பிள்ளைகளை கொலை செய்யும் சம்பவங்களில் குற்றவாளிகளுக்குக் கிடைக்கும் தண்டனை என்ன என்ற கேள்வியை ஈரானின் சட்டம் மீண்டும் எழுப்பியுள்ளது.

மனித உரிமை ஆணையம்

இப்படி ஒரே வாரத்தில் 3 பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் ஈரானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கடந்த ஓராண்டில் மட்டும் ஈரானில் 159 பெண்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹெங்கா மனித உரிமை அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம் ஈரானில் ஆணவக் கொலைகள் தொடர்பான விவாதத்தையும் மீண்டும் எழுப்பியுள்ளது... குடும்பத்தின் விருப்பத்துக்கு மாறாக காதலிக்கும் பெண்கள், குடும்பத்தினராலேயே கொல்லப்படும் சம்பவங்கள் அங்கு தொடர்ந்து கவலையை ஏற்படுத்தி வருகின்றன..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+