‘நோ நோ நோ’.. நடுவானில் விமான கதவை திறக்க முயன்ற நபரால் அலறிய பயணிகள்.. என்ன நடந்தது? வைரல் வீடியோ
வாஷிங்டன்: அமெரிக்காவில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் திடீரென்று பயணிகள் வெளியேறுவதற்கான கதவை திறக்க முயன்ற நபரால் பதற்றம் ஏற்பட்டது. பயணிகள், விமான பணியாளர்கள் உடனடியாக சுதாரித்து அவரை தடுத்து நிறுத்தியதால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
அமெரிக்காவில் சான்டியாகோ விமான நிலையத்தில் இருந்து சிகோகோ நகருக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் புறப்பட்டது. இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது பயணி ஒருவர் திடீரென்று தனது இருக்கையை விட்டு எழுந்து விமானத்தின் முன்பக்கத்துக்கு சென்று பயணிகள் வெளியேறும் கதவை திறக்க முயன்றார்.

இதையடுத்து அங்கிருந்த பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் அவரை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த நபர் கேட்கவில்லை. இதையடுத்து அவர்கள் அனைவரும் சேர்ந்து அந்த நபரை பிடித்து கதவின் பக்கத்தில் இருந்து தூரமாக இழுத்து வந்தனர். இதனால் அந்த நபர் காயமடைந்தார். மற்ற நபர்கள் யாரும் காயமடையவில்லை.
இந்த சம்பவத்தால் விமானத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. உடனடியாக விமானம் அரிசோனாவில் உள்ள போனிக்ஸ் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற நபர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்பிறகு மீண்டும் அந்த விமானம் போனிக்ஸ் விமான நிலையத்தில் இருந்து சிகோகோ நோக்கி புறப்பட்டது. இதனை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மற்றும் அமெரிக்காவின் ஃபெடரல் அவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் உறுதி செய்தது.
இதற்கிடையே தான் விமானத்தில் அந்த பயணி எழுந்து சென்று கதவை திறக்க முயன்றதையும், அவரை மற்ற பயணிகள், விமான பயணிகள் தடுத்து நிறுத்தியதையும் அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதுபற்றி அமெரிக்கன் ஏர்லைன்ஸ் சார்பில் ஃபாக்ஸ் நியூஸ் நிறுவனத்திடம் ''அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 1494 விமானம் போனிக்ஸ் விமான நிலையத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் விமானத்தில் பயணி ஒருவர் செய்த இடையூறு தான். இந்த விமானம் தரையிறங்கிய உடன் குறிப்பிட்ட அந்த பயணி இறக்கிவிடப்பட்டார். அதன்பிறகு விமானம் வழக்கம்போல் புறப்பட்டு சென்றது'' என்றார்.


Click it and Unblock the Notifications
