தொழிலதிபர் உணவில் ஸ்லோ பாய்சன் ஸ்பிரே செய்த மனைவி.. 2 கோடி இன்சூரன்ஸ் ஆசை! 12 வயது மகள் உடைத்த உண்மை

Subscribe to Oneindia Tamil

கான்பூர்: உத்தரப் பிரதேசத்தில் ரூ.2 கோடி ஆயுள் காப்பீட்டு பணத்துக்காக கணவரின் உணவில் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கலந்து கொல்ல முயன்றதாக மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.. கணவர் மட்டுமல்லாமல் மகன், மருமகனுக்கும் இதேபோல உணவு கொடுத்திருக்கிறாராம்.. இது எல்லாவற்றையும்விட இந்த விவகாரத்தில் 12 வயது மகள் சொன்ன தகவல்தான், இந்த வழக்கில் முக்கிய ட்விஸ்ட்டாக அமைந்துள்ளது. அப்படி என்ன நடந்தது?

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்தவர் சுஷில் பட்நகர். இவர் டிராவல்ஸ் தொழில் நடத்தி வருகிறார். இவரது பிசினஸின் மதிப்பு மட்டுமே சுமார் ரூ.5 முதல் 6 கோடி வரை இருக்குமாம்.. . இவருக்கு ரேணு பட்நகர் என்ற மனைவியும், 16 வயதில் மகனும், 12 வயதில் மகளும் உள்ளனர். இந்த தம்பதிக்கு திருமணமாகி சுமார் 18 ஆண்டுகள் ஆகின்றன

Ghaziabad Lead Poisoning Insurance Fraud Case

2 கோடி இன்சூரன்ஸ்

சுஷில் பட்நகர் ரூ.2 கோடி மதிப்பிலான ஆயுள் காப்பீடு ஒன்றையும் எடுத்துள்ளார். இதில் மனைவி ரேணு நாமினியாக இருந்துள்ளார்.. நாளடைவில் கணவரின் பிசினஸ் மற்றும் காப்பீட்டு பணம் மீது ரேணுவுக்கு ஆசை வந்துள்ளது.. இதனால் கணவரையே கொன்றுவிட்டு, அந்த பணத்தை மொத்தமாக அள்ள ரேணு பிளான் போட்டிருக்கிறார்.

இதனிடையே, கடந்த ஒரு வருடமாக சுஷில் பட்நகருக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போயுள்ளது.. இதற்கு என்ன காரணம் என்றும் அவருக்கு தெரியவில்லை. நாளடைவில் உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலைமைக்கு ஆளாகிவிட்டார்..

உடம்பெல்லாம் ஈயம்

2025 ஆகஸ்ட் 21-ம் தேதி பிளட் டெஸ்ட் எடுத்து பார்த்ததில், அவரது உடலில் அளவுக்கு அதிகமாக ஈயம் இருப்பது தெரியவந்தது.. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், மற்ற மருத்துவ பரிசோதனைகளையும் அடுத்தடுத்து எடுத்துள்ளார்.. அதில் ஈய நச்சு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து காசியாபாத்திலுள்ள மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஐசியூ-வில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். அவரது உயிரைக் காப்பாற்ற டாக்டர்கள் தீவிரமான சிகிச்சை அளித்தனர்.

சுஷில் பட்நகரின் உடலில் ஈயம் அதிகமாக இருந்ததற்கான காரணம் என்ன என்று தெரியாமல் டாக்டர்களும் குழம்பினார்கள்.. அபபோதுதான், சுஷிலின் மனைவி ரேணு, நகைத்தொழில் தொடர்பான வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது... நகை தயாரிப்பில் ஈயம் அதிகமாக பயன்படுத்தப்படுவதால், டாக்டர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது..

12 வயது மகள் தந்த தகவல்

இதையடுத்து சுஷில் பட்நகர் மனைவியை பிரிந்து சில காலம் தனியாக வாழ்ந்துள்ளார்.. அந்த நேரத்தில் மறுபடியும் ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது அவரது உடலில் ஈயத்தின் அளவு குறைந்திருந்ததாம்.. இதனால் மனைவி மீது சுஷிலுக்கே சந்தேகம் வலுத்தது.

போதாக்குறைக்கு சுஷிலின் 12 வயது மகள் தன்னுடைய அப்பாவிடம், "அம்மா சாப்பாடு போடுவதற்கு முன்பு அதில் ஏதோ ஒரு பொருளை ஸ்பிரே செய்வார்.. நான் என் கண்ணால் பார்த்திருக்கிறேன்.. அம்மா தனக்கு மட்டும் சாப்பாட்டை ஒதுக்கி வைத்துவிட்டு, நம் அனைவருக்கும் உள்ள சாப்பாட்டில், அந்த பொருளை ஸ்பிரே செய்வார்" என்று சொன்னாள்.. இதைக்கேட்டதும் சுஷிலுக்கு தூக்கி வாரிப்போட்டது.

போலீசுக்கு ஓடிய தொழிலதிபர்

அப்போதுதான் தனக்கு பட்நகருக்கு மட்டுமல்லாமல், தன்னுடைய 16 வயது மகனுக்கும், 21 வயது உறவினரான தேவ் பட்நகருக்கும் உடல்நல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது சுஷிலின் கவனத்துக்கு வந்தது.. தேவ் என்பவர் சுஷிலின் டிராவல்ஸ் தொழிலில் உதவி செய்து வந்துள்ளார்.

இதில், பெரும்பாலும் உறவினர்கள் வீடுகளில் மகள் தங்கியிருந்ததால் அவளுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படவில்லை.. அதனால் மற்ற 3 பேருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, ஈய நச்சு பாதிப்பு இருந்தது உறுதியானது..

உடனே மெடிக்கல் ரிப்போர்ட்கள், மற்றும் மகள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் சுஷில் பட்நகர் போலீசுக்கு சென்று புகார் தந்தார்.. மனைவி ரேணு, மாமியார் மற்றும் மனைவியின் குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் மீது புகார் அளித்தார்.. மாமியார், மனைவியின் சகோதரர்கள் ரவி சக்சேனா, சுஷில் கிர்தார் உள்ளிட்ட 4 பேர் மீதும் புகாரில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணை தீவிரம்

இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோதுதான், .2 கோடி ஆயுள் காப்பீட்டு பணம் மட்டுமல்லாமல் கணவரின் தொழில் சொத்தையும் கைப்பற்றுவதற்காக ரேணு இவ்வாறு திட்டமிட்டது தெரியவந்துள்ளது. கணவருக்கு ஆதரவாக இருந்த மகன் இருந்தால், அவரையும் கொல்ல குறி வைத்திருக்கிறார் ரேணு.

ஈயம் எங்கிருந்து வாங்கப்பட்டது, உணவில் அதை எப்படிக் கலந்து கொடுத்தார்கள், ரேணுவின் குடும்பத்தினருக்கு இதில் தொடர்பு இருக்கிறதா? என்றெல்லாம் விசாரணை நடந்து வருகிறது.

ஒரு வருடமாக குடும்பத்தினரின் உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், மெடிக்கல் ரிப்போர்ட், மகளின் தகவல் போன்றவை இந்த விவகாரத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளன. ரூ.2 கோடி காப்பீட்டு பணத்துக்காக கணவரையும், குடும்பத்தினரையும் விஷம் கொடுத்து கொல்ல முயன்றதாக எழுந்துள்ள இந்தக் குற்றச்சாட்டுகள் காசியாபாத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+