ஆட்டுக்கு தாடி எதற்குனு கேட்டுட்டு! ஆளுநர் காலில் விழ தயாராகிவிட்டதே திமுக! உதயநிதிக்கு தவெக அட்டாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ், பெண் ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய வழக்கு விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் ஆளுநர் அர்லேகரை, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசியதை தவெக விமர்சித்துள்ளது.

இதுகுறித்து தவெக ஐடி விங் தனது பதிவில் கூறியிருப்பதாவது: ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு?" என்று கேட்ட பேரறிஞர் அண்ணாவின் திமுகவை கபளீகரம் செய்து, குடும்பக் கட்சியாக மாற்றிய மண்ணாங்கட்டிப் பரம்பரை, தாங்கள் கொள்கைக் குன்றுகள் என்று மேடைக்கு மேடை முழங்குவதெல்லாம் வெறும் வாய்ச்சவடால் என்பதை இன்றைய ஆளுநர் சந்திப்பின் மூலம் நிரூபிக்கிறது.

udhayanidhi stalin arul vignesh tvk

ஆட்சியில் இருந்தவரை ஆளுநரைப் பேசவிடாமல் செய்துவிட்டோம் என்று கொக்கரித்துவிட்டு, இப்போது "ஆபத்பாந்தவனே" என்று ஆளுநரின் காலில் விழவும் தயாராகிவிட்டனர்.

முரசொலி பார்த்தீங்களா?

"கருணாநிதியின் ஆசி பெற்ற சின்னம் தாமரை" என்ற வரலாறு மீண்டும் அரங்கேறப் போகிறது. அதற்கான அறிகுறிதான், சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு உதயநிதி தலைமை நிர்வாகியாக இருக்கும் முரசொலியில் பாஜகவின் மாநிலத் தலைவரின் நேர்காணல் இடம்பெற்றிருப்பது.

பாசிசப் பாயாசம் பருகக் கொத்தடிமைகள் தயாராக இருக்கையில், மண்ணாங்கட்டிப் பரம்பரைக்கு கொள்கையாவது, கொய்யாக்காயாவது என்ற மனநிலைதான் !

அன்று போலவே பாஜகவைத் தமிழ்நாட்டில் வளர்க்கும் பணியை திமுக தலைமையேற்று நடத்தவிருக்கிறது. திமுக ஒரு தீயசக்தி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் மண்ணாங்கட்டிப் பரம்பரைக்கு வாழ்த்துகள் ! இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளது.

பெண் ஆட்சியருக்கு தொல்லை

பெண் ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ், ஆபாச மெசேஜ் கொடுத்தது குறித்து நீதிமன்றம் கண்டித்ததை அடுத்து விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் விசாரணை அதிகாரியான திருப்பூர் எஸ்பி சிருஷ்டி சிங், பெண் ஆட்சியரின் முகாம் அலுவலகத்திற்கே சென்று விசாரணை நடத்தினார்.

டிஜிபியிடம் புகார்

இதையடுத்து அருள் விக்னேஷிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தை சிபிஐ-க்கு மாற்றக் கோரி நேற்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, தமிழக டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார். இதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் ஜூலை 31 ஆம் தேதியே புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் தலைமைச் செயலாளர் சாய்குமார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உதயநிதி தெரிவித்திருந்தார்.

ஆளுநருடன் உதயநிதி சந்திப்பு

இதைத் தொடர்ந்து இன்றைய தினம் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் அர்லேகரை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து மனு அளித்திருந்தார். அதில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் விவகாரத்தை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

உதயநிதி பேட்டி

மனு அளித்த பின்னர் உதயநிதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது விஜய் நடவடிக்கை எடுப்பார் என பார்த்தால் கூப்பிட்டு தீபாவளி பரிசு கொடுத்துனுப்பியுள்ளார். தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் நிறைய கொலைகள், போதை பொருள் கடத்தல்கள் நடந்துள்ளன. தவெக ஆட்சியில் 6 மாதங்களில் 9 காவல் நிலைய மரணங்கள் நடைபெற்றுள்ளன. செஞ்சி சிறுமி மாயமாகி 45 நாட்கள் ஆகிவிட்டன. இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என உதயநிதி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+