கள்ளக்குறிச்சி.. பிரஷரை கூட்டும் உதயநிதி.. ஆளுநர் அர்லேகரை சந்திக்கிறார்! விஜய்க்கு செக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கு விஜய்க்கு பெரிய பிரஷராக மாறி உள்ளது. முக்கியமாக எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இந்த வழக்கை தீவிரமாக கையில் எடுத்துள்ளார்.

பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பித் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ சி. அருள் விக்னேஷுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தக் கோரி, தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான உதயநிதி ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்குத் தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நேரில் சந்தித்துப் பேச உள்ளார்.

kallakurichi udhayanidhi stalin

நேற்று தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்த நிலையில், தற்போது ஆளுநரையும் உதயநிதி ஸ்டாலின் சந்திக்க இருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுநர் சந்திப்பின் முக்கிய நோக்கம் என்ன?

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் இந்தச் சந்திப்பில், கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீதான பாலியல் துன்புறுத்தல் புகாரே பிரதானமாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஜூலை மாதமே பாதிக்கப்பட்ட பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி தரப்பில் உயரதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டும், சுமார் 116 நாட்களாகத் தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் எம்.எல்.ஏ-வைக் காப்பாற்ற முயன்றதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. சென்னை உயர்நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகே நவம்பர் 23-ஆம் தேதி எம்.எல்.ஏ மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

ஆனால், வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிறகும் எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் இதுவரை கைது செய்யப்படவில்லை. எனவே, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ என்பதால் காவல்துறை பாரபட்சமின்றி செயல்பட முடியாத சூழல் நிலவுவதாகவும், இந்த வழக்கை உடனடியாக சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் ஆளுநரிடம் உதயநிதி ஸ்டாலின் மனு அளிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வழக்கில் தலைமை செயலாளர் மீதே புகார் உள்ளது. இது ஒரு வகையில் சிபிஐ விசாரிக்க ஏற்ற வழக்கு. முக்கியமாக அரசே அதிகாரிக்கு எதிராக நிற்பது போன்ற புகார்கள் உள்ளன.

நேற்று டிஜிபி-யிடம் அளித்த புகாரும் எழுப்பிய கேள்விகளும்

முன்னதாக, நேற்று சென்னை கடற்கரை சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்குத் திமுக மூத்த நிர்வாகிகளுடன் நேரில் சென்ற உதயநிதி ஸ்டாலின், டிஜிபி-யிடம் விரிவான புகார் மனு ஒன்றை அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஜூலை மாதமே பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார். இந்த விவகாரத்தை மூடிமறைக்க முயன்ற தலைமைச் செயலாளரையும் இந்த வழக்கில் ஒரு குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும். புகார் அளித்த பெண் அதிகாரியிடம் 'பணியிட மாறுதல் வேண்டுமா?' எனக் கேட்டு அழுத்தம் கொடுத்துள்ளனர் என்று கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும், எம்.எல்.ஏ அருள் விக்னேஷை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும், சட்டப்பேரவை துணை சபாநாயகர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தீவிரமடையும் அரசியல் மற்றும் சட்ட நெருக்கடி

ஒருபுறம் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், ஐஜி என். காமினி மேற்பார்வையில் திருப்பூர் மாவட்ட எஸ்.பி சிருஷ்டி சிங் தலைமையிலான தனிப்படை போலீசார் இந்த வழக்கின் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். எம்.எல்.ஏ அருள் விக்னேஷுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில், மறுபுறம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் டிஜிபி சந்திப்பைத் தொடர்ந்து இன்று ஆளுநர் ராஜேந்திர அர்லேகரைச் சந்திப்பது ஆளும் தவெக அரசுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுநரைச் சந்தித்து மனு அளித்த பிறகு, உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் வெளியிட உள்ள கருத்துக்கள் தமிழக அரசியலில் அடுத்தகட்ட அதிர்வலைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+