Blue Planet: "சுத்துதே சுத்துதே பூமி..!" நீலக் கோளான பூமி சுற்றும்போது சுழற்சியை நாம் உணராதது ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: The Blue Planet எனச் சொல்லப்படும் பூமியானது, ஒரு வினாடி கூட நிற்காமல் சுழன்று கொண்டே இருக்கிறது. ஆனாலும் நமக்கு அதன் வேகம் தெரிவதில்லையே ஏன்? சாதாரணமாக பேருந்தில் சென்றால் அதன் வேகத்திற்கு உடம்பு அசைகிறது. ஆனால் பூமி வேகமாக சுற்றும் போது அதன் சுழற்சி நமக்கு தெரியாதது ஏன் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க!

பூமியில் ஏராளமான அதிசயங்கள் இருந்தாலும் பூமியே ஒரு அதிசயம்தான்! பூமியை பற்றி தெரிந்து கொள்ளும் போதுதான் "ஆமால்ல" என தோன்றுகிறது. நாம் சிறிய வயதில் இருந்தே படித்திருக்கிறோம் Earth rotation! அதாவது பூமி தன்னை தானே சுற்றிக் கொள்வது.

earth science

இதனால்தான் பகல், இரவு ஏற்படுகின்றன. அது போல் பூமி சூரியனை சுற்றி வருவதால் ஓராண்டு என்ற கால அளவு உருவாகிறது. பூமியின் அச்சு சாய்வதால் பருவகால மாற்றம் ஏற்படுகிறது. பூமியின் பாதி பகுதியில் சூரிய ஒளியும் பாதித்தான் சென்றடையும். பூமி மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி சுழல்வதால் கிழக்கு பகுதியில் இருப்பவர்கள் மேற்கு பகுதியில் இருப்பவர்களை விட முன்கூட்டியே சூரியோதயத்தை பார்க்கிறார்கள்.

சுழற்சி

இவ்வாறு நிற்காமல் 24 மணி நேரமும் 365 நாட்களும் பூமியான சுற்றிக் கொண்டே இருக்கிறது. ஆனால் பாருங்க! அது சுற்றுவது நமக்கு தெரியவே இல்லை. நம் உடலிலோ வீட்டில் உள்ள பொருட்களிலோ எந்த அதிர்வும் இருப்பதில்லை.

பேருந்து இயக்கம்

சாதாரணமாக பேருந்தில் சென்றால் கூட வெளியே தெரியும் பொருட்கள் சுழலுவது போல் இருக்கும், நமது உடலும் அசைவுகளை சந்திக்கும். பூமி வேகமாக சுற்றும் போதிலும் ஏன் அந்த அதிர்வுகள் நமக்கு தெரியவில்லை என்பதை என்றாவது யோசித்திருக்கிறீர்களா?

1670 கி.மீ. வேகத்தில் சுழற்சி

பூமியின் சுழற்சி வேகம் மணிக்கு சுமார் 1670 கிலோ மீட்டர் ஆகும். ஆனால் துருவ பகுதிகளில் பூமி சுழலும் வேகம் குறைகிறது. அதாவது ஒரு மணி நேரத்தில் 1670 கிமீ. தூரத்தை பூமி கடக்கிறது. பேருந்தில் மணிக்கு 100 கிமீ. போகும் போதே என்னதான் மெட்டாலிக் சாலைகளில் சென்றாலும் அதிர்வுகள் இருக்கும். ஆனால் பூமி இத்தனை வேகமாக சுற்றும்போது ஏன் ஒரு சின்ன பொருள் கூட அசைவதில்லை?

பூமியுடன் சேர்ந்து சுற்றுகிறது

பூமியுடன் சேர்ந்து நாமும் அதே வேகத்தில் சுழல்வதால் அதை நம்மால் உணர முடியவில்லை. பூமியின் வேகத்திற்கு நம் உடல் பழக்கப்பட்டுவிட்டது மட்டும் காரணம் இல்லை. நம்மை சுற்றியிருக்கும் அனைத்தும் பூமியுடன் சேர்ந்தே சுற்றுகிறது என்பதும் ஒரு காரணம்! பூமி நிலையான வேகத்தில் சுற்றுவதும் அதன் அதிர்வுகள் நமக்கு தெரியாமல் இருப்பதற்கான காரணமாகும்.

earth science

சீரான வேகம்

இந்த வேகத்தில் ஏதாவது மாற்றம் இருந்தால் மட்டுமே அதை நம் உடல் உணரும். உதாரணமாக பேருந்தில் சென்றுக் கொண்டிருக்கும் போது அது சீரான வேகத்தில் செல்லும் போது நம் உடலும் பேருந்துடன் சேர்ந்து அதே வேகத்தில் நகரும். ஆனால் திடீரென பிரேக் பிடிக்கும் போது சுற்றிக் கொண்டிருக்கும் நம் உடலும் திடீரென நிறுத்தப்படுவதால் முன்னால் இருக்கும் சீட்டில் முட்டிக் கொள்கிறோம். இப்படித்தான் பூமியின் இயக்கமும்!

மேற்பரப்பிலேயே

பூமி சுழன்றுக் கொண்டிருக்கும் போதிலும் நாம் தூக்கி வீசப்படாமல் அதன் மேற்பரப்பிலேயே இருக்கிறோம். இதற்கு பூமியின் ஈர்ப்பு விசைதான் காரணம். பூமி தன்னைதானே சுற்றும் போது நம் மீது வெளிப்புறமாக ஒரு விளைவு ஏற்படுகிறது. இதன் பெயர் மையவிலக்கு விளைவு (Centrifugal effect) ஆகும்.

ஏன் நீலக் கோள்?

பூமியின் ஈர்ப்பு விசையுடன் இந்த மையவிலக்கு விளைவை ஒப்பிட்டால் மைய விலக்கு விளைவு குறைவானது. இதனால்தான் பூமியால் நம்மை தூக்கி எறிய முடியவில்லை. பூமத்திய ரேகைப் பகுதியில் இந்த விளைவு அதிகமாக இருக்கும். பூமி சுற்றுவதை நிறுத்திக் கொண்டால் என்ன நடக்கும் ? இரவு பகல் ஏற்படாது, காலநிலை, காற்றின் இயக்கம், கடலின் நீரோட்டங்கள் உள்ளிட்டவைகளிலும் மாற்றங்கள் ஏற்படும். பூமியில் 71 சதவீதம் நீரினால் ஆனது என்பதால் அதை நீலக்கோள் என்கிறோம். மேலும் விண்வெளியில் இருந்து பூமியை பார்த்தால் அது நீல நிறத்தில் தெரியும் என்பதாலும் இந்த பெயர் உண்டு. பூமிக்கு உயிர் கோள் என்றும் ஒரு பெயருண்டு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+