திருப்பூர் டூ சித்தூர்.. ஆந்திராவில் ரூ.266 கோடியில் முதல் தொழிற்சாலையை அமைக்கும் ஈஸ்ட்மேன் நிறுவனம்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட பிரபலமான ஆடை உற்பத்தி நிறுவனமான ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் குளோபல் கிளாத்திங் நிறுவனம் ஆந்திரப் பிரதேசத்தில் தனது முதல் ஸ்மார்ட் ஆடைத் தொழிற்சாலையை அமைக்கப் போகிறது. சித்தூர் மாவட்டத்தில் அமையவுள்ள ரூ.266 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம் அமலுக்கு வரும்போது 4,500 பேருக்கு வேலை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழில் வந்துள்ள தகவல்களின்படி, தமிழ்நாட்டில் 17 தொழிற்சாலைகளை நடத்தி வரும் திருப்பூரின் ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ், கேப் (GAP), டாமி ஹில்ஃபிகர், நாட்டிக்கா, டெகாத்லான் மற்றும் வால்மார்ட் போன்ற முன்னணி பிராண்டுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. ஈஸ்ட்மேன் நிறுவனம் சித்தூர் தொழிற்சாலையை மிக உயர்தரமான ஆட்டோமேட்டிக் ஸ்மார்ட் தொழிற்சாலையாக அமைக்க உள்ளது.

Tirupur Chittoor Andhra Pradesh

சித்தூரில் தொழிற்சாலை

ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் குளோபல் கிளாத்திங் நிறுவனம் 1983-க்குப் பிறகு தமிழ்நாட்டிற்கு வெளியே மேற்கொள்ளும் முதல் விரிவாக்கம் இதுதான். சித்தூர் மாவட்டத்தில் அமையவுள்ள ரூ.266 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம் மூன்று யூனிட்களாக அமையும். இது 3,000-க்கும் மேற்பட்ட நேரடி வேலைகள் மற்றும் 1,500 மறைமுக வேலைகள் உட்பட சுமார் 4,500 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சித்தூரில் எங்கே அமைகிறது?

சித்தூர் மாவட்டத்தின் கண்டலகோத்தூரில் 100,000 சதுர அடி பரப்பளவில் குத்தகைக்கு எடுக்கப்பட்ட முதல் ஆலையில், ஏப்ரல் 2027-ல் வணிக உற்பத்தி தொடங்கும் எனத் திட்டமிடப்பட்டிருக்கிறது. மற்ற இரண்டு ஆலைகள் தேனபண்டா கிராமத்தில் அமைக்கப்படும். அங்கு முறையே அக்டோபர் 2028 மற்றும் ஜூலை 2029-ல் வணிக உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழிற்சாலை எப்படி இருக்கும்?

ஈஸ்ட்மேன் நிறுவனத்தின் சித்தூர் ஆலையானது, நவீன இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் உற்பத்திச் செயல்முறைகளைப் பயன்படுத்தி பின்னல் மற்றும் நெசவு ஆடைகளைத் தயாரிக்கும் ஈஸ்ட்மேனின் முதல் ஸ்மார்ட் ஆடை உற்பத்தி ஆலையாக இருக்கும். உற்பத்தி நிலைகளில் கைமுறைக் கையாளுதலும் ஒருங்கிணைப்பும் தேவைப்படும் ஒரு வழக்கமான ஆடைத் தொழிற்சாலையைப் போலல்லாமல், மிகவும் தனித்துவமான, திறமையான உற்பத்தி நிலையமாகச் செயல்படவும், உற்பத்தியின் செயல்திறனை அதிகரிக்கவும், துல்லியமாகத் தரக்கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பை மேம்படுத்தவும் அதிநவீன ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த உள்ளது என ஆங்கில நாளேட்டில் வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு நல்ல செய்தி இல்லை

ஆந்திராவிற்கு இது நல்ல செய்தியாக இருந்தாலும், தமிழ்நாட்டிற்கு இது நல்ல செய்தி என்று கூற முடியாது. ஏனெனில் இந்தியாவின் மிகவும் பிரபலமான பெரும்பாலான ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்துக்குமே திருப்பூர்தான் அடித்தளம். திருப்பூரில் உள்ள நிறுவனங்கள் சராசரி நிறுவனங்களோ, சாதாரண நிறுவனங்களோ கிடையாது. உலகப் புகழ்பெற்ற பிராண்ட் ஆடைகளைத் தயாரிக்கின்றன.

தேனி, சிவகங்கைக்கு வராதது ஏன்?

இந்த நிறுவனங்களின் மிக முக்கியமான நிறுவனம் ஈஸ்ட்மேன் நிறுவனம்தான். திருப்பூரில் உள்ள இந்த நிறுவனம் ஏற்கெனவே தொழில் கட்டமைப்பையும் அனுபவத்தையும் கொண்ட நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தமிழ்நாட்டின் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களான தேனி அல்லது சிவகங்கை போன்ற தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்களில் கிளைகளை அமைக்காமல் ஆந்திராவைத் தேர்வு செய்திருப்பதன் பின்னணியில் பெரிய காரணம் இருக்கிறது. சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு ஏராளமான சலுகைகளை வழங்கி வருகிறது.

ஆந்திரா தந்த சலுகைகள்

ஆந்திரப் பிரதேச அரசு பிரத்யேகமான டெக்ஸ்டைல்ஸ், அபேரல் மற்றும் கார்மெண்ட்ஸ் பாலிசி 4.0 என்ற கொள்கையைக் கொண்டுவந்துள்ளது. இதன்படி ஆந்திராவில் முதலீடு செய்ய விரும்பும் பெரிய நிறுவனங்களுக்கு தகுதியான முதலீட்டில் 25% வரை வழங்குகிறது. வேலைவாய்ப்பு - முதலீட்டு விகிதத்தைப் பொறுத்து 8-10% என்ற அளவில் வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை வழங்குகிறது. மின் கட்டணச் சலுகையாக யூனிட்டுக்கு ரூ.2 என்ற அளவில் 6 ஆண்டுகள் வரை வழங்குகிறது. மேலும், 6 ஆண்டுகளுக்கு 50% வரை மின்சார வரி விலக்கு அளிக்கிறது.

ரூ.266 கோடி முதலீடு

தகுதி நிபந்தனைகளுடன் உள்ளூர் கொள்முதலுக்கு 1% வரை ஏற்றுமதி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. முத்திரைத்தாள் கட்டணத்தைப் பொறுத்தவரை, தகுதியான நிலம் மற்றும் குத்தகைக்கு 100% திருப்பிச் செலுத்தப்படும். எனவே, ஈஸ்ட்மேன் நிறுவனம் ரூ.266 கோடிக்கு மேல் முதலீடு செய்வதால், ஆந்திர அரசின் கொள்கைப்படி பெரிய திட்டமாகும். எனவே அரசு பல்வேறு சலுகைகளை வழங்கும். ஆனால் என்னென்ன சலுகைகள் ஈஸ்ட்மேனுக்கு வழங்கப்பட்டன என்பது தெளிவாகத் தெரியவில்லை. அதேநேரம் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

தேனி, சிவகங்கைக்கு வராதது ஏமாற்றமே

தமிழ்நாடு அரசு தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் சில பின்தங்கிய மாவட்டங்களில் தொழில் முதலீடுகளை ஊக்குவிக்கச் சலுகைகள் தராமல் இல்லை. எனினும், தமிழக அரசு ஒரு பிரத்யேகமான தென் மாவட்ட ஜவுளித் தொழில் வளர்ச்சித் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். திருப்பூரில் இருந்தால் மட்டும் போதாது. ஒவ்வொரு வருடமும் திருப்பூரை நோக்கி மக்கள் செல்வதை மாற்றி, தேனியிலோ அல்லது சிவகங்கை மாவட்டங்களிலோ, மதுரை உசிலம்பட்டி பகுதியிலோ இதுபோன்ற தொழிற்சாலைகள் அதிகம் வர அரசு முன்னெடுக்க வேண்டும் என்பது தென் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+