கால்டேக்சி டிரைவரின் ஒருநாள் வருமானம் இவ்வளவா? கேட்டதும் தலை சுற்றி போன பெங்களூர் பயணி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் உள்ள வாடகை டேக்ஸி ஒன்றில் பயணித்த பயணி ஒருவர், அந்த டிரைவரின் ஒருநாள் வருமானத்தை கேட்டு வியப்பு அடைந்ததாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவுதான் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவி வருகிறது.

இந்தியாவின் சிலிகான்வேலி என்று அழைக்கப்படும் பெங்களுரில் உபேர் கார் டேக்சி ஓட்டும் டிரைவர் ஒருவர், தனது வாகனத்தில் பயணித்த பயணி ஒருவரிடம், தனது ஒருநாள் வருமானத்தை பகிர்ந்து இருக்கிறார். இதைக்கேட்டதும் வியப்படைந்த அந்த பயணி, தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது, இந்த பதிவு சோஷியல் மீடியாவில் டிரெண்ட் ஆகி வருகிறது. அந்த பதிவில் பயணி கூறியிருப்பதவது:-

Bangalore Cab Driver Call Taxi Driver IT Company
Photo Credit:

10 மணிக்குள் ரூ.4,800 வருமானம்

நேற்று இரவு பெங்களூரில் மெஜஸ்டிக் நகர் செல்வதற்காக கேப் ஒன்றை புக செய்தேன். அதில் ஏறி பயணம் செய்து கொண்டு இருந்த போது டிரைவரிடம் பேச்சு கொடுத்தேன். அவர் தன்னுடைய வாழக்கை உள்பட பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

இறுதியில் தனது ஒருநாள் வருமானம் எவ்வளவு என்பதை காட்டினார். அன்று இரவு 10.30 மணியளவில் அவரது ரூ.4,800 வருமானம் ஈட்டியிருந்தார். இன்னும் 2 மணி நேரம் வாகனம் ஒட்ட வேண்டியிருப்பதாக கூறினார். அதன்பிறகு தனது கேப் தொழில் பற்றியும் கூறினார். அவருக்கு சொந்தமாக மும்பையில் 10 எர்டிகா கார்கள் ஓடுகின்றன என்றார்.

ஐடியில் வேலை பார்ப்பவரை விட அதிகம்

ஒவ்வொரு கார் மூலமாகவும் தனக்கு ரூ.1,500 வாடகையாக கிடைப்பதாக கூறினார். உண்மையில் அந்த தொகை ரூ.15,000 ஆகும். ஒவ்வொரு நாளும் இவருக்கு இந்த வருமானம் கிடைக்கிறது. இவர் தனியாக வாகனம் ஒட்டுகிறார். மொத்தமாக இவருக்கு ரூ.20,000 ஒருநாள் கிடைக்கிறது. இது மிகவும் பெரிய தொகை, தனது கடின உழைப்பால் இந்த வருமானத்தை அவர் ஈட்டி வருகிறார்.

ஒரு நிறுவனத்தில் சீனியர் மேனேஜர் ஈட்டும் வருமானத்தை விட இது அதிகம்" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு நெட்டிசன்கள் இடையே அதிகம் விவாதப்பொருளாகியுள்ளது. நெட்டிசன்கள் சிலர் கூறுகையில், "ஐடி நிறுவனத்தில் வேலை பார்ப்பதைவிட அதிக வருமானம் கேப் டிரைவரால் ஈட்ட முடிகிறது. இனி வரும் காலத்தில் இத்தகைய வேலைகளுக்குதான் மதிப்பு அதிகம் இருக்கும்" என்று பதிவிட்டார்.

வருமானத்தை மட்டும் பார்க்காதீர்கள்

மற்றொரு நெட்டிசன் கூறுகையில், 'ஏற்கனவே ஏஐ வந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. எனவே, உடல் உழைப்பு சார்ந்த தொழில்களுக்கு இனி மதிப்பு இருக்கும் என்பது முன்பே கணித்ததுதான். எனவே, இதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை என்று பதிவிட்டுள்ளார். சில நெட்டிசன்கள் கூறும் போது, 'வெறும் வருமானத்தை மட்டும் பார்க்காதீர்கள். இதற்கு பின்னால் இருக்கும் கஷ்டங்களையும் பார்க்க வேண்டும். 4,800 என்றால் அதற்கு பின்னால் இருக்கும் இதர செலவுகளை கணக்கிட்டால் பாதிக்கு மேல் தொகை குறைந்துவிடும்" என்றார்.

ஒரு நெட்டிசன் கூறுகையில், 'நான் அண்மையில் ஒரு கேப் டிரைவரை சந்தித்தேன். அவர் ஒரு பழைய காரை லோனில் வாங்கியிருக்கிறார். பின்னர் ஒரு டிரைவரை வைத்து அதை இயக்கியதாக கூறினார். அவரும் ஒரு கேப் ஓட்டிக்கொண்டு இருக்கிறார். அவருக்கு 35 வயதுதான் இருக்கும். சொந்த நிலம், வீடு வாங்கிவிட்டார். அவரது மனைவியும் ஒரு கார் ஷோருமில் வேலை பார்க்கிறார் என்றார். இப்படி மிகவும் கஷ்டப்பட்டாலும் வருமானம் கிடைக்கும் தொழிலாகவும் இது உள்ளது' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+