உ.பி, பஞ்சாப்பில்.. தலித் வாக்காளர்களை கவர பாஜக புது பிளான்! 2,402 கி.மீ யாத்திரை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அடுத்த ஆண்டு உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், தலித் வாக்காளர்களை ஈர்ப்பதற்காக 2,402 கி.மீ யாத்திரையை பாஜக மேற்கொண்டு வருகிறது.

கடந்த மக்களவை தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு பலத்த அடி விழுந்தது. இப்படி இருக்கையில் எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் இந்த கணக்கை நேர் செய்ய தலித் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் பெற.. யாத்திரையை பாஜக நடத்தி வருகிறது.

BJP s Dalit Outreach

2,402 கி.மீ தூரத்திற்கு யாத்திரை

'சந்த் ரவிதாஸின்' 650வது பிறந்தநாளை முன்னிட்டு, பாரதிய ஜனதா கட்சி 'சமரஸ்தா சங்கல்ப் யாத்திரை' என்கிற பெயரில் யாத்திரையை நவ.18ம் தேதியன்று பஞ்சாப்பில் தொடங்கியது. மொத்தம் 16 நாட்கள் யாத்திரை நடத்தப்படும். பஞ்சாப், டெல்லி, உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் சண்டிகர் என 7 மாநிலங்கள் யூனியன் பிரதேசங்கள் வழியாக 2,402 கி.மீ தூரத்தை யாத்திரை நிறைவு செய்கிறது.

7 மாநிலங்களை கவர் செய்யும் யாத்திரை

47 நகரங்கள் வழியாக, 252 சட்டமன்ற தொகுதிகளை யாத்திரை கவர் செய்கிறது. இந்த 252 தொகுதிகளில் எதிர்க்கட்சிகள் 135 தொகுதிகளையும் பாஜக கூட்டணி 117 இடங்களையும் வென்றிருந்தன. இந்த 252 தொகுதிகளில் 56 தொகுதிகள் பட்டியலினத்தவருக்கான தனி தொகுதிகளாகும். இதில் கடந்த முறை பாஜக மற்றும் அப்னா தளம் இணைந்து 22 இடங்களை மட்டுமே வென்றிருந்தன. மீதமுள்ள 34 தொகுதிகளை எதிர்க்கட்சிகள்தான் கைப்பற்றியிருந்தன.

உ.பி மற்றும் பஞ்சாபுக்கு சிறப்பு கவனம்

யாத்திரையில் உத்தரப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் மீது சிறப்பு கவனத்தை பாஜக வைத்திருக்கிறது. காரணம் உத்தர பிரதேச மொத்த மக்கள் தொகையில் தலித் சமூகத்தினர் மட்டும் 21% பேர். மொத்தமுள்ள 403 சட்டமன்ற தொகுதிகளில் 84 தனித் தொகுதிகளாகும். உ.பியில் மட்டும் 820 கி.மீ தூரம் பயணித்து 20 தனித் தொகுதிகள் உட்பட 99 தொகுதிகளை இந்த யாத்திரை கவர் செய்கிறது.

தலித் வாக்காளர்களுக்கு முக்கியத்துவம்

பஞ்சாப்பை பொறுத்தவரை, இந்தியாவில் தலித் மக்கள் அதிகம் வசிக்கும் மாநிலம் இதுதான். பஞ்சாப் மாநில மக்கள் தொகையில் தலித் மக்கள் எண்ணிக்கை 32%. இங்குள்ள 117 தொகுதிகளில் 34 தனித் தொகுதிகள் இருக்கின்றன. எனவே பஞ்சாபில் 5 நாட்கள் 700 கி.மீ தூரத்திற்கு யாத்திரை செல்கிறது. யாத்திரையில் 79 தொகுதிகளை கவர் செய்து.. தோவாபா பகுதியில் அதிகம் வசிக்கும் 'ரவிதாசியா' சமூகத்தினரை குறிவைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது என இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் செய்தி வெளியாகியிருக்கிறது. பஞ்சாப் தேர்தலை பொறுத்தவரை அங்கு சிரோமணி அகாலி தளமும், பாஜகவும் நீண்ட காலத்திற்கு பின்னர் மீண்டும் கூட்டணி வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த சந்த் ரவிதாஸ்?

பாஜக, 'சந்த் ரவிதாஸ்' பெயரில் யாத்திரையை மேற்கொள்ள காரணம் இருக்கிறது. இவர் 15ம் நூற்றாண்டை சேர்ந்த புகழ்பெற்ற ஆன்மீக துறவி, கவிஞர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். உ.பியில் காலணி தைக்கும் தொழிலாளி குடும்பத்தில் பிறந்த இவர்.. சாதி, மத வேறுபாடுகளை கடுமையாக எதிர்த்திருக்கிறார். 'பிறப்பால் யாரும் உயர்ந்தவர் என்றோ.. தாழ்ந்தவர் என்றோ இல்லை! அவரவர் செயல்களே அவரவர்களை உயர்த்தும்' என்று கூறியிருக்கிறார்.

அதைவிட முக்கியமாக, இவரது பக்தி பாடல்கள் மற்றும் போதனைகள் வட இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமானவை. சீக்கியர்களின் புனித நூலான 'குரு கிரந்த் சாகிப்பில்' இவரது 41 பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. இவரை பின்பற்றுபவர்கள் ரவிதாசியாக்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இந்த பின்னணியில்தான் இவரது பெயரால் பாஜக யாத்திரை நடத்துகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+