52 சீட் தான் இருக்கு.. ஆனா 54வது பெர்த்தை ஒதுக்கிய ரயில்வே! இல்லாத சீட்டை தேடி பயணி அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரயிலில் கன்பார்ம் டிக்கெட் கிடைப்பதே பெரும் சவாலாக இருக்கிறது. டிக்கெட் கன்பார்ம் ஆன பிறகே பலருக்கும் நிம்மதியாக இருக்கும். ஆனால், கன்பார்ம் டிக்கெட் உடன் ரயில் ஏறிய பிறகு, அப்படியொரு சீட்டே இல்லாமல் போனால் எப்படியிருக்கும். அப்படியொரு சம்பவம் தான் இங்கு ஒருவருக்கு நடந்துள்ளது. பல ஆயிரம் கொடுத்து டிக்கெட் எடுத்த இவருக்கு இல்லாத சீட்டை ஒதுக்கியுள்ளது ரயில்வே!

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பல கோடி பேர் பயணிக்கும் பொது போக்குவரத்தாக ரயில்கள் உள்ளன. ரயில்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், அதன் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், நாம் யோசிக்கவே செய்யாத பல விசித்திரமான தவறுகள் அங்கு நடக்கவே செய்கிறது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

India train

என்ன நடந்தது

கடந்த நவம்பர் 22ஆம் தேதி இஷான் பஜ்பாய் என்பவர் வாரணாசியில் இருந்து கோரக்பூர் செல்லும் ரயிலில் பயணம் செய்தார். அவர் 2ம் வகுப்பு ஏசி கோச்சில் டிக்கெட் எடுத்திருந்தார். அவருக்கு ஏசி 2 டயர் ஏ1 பெட்டியில் 54வது சைடு அப்பர் பெர்த் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், ரயில் ஏறிய பிறகு தான் அவருக்கு பெரிய ஷாக் காத்திருந்தது. அதாவது அந்த பெட்டியில் மொத்தம் இருந்ததே 52 பெர்த்கள் தான். இரவு சுமார் 10.45 மணிக்கு ரயில் ஏறிய அவர் தனது பெர்த்தை தேடியபோது தான் அப்படியொரு சீட்டே இல்லை என்பது அவருக்கு தெரியவந்தது.

புகார் அளித்தார்

இதையடுத்து ரயில்வே உதவி எண் 139ல் புகார் அளித்ததுடன், டிக்கெட் விவரத்தையும் பெட்டியில் பெர்த் இல்லாதது தொடர்பாகவும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார். அது பெரியளவில் டிரெண்டாது. பண்டிகை நாட்களில் ரயில்களில் டிக்கெட் கிடைப்பது குதிரை கொம்பாகவே இருக்கிறது. ஆனால், டிக்கெட் கிடைத்த பிறகும் இப்படி பெர்த் இல்லாமல் போனது டிரெண்டானது.

இந்த விவகாரம் குறித்து வடகிழக்கு ரயில்வேயின் விளக்கம் அளித்துள்ளது. சாப்ட்வேரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த தவறு நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பஜ்பாய் மட்டுமின்றி மற்றொரு பயணிக்கும் இதே பிரச்சினை ஏற்பட்டதாகவும், இருவருக்கும் அதே பெட்டியில் வேறு ஒரு பெர்த் ஒதுக்கப்பட்டதாகவும் கூறினார்.

பெர்த்தே இல்லை

இந்திய ரயில்வேயின் ஏசி 2 டயர் பெட்டிகள் அனைத்திலும் ஒரே நம்பரில் பெர்த்கள் இருப்பதில்லை. பழைய ஐசிஎஃப் பெட்டிகளில் பொதுவாக 46 பெர்த்கள் இருக்கும். புதிய எல்எச்பி பெட்டிகளில் 52 அல்லது 54 பெர்த்கள் என வெவ்வேறு டிசைன்கள் உள்ளன. ரயில்வேயின் ஆர்டிஎஸ்ஓ இணையதளத்தில் எல்எச்பி ஏசி 2 டயர் பெட்டிகளின் தலா 52 பெர்த்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், வடகிழக்கு ரயில்வேயின் ஆவணத்தில் 54 பெர்த்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குழப்பம் காரணமாகவே இல்லாத பெர்த்தில் அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.

வெவ்வேறு கணக்கு

ரயில்வேயின் கம்ப்யூட்டர் முன்பதிவு முறை, ஒவ்வொரு பெட்டியிலும் உள்ள பெர்த்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டே டிக்கெட் ஒதுக்கப்படுகிறது. இந்த ரயிலில் புக்கிங் சிஸ்டத்தில் 54 பெர்த்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், களத்தில் 52 பெர்த்கள் கொண்ட பெட்டி இணைக்கப்பட்டதால், இல்லாத 53, 54வது பெர்த்களுக்கும் டிக்கெட் வழங்கப்பட்டது. பராமரிப்பு காரணங்களுக்காக பெட்டி மாற்றப்படும்போது, புக்கிங் அமைப்பில் அதன் விவரங்கள் அப்டேட் செய்யவில்லை என்றால் இந்த தவறுகள் ஏற்படும். அப்படியொரு தவறு தான் இப்போது நடந்துள்ளது.

இதற்கு முன்பும் புனே ஹடப்சரில் இருந்து உத்தர பிரதேசம் சென்ற பயணி ஒருவருக்கு, 78 பெர்த்கள் கொண்ட ஸ்லீப்பர் பெட்டியில் 79வது பெர்த் ஒதுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. எனவே, டிக்கெட்டில் பெர்த் உறுதியாக இருந்தால் மட்டும் போதாது.. ரயிலில் உண்மையிலேயே அந்த பெர்த் இருக்கிறதா என்பதையும் உறுதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+