Gold Price Today: மீண்டும் தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஷாக்! சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை (Gold Price Today) நேற்று தடாலடியாக சரிந்து இருவ்த நிலையில் இன்று தாறுமாறாக உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. நேற்று மட்டும் சவரனுக்கு ரூ.2,360 குறைந்து இருந்த விலையில் இன்று சவரனுக்கு ரூ.960 உயர்ந்துள்ளது.

சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.960 உயர்ந்து ரூ.92,320-க்கும், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.120 அதிகரித்து ரூ.11,540-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.165-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold Price Today gold rate gold Gold price

தங்கம் விலை தாறுமாறாக சரிந்து வருகிறது. இடையிடையே சிறிது உயர்ந்தாலும் அதற்கு மறுநாளே குறைந்து விடுகிறது. குறிப்பாக கடந்த 10 ஆம் தேதியில் இருந்து தங்கம் விலை சரிய ஆரம்பித்தது. இதனால் ஒரு சவரன் மீண்டும் ஒரு லட்சத்திற்கு கீழ் சென்றது.

நேற்று தடாலடியாக சரிந்த தங்கம் விலை

ஆனால் அதோடு நிற்காத தங்கம் விலை மேலும் சரிந்து ஒரு சவரன் 92 ஆயிரத்திற்கும் கீழ் சென்றது. இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ள விலையில் நகை இப்போது வாங்கலாமா இல்லை இன்னும் குறையுமா என எதிர்பார்த்து வருகின்றனர். கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை திடீரென தங்கம் விலை உயரத் தொடங்கியது.

இரண்டு நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2 ஆயிரம் அதிகரித்து ஷாக் கொடுத்தது. இதனால் மீண்டும் தங்கம் விலை அதிகரித்துவிடுமோ என நகைப்பிரியர்கள் ஷாக்கான நிலையில் நேற்று இன்ப அதிர்ச்சி கொடுத்தது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,360 குறைந்து இன்ப அதிர்ச்சி தந்தது.

இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?

நேற்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.295 குறைந்து ஒரு கிராம் ரூ.11,420-க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.2,360 குறைந்து ரூ.91,360-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 2 நாட்களில் ரூ.2,000 உயர்ந்த நிலையில் நேற்று ஒரே நாளில் ரூ.2,360 குறைந்தது நகை பிரியர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. இந்நிலையில் தங்கம் விலை இன்று தடாலடியாக உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது.

இன்று சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.960 உயர்ந்து ரூ.92,320-க்கும், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.120 அதிகரித்து ரூ.11,540-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.165-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இன்று கூடியிருப்பதால் நகை வாங்க திட்டமிட்டவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை

26-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.92,320 (இன்று)
25-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.91,360 (நேற்று)
24-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.93,720
23-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.92,800
22-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.92,800

21-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.91,720
20-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.92,080
19-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.95,840
18-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.97,720

17-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.99,760
16-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,00,320
15-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,00,920
14-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,00,920

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+