சபரிமலையில் ஷாக்.. 7 நாட்களில் 7 பக்தர்கள் பலியான சோகம்! யாத்திரிகர்களுக்கு பறந்த அவசர எச்சரிக்கை!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நடப்பாண்டு சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை தொடங்கியிருக்கும் நிலையில் இந்த சீசனில் மட்டும் சன்னிதானத்திற்குச் சென்ற 7 பக்தர்கள் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இதய நோய், சிறுநீரக பாதிப்பு, மூச்சு திணறல் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினை உள்ளவர்கள் மலையேறி சன்னிதானத்துக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என தேவசம்போர்டு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கேரளாவின் மலைப்பகுதியில் அமைந்துள்ள சபரிமலையில் குடி கொண்டிருக்கும் தர்மசாஸ்தா ஐயப்பனை தரிசிக்க தமிழகம் மட்டுமின்றி, கேரளா, தமிழகம்,கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கமாக உள்ளது.

Sabarimalai ayyappan Temple Mandala pooja

சபரிமலைக்கு பக்தர்கள் பொதுவாக பம்பா மற்றும் எரிமேலி வழியாக புனித பயணம் மேற்கொள்கின்றனர். குறிப்பாக மண்டல மற்றும் மகர விளக்கு காலங்களில் இந்தப் பகுதி முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும்.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடைபெற்ற மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு திருவிழாவுக்காக கோவில் நடை திறக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலை ஐயப்பனை தரிசிப்பர். அந்த வகையில், நடப்பாண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு கடந்த 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. இதையடுத்து, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலைக்கு வந்து ஐயப்பனை தரிசித்து வருகின்றனர்.

சபரிமலை சன்னிதானத்திற்கு இரு வழிகளில் பக்தர்கள் சென்று வருகின்றனர். எரிமேலியில் பேட்டை துள்ளி அங்கிருந்து பெருவழிப்பாதை வழியாக சன்னிதானத்திற்கும், பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு சிறுவழி பாதையிலும் பக்தர்கள் செல்வது வழக்கம். இந்த நிலையில் நடப்பாண்டு சீசன் தொடங்கியதில் இருந்து இதுவரை சபரிமலை மற்றும் பம்பை அரசு மருத்துவமனைகளில் சுமார் 19000 பக்தர்கள் சிகிச்சை பெற்று இருக்கிறார்கள்.

இவர்களில் 14 பேர் தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்துள்ளனர். கடந்த 18ஆம் தேதி முதல் 7 நாட்களில் மட்டும் தமிழகத்தைச் சேர்ந்த விமல், ஆந்திராவைச் சேர்ந்த ராம்பாபு, வரவு ரமேஷ், கேரளாவை சேர்ந்த சுரேஷ், மல்லிகா ராஜப்பன் உள்ளிட்ட பேர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதை அடுத்து கேரளா மருத்துவத்துறை மற்றும் தேவசம்போர்டு சார்பில் பக்தர்களுக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசியுள்ள மருத்துவத்துறை அதிகாரி கேகே ஷியாம், உடல் நலம் குன்றியவர்கள், இதய நோய், சிறுநீரக பாதிப்பு மற்றும் மூச்சுத் திணறல் பிரச்சினை உள்ளவர்கள் சபரிமலை ஏறுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும் உடல் நலன் பாதிக்கப்பட்டவர்கள் தேவையான முதலுதவி சிகிச்சை பெற்ற பிறகே மலையேறும் பயணத்தை தொடர வேண்டும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதற்கிடையே, சபரிமலைக்கு வரும் பக்தர்கள் வனவிலங்குகளுக்கு உணவு வழங்கக் கூடாது என ரான்னி வனச்சரக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சன்னிதானம் செல்லும் வழிகளில் வனத்துறையின் பாம்பு பிடிக்கும் குழுவினரும், யானைகளை விரட்டும் குழுவினரும் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஒரு வாரத்தில் விஷத்தன்மை அதிகம் கொண்ட பாம்புகள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட பாம்புகள் பிடிக்கப்பட்டு, அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டுள்ளன எனவும், சபரிமலைக்கு வரும் பக்தர்கள் வனவிலங்குகளுக்கு எந்தவிதத்திலும் தொல்லை கொடுக்காமல் தங்களது பயணத்தைத் தொடர வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+