இனி நள்ளிரவு வரை முழிக்க வேண்டாம்! வாட்ஸ்அப்பில் வந்தது சூப்பர் வசதி.. என்ன செய்ய வேண்டும்?

Subscribe to Oneindia Tamil

சியாட்டில்: வாட்ஸ்அப்பில் பிறந்தநாள் வாழ்த்து மெசேஜ் அனுப்ப வேண்டும், முக்கியமான மீட்டிங் குறித்து ரிமைண்டர் மெசேஜ் வேண்டும் என்றால்.. குறிப்பிட்ட அந்த நேரம் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இனி இல்லை. எந்த தேதியில், எந்த நேரத்தில் மெசேஜ் செல்ல வேண்டும் என்பதை முன்கூட்டியே ஷெட்யூல் செய்து வைத்தால் போதும். அந்த நேரத்தில் தானாகவே மெசேஜ் சென்றுவிடும். பயனர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இந்த வசதியை மெட்டா நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது.

உலகிலேயே அதிக வாட்ஸ்அப் யூசர்களை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. அலுவலகங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு முதல் நண்பர்களுடன் ஜாலி சாட்டிங் வரை பலரும் வாட்ஸ்அப்பை தான் பயன்படுத்துகிறார்கள். இதனால் வாட்ஸ்அப்பில் வரும் சின்ன மாற்றமும் கூட இந்தியர்களுக்கு முக்கியமானதாகவே இருக்கிறது.

WhatsApp Scheduled Messages Feature WhatsApp mobile

வாட்ஸ்அப்

இந்த சூழலில் தான் வாட்ஸ்அப் நிறுவனம் புதிதாக ஒரு அம்சத்தை அறிமுகம் செய்கிறது. அதாவது நள்ளிரவு 12 மணிக்கு பிறந்த நாள் மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றால் இனி நீங்கள் நள்ளிரவு வரை விழித்திருக்க தேவையில்லை. பிற்பகலிலேயே நைட் இதுபோல மெசேஜ் அனுப்ப வேண்டும் என ஷெட்யூல் செய்து வைத்தால் போதும். சரியாக இரவு 12 மணிக்கு அந்த மெசேஜ் போய்விடும்.

நேற்று நவம்பர் 25ஆம் தேதி வாட்ஸ்அப் இந்த புதிய அம்சத்தை வெளியிட்டது. 'Scheduled Messages' என்ற இந்த வசதியை தான் நீண்ட காலமாகவே யூசர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இதன் மூலம் குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் 14 நாட்கள் வரை முன்கூட்டியே மெசேஜ்களை திட்டமிட்டு அனுப்ப முடியும்.

குறிப்பிட்ட நேரத்திற்கு அனுப்பலாம்!

பிறந்தநாள் வாழ்த்து, அப்பாயின்ட்மென்ட் நினைவூட்டல், அலுவலக வேலை தொடர்பான தகவல்கள் என பல விஷயங்களுக்கு இதை பயன்படுத்தலாம். தனிப்பட்ட சாட்கள் மட்டுமின்றி குரூப் சாட்களிலும் மெசேஜ்களை ஷெட்யூல் செய்து அனுப்ப முடியும். டெக்ஸ்ட் மெசேஜ்கள் மட்டுமல்லாமல் போட்டோ, வீடியோக்களையும் குறிப்பிட்ட நேரத்தில் ஷெட்யூல் செய்து அனுப்பும்படி வைக்கலாம்!

உடனே உங்க போனை போய் பார்த்து, அடடே எனது வாட்ஸ்அப்பில் இந்த வசதி இல்லையே என பீல் செய்ய வேண்டும். இது அடுத்த சில வாரங்களில் உலகம் முழுவதும் படிப்படியாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதேநேரம் வாட்ஸ்அப் சேனல்களில் இந்த வசதி கிடைக்குமா என்பது இன்னும் தெளிவாகவில்லை. எதிர்காலத்தில் வர வாய்ப்பு இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

என்ன செய்ய வேண்டும்?

  • முதலில் லேட்டஸ்ட் அப்டேட்டிற்கு வாட்ஸ்அப்பை அப்டேட் செய்து கொள்ளவும்
  • பிறகு வாட்ஸ்அப்பை திறந்து, யாருக்கு மெசேஜ் அனுப்ப வேண்டுமோ அந்த சாட்டுக்கு செல்லவும்.
  • அனுப்ப வேண்டிய மெசேஜை டைப் செய்யவும்.
  • செண்ட் பட்டனை அழுத்தி பிடிக்கவும்.
  • மெசேஜ் செல்ல வேண்டிய தேதி மற்றும் நேரத்தைத் தேர்வு செய்யவும்.
  • அதை கன்பார்ம் செய்தால் அந்த மெசேஜ் ஷெட்யூல் ஆகிவிடும்.

தானாக செய்துவிடும்

அவ்வளவுதான்! குறிப்பிட்ட நேரம் வந்ததும் மெசேஜ் தானாகவே சென்றுவிடும். பெறுபவருக்கு அது வழக்கமான மெசேஜை போலவே காட்டும். மேலும், நீங்கள் ஷெட்யூல் செய்துள்ள அனைத்து மெசேஜ்களையும் ஒரே இடத்தில் பார்க்க முடியும். அதை மாற்றவும் முடியும்.. வேண்டாம் என்றால் மெசேஜ் செல்லும் முன்பே அதை டெலிட் செய்யவும் முடியும்.

இதன் மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால் ஒரு முறை நீங்கள் மெசேஜை ஷெட்யூல் செய்துவிட்டால் போதும்.. அதன் பிறகு உங்கள் மொபைல் ஸ்விட்ச் ஆஃப் ஆனாலும் கூட ஏற்கெனவே ஷெட்யூல் செய்த மெசேஜ் குறிப்பிட்ட நேரத்தில் சென்றுவிடும். அதேபோல், இந்த மெசேஜ்களுக்கும் வாட்ஸ்அப்பின் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் பாதுகாப்பு இருக்கும். அதாவது அனுப்புபவர் மற்றும் பெறுபவரை தவிர யாராலும் அந்த மெசேஜை படிக்க முடியாதாம்.

டெலிகிராம், சிக்னல் போன்ற போட்டி ஆப்களில் ஏற்கெனவே இந்த வசதி இருக்கும் நிலையில், வாட்ஸ்அப்பில் இது நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்தது. இப்போது ஒரு வழியாக அந்த வசதியை கொண்டு வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+