ஆயிரம் டன் எடையோடு போனாலும் கப்பல் மிதப்பது எப்படி? பின்னனியில் இப்படி ஒரு டெக்னிக் இருக்கா?
சென்னை: பல ஆயிரம் டன் எடை கொண்ட கப்பல், மேலும் பல ஆயிரம் டன் எடை கொண்ட சரக்குகளை ஏற்றி சென்றாலும் கூட கொஞ்சம் கூட அசராமல் கடலில் மிதந்து செல்கிறது. கடலில் குண்டூசியை போட்டால் கூட இருக்கிற இடம் தெரியாமல் போய்விடும். அப்படி இருக்கையில், எக்குவால் உருவாக்கப்பட்ட போதிலும் கப்பல் எப்படி நீரில் மிதக்கிறது? என உங்களுக்கு சந்தேகம் வரலாம். ஆனால் அதற்கு பின்னால் சயின்ஸ் இருக்கிறது. அது என்ன என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
கப்பல்கள் எப்போதுமே பிரம்மிப்பூட்டுபவை. மிதக்கும் நகரம் போள பிரமாண்ட தோற்றம் கொண்ட இந்த கப்பல்கள் கடலில் நகர்ந்து செல்லும். பொதுவாக தண்ணீரில் எந்த ஒரு இரும்பு பொருளை போட்டாலும் மூழ்கிவிடும்.

கப்பல் எப்படி மிதக்கிறது?
ஆனால், அவ்வளவு பெரிய கப்பல் அதுவும் முற்றாக எக்கினால் செய்யப்பட்ட கப்பல் எப்படி அத்தனை ஆயிரம் டன் எடைகளை சுமந்து கொண்டு தண்ணீரில் மிதக்கிறது. எவ்வளவு பெரிய ராட்சத அலைகள் வந்தாலும் எந்த சிக்கலும் இன்றி அவற்றை கிழித்துக்கொண்டு எப்படி செல்கிறது? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். அதற்கான விடையை இங்கே காணலாம்.
கப்பல் எஃகினால் செய்யப்பட்டது. இந்த எஃகு தண்ணீரில் மூழ்கும் தன்மை கொண்டது. பிறகு எப்படி கப்பல் கடலில் மிதக்கின்றது என்றால் அதற்கு பின்னால் எளிய அறிவியல் ஒளிந்துள்ளது. கப்பல் வெளிப்புறம் எக்கினால் செய்யப்பட்டு இருந்தாலும் முழுவதும் அடர்த்தியான எக்குவை கொண்டு உருவாக்கப்பட்டது அல்ல.
காற்று அதிகம் நிரம்பி இருப்பதால்..
கப்பல் கட்டமைப்பின் உள்பகுதியில் வெறும் காற்று மட்டுமே இருக்கக் கூடிய வெற்றிடமே இருக்கும். இந்த வெற்றிடத்தில் காற்று அதிகம் நிரம்பியிருப்பதால், கப்பலின் சராசரி அடர்த்தி என்பது நீரை விட குறைவாக இருக்கும். இதன் காரணமாக ஏற்படும் மிதப்பு விசையால் கப்பல் மிதக்கிறது.
நீங்கள் கப்பலின் ஏதாவது ஒரு பாகத்தைக் கடலில் தூக்கிப்போட்டால் அது மூழ்கிவிடும். ஆனால், முழு கப்பல் மூழ்காது. இதற்குக் காரணம், அதன் கட்டமைப்புதான். கப்பலின் வெளிப்புறம் எக்கினால் கட்டமைக்கப்பட்டிருந்தாலும் அதன் உள்பாகம் முழுவதும் எக்கு நிரப்பப்பட்டிருக்காது. அதன் உள்ளே வெற்றிடம் இருப்பதைப்போல வடிவமைக்கப்பட்டிருக்கும்.
ஆர்க்கிமிடிஷ் தத்துவம்
இந்த வெற்றிடத்தில் அதிகம் காற்று நிரம்பியிருப்பதால் கப்பலின் சராசரி அடர்த்தி, நீரைவிடக் குறைவாக இருக்கும். இதனால், மிதப்பு விசை எழுந்து கப்பலை மிதக்க வைக்கிறது. சயின்ஸ்களின் படி சொல்வது என்றால், ஒரு பொருளானது பகுதியாகவோ அல்லது முழுமையாக நீரில் முக்கும் போது அப்பொருளின் மீது செயல்படும் மிதப்பு விசையின் எண் மதிப்பு என்பது அப்பொருளினால் இடப்பெயர்ச்சி அடைந்த திரவத்தின் எடைக்கு சமமாக இருக்கும் என்பதை ஆர்கிமிடிஷின் தத்துவம் கூறுகிறது.
கப்பல் தண்ணீரில் மிதக்கும் போது அதன் உடல் பகுதியில் குறிப்பிட்ட அளவு வரை தண்ணீரில் மூழ்கியபடி இருக்கும். அதாவது, அதன் எடைக்கு சமமான தண்ணீர் இடம் பெயரும் வரை உடல் பகுதி தண்ணீரில் அமிழும். சரி நீர்மூழ்கி கப்பல் எப்படி நீரில் மூழ்குகிறது என உங்களுக்கு சந்தேகம் எழலாம்.
நீர்மூழ்கி கப்பல் எப்படி கடலில் மூழ்குகிறது?
இதை இயற்பியல்தான் நீர்மூழ்கிக் கப்பலிலும் நடைபெறுகிறது அதாவது எடையைக் கூட்டும்போது நீர்மூழ்கிக் கப்பல் கடலுக்குள் மூழ்கி செல்கிறது. எடையை குறைத்தால் கடலில் மிதக்கும். நீர்மூழ்கி கப்பலின் அடர்த்திதான் அது மிதப்பதற்கும் காரணம். நீர்மூழ்கி கப்பல் 2 உருளைகள் கொண்ட அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
உருளைகளுக்கு நடுவே பேலட் தொட்டி என்ற ஒன்று இருக்கும். இந்த தொட்டிய்ல் கடல் நீரை நிரப்பினால் அதன் எடை அதிகரித்து நீரில் மூழ்கிவிடும். நீரை வெளியேற்றினால் எடை குறையும். இதனால், கப்பல் மேலே வந்துவிடும். இந்த அடிப்படையில்தான், நீர்மூழ்கிக் கப்பல் கடலில் மிதந்தபடியும், மூழ்கிய படியும் செல்கிறது.


Click it and Unblock the Notifications
