கோவிலுக்குள் இப்படியா? நடிகை திவ்யா கணேஷ் செய்த காரியம்.. பிக் பாஸ் பிரபலங்களுக்கு பிரச்சனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருப்பது ரசிகர்களிடையே பேசும் பொருளாகி இருக்கிறது. ஒரு பக்கம் முத்துக்குமரன் மீது வாஹதா கொடுத்த புகார் பரப்பரப்பை ஏற்படுத்திய நிலையில், பிக் பாஸ் தமிழ் சீசன் 9 டைட்டில் வின்னர் திவ்யா கணேஷ் திருவண்ணாமலை கோவிலில் எடுத்த புகைப்படங்களும் இப்போது புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

Divya Ganesh Bigg Boss Tamil Tiruvannamalai

திவ்யா கணேஷ் போட்டோஸ்

சமீபத்தில் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருவண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபத்தை தரிசிப்பதற்காக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் குவிந்தனர். இந்த தீபத் திருவிழாவுக்கு சின்னத்திரை பிரபலங்களும் சென்று அண்ணாமலையாரை தரிசித்த நிலையில், பிக் பாஸ் பிரபலங்களான திவ்யா கணேஷ், ஆதிரை மற்றும் பூர்ணிமா ஆகியோரும் திருவண்ணாமலைக்கு போயிருக்கின்றனர்.

Divya Ganesh Bigg Boss Tamil Tiruvannamalai

செல்போனுக்கு அனுமதி இல்லை

கோவிலில் சாமி தரிசனம் செய்ததோடு சில புகைப்படங்களையும் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்கள். அந்த போட்டோக்கள் ரசிகர் மத்தியில் கவனத்தை ஈர்த்தாலும் இப்போது வேறு ஒரு விஷயத்தாலும் விவாதமாகி இருக்கிறது. திருவண்ணாமலை கோயிலில் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லாத நிலையில் திவ்யா கணேஷ் எப்படி கோவிலுக்குள் புகைப்படம் எடுத்தார்? என்ற கேள்வியை சிலர் எழுப்பி வருகின்றனர்.

Divya Ganesh Bigg Boss Tamil Tiruvannamalai

விளக்கம் வரவில்லை

கோயிலில் விதிமுறைகள் சாதாரண பக்தர்களுக்கும், பிரபலங்களுக்கும் ஒரே மாதிரி தானே இருக்க வேண்டும்? அப்படி இருக்கும்போது இந்த புகைப்படங்கள் எப்படி எடுக்கப்பட்டது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது குறித்து திவ்யா கணேஷ் தரப்பில் எந்த விளக்கமும் வெளியாகவில்லை. இதற்கு இடையே பிக் பாஸ் பிரபலங்கள் தொடர்பாக மற்ற விவாகரங்களும் சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வருவதால் இந்த புகைப்பட விவகாரமும் அதனுடன் சேர்ந்து கவனத்தை இருக்கிறது.

Divya Ganesh Bigg Boss Tamil Tiruvannamalai

சர்ச்சையில் பிக் பாஸ் பிரபலங்கள்

ஏற்கனவே பிக் பாஸ் தமிழ் சீசன் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது இன்ஸ்டா பிரபலம் வாஹிதா அளித்த புகாரை தொடர்ந்து, வழக்கு பதிவு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது. அதேபோல் பிக் பாஸ் பிரபலமான முகேன் ராவ் மீது தயாரிப்பாளர் தரப்பில் பணம் தொடர்பாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. அதற்கு முகேன் அறிக்கை வெளியீட்டு தன் தரப்பு விளக்கத்தையும் அளித்திருக்கிறார். இப்படி அடுத்தடுத்து பிக் பாஸ் பிரபலங்களின் பெயர்கள் வெவ்வேறு விவகாரங்களில் அடிபட்டு வரும் நிலையில் இப்போது திவ்யா கணேசன் கோவில் புகைப்படங்களும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

ஆனால் திவ்யா கணேஷ் கோவில் விதிமுறைகளை மீறினாரா? புகைப்படங்கள் எடுக்கப்பட்ட இடம் எது? அதற்கு அனுமதி இருந்ததா? என்பது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை. இருந்தாலும் கோவிலுக்குள் செல்போன் பயன்படுத்துவது தொடர்பான கேள்விகள் எழுந்திருப்பதால் இந்த விவகாரம் அவருடைய ரசிகர்கள் மத்தியிலும், இணையத்திலும் பேசப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+