ஆடை சுதந்திரம் வேற, சப்ஸ்கிரைப்ஷன் வேற! டிஜிட்டல் விபச்சாரம்! சோசியல் மீடியா பெண்ணுக்கு அனிதா பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண் சுதந்திரம் என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் நியாயப்படுத்தலாமா? ஒரு பெண் தனக்கு பிடித்த ஆடையை அணிவது அவருடைய உரிமை தான். ஆனால், அதையே பணம் கொடுத்து பார்க்கும் வகையில் சோசியல் மீடியாவில் விற்பனை செய்வதையும், ஆடை சுதந்திரத்தையும் ஒன்றாக பார்க்க முடியுமா? என ஒரு விவாதம் இப்போ இணையத்தில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இதற்கு நடிகையும் செய்திவாசிப்பாளருமான அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோவும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Anitha Sampath Tamizha Tamizha Zee Tamil

பெண் சொன்ன வார்த்தை

சமீபத்தில் தமிழா தமிழா நிகழ்ச்சியில், "பெண் சுதந்திரம் சரியான பாதையில் போகிறதா? இல்லையா?" என்ற விவாதம் நடந்தது. அதில் ஒரு பெண் பெய்டு சப்ஸ்கிரைப்ஷன் பற்றி பேசி இருந்தார். அதாவது, "எனக்கு பிடித்த டிரஸ் பண்றது என் விருப்பம், அதை காசு கொடுத்து பார்க்கிறது உங்க விருப்பம். எனக்கு பிடித்த உடை போட்டுட்டு போட்டோ எடுத்து அதை நான் பர்சனல் ஆகத்தான் வச்சிக்கிறேன், அதை செலவு பண்ணி பார்க்க நீங்க ரெடியா இருக்கீங்க, அதுக்கு நான் காசு வாங்கிட்டு காட்டுறேன். அதுவும் உனக்கு விருப்பம் இருந்தா தான்.. இல்லன்னா அந்த போட்டோக்களை நான் பர்சனலா தான் மெயின்டைன் பண்ணுவேன். இதுல யாருக்கு என்ன நஷ்டம்? எதுக்கு இதை தப்பா பாக்குறீங்க? இது ஒரு பிசினஸ் என்பது போல பேசியிருந்தார்.

தொகுப்பாளர் பதிலடி

அதற்கு நிகழ்ச்சி தொகுப்பாளரான ஆவுடையப்பன் வேறொரு கோணத்தில் பதிலளித்திருந்தார். "மது குடிப்பது உடல் நலத்துக்கு கேடு, புகை பிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும் என்று எதற்காக சினிமாக்களில் வரும் பது அறிவுறுத்தல்கள் போடுகிறார்கள் என்றால், அதை பார்த்து இன்னொருவர் பின்பற்றக் கூடாது என்பதற்காகத்தான்.

அதே போல இன்று ஒரு பெண் சோசியல் மீடியாவில் வீடியோ வெளியிட்டு மாதம் 3 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார் என்றால் அதை பார்த்து நாளை இன்னொரு பெண்ணும் இதே வழியை தேர்ந்தெடுக்கலாம், படித்து வேறு வேலைக்கு போகாமல் இந்த மாதிரி சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் அந்த பெண்ணுக்கும் உருவாக கூடும். இது சமுதாயத்து தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தும். நமது தமிழ் சமூக மரபு, இதுபோல உடலை காட்டி பணம் சம்பாதிப்பதை ஊக்குவிக்கவில்லை" என்று பதிலடி கொடுத்திருந்தார்.

Anitha Sampath Tamizha Tamizha Zee Tamil

அனிதா சம்பத் கேள்வி

இது சோசியல் மீடியாவில் அதிகமாக விமர்சனங்களை பெற்று வந்தது. இந்த நிலையில் நடிகையையும், செய்தி வாசிப்பாளருமான அனிதா சம்பத் இது குறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில், "டிஜிட்டல் விபச்சாரத்தை இது போன்ற பெண்கள் நியாயப்படுத்துவதை பார்க்க பாவமாக இருக்கிறது. ஆடை சுதந்திரமும் சப்ஸ்கிரைப்ஷனும் எப்போ ஒன்னாச்சி?

இது பிசினஸ்னா எதுக்கு பொம்பள பிள்ளைங்க படிக்கணும்? மாதம் 7 ஆயிரம் சம்பளத்துக்கு உழைச்சு வீட்டை காப்பாத்தணும்? எதுக்கு 3000 சம்பளத்துக்கு வீட்டு வேலை செய்யணும்? தாய்லாந்துல விபச்சாரம் டிமாண்டில் இருக்கு. அதுக்குன்னு யாராவது குடும்பத்தோட போய் வேலை செய்வாங்களா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். அவர் எழுப்பிய கேள்விகளுக்கு சோசியல் மீடியாவில் பலரும் சப்போர்ட் செய்து வருகின்றனர்.

Anitha Sampath Tamizha Tamizha Zee Tamil

பலருடைய கருத்து

குறிப்பாக பெண்கள் படித்து சொந்தமாக சம்பாதித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று சொல்லும் நாம், அதே நேரத்தில் இது போன்ற வருமானத்தை மட்டும் முன்னிலைப்படுத்துவது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை சிந்திக்க வேண்டும். சில ஆண்களின் சபலத்தை வைத்து நான் காசு பார்க்கிறேன் என்று சொல்லாமல் அந்த பொண்ணு சொல்கிறார்.

கஷ்டப்பட்டு படித்து, அறிவை வளர்த்து, வேலைக்கு போய் சம்பாதிப்பதை விட சோசியல் மீடியாவில் அரைகுறை ஆடை போட்டு வீடியோக்கள் போடுவதால் எனக்கு வரும் பணம் போதும் என்று சொல்வது போல அந்தப் பெண் பேசுகிறார், இது தவறான முன் உதாரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+