கள்ளக்குறிச்சி எம்எல்ஏ வழக்கு.. சரியான பாதையில் போகுது! திருமாவளவன் பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் தொல் திருமாவளவன், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ வழக்கு சரியான திசையில் செல்வதாக கூறினார். மேலும் தேவைப்பட்டால் தவெக எம்.எல்.ஏவை அரசு கைது செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அவர் பேசினார்.

பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது வழக்கு பதியப்பட்டுள்ள சம்பவம் தமிழகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை மாதமே இது பற்றி பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி தெரிவித்தும், சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டபோதும் நடவடிக்கை எடுக்காத தவெக அரசு நீதிமன்றம் கூறிய பிறகு எம்.எல்.ஏ மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Thirumavalavan

இந்த விவகாரம் குறித்து திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் தவெக அரசுக்கு கேள்வி எழுப்பி வரும் நிலையில் முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் இது பற்றி வாய் திறக்காமல் இருந்து வருகின்றனர். முன்பு செய்தியாளர்களை சந்திக்கும் போது அமைச்சர்கள் இப்படி ஒரு சம்பவம் நடக்காதது போலவே பேசியிருந்தனர். ஆனால் இப்போது தவெக அரசு தரப்பில் எந்த ஒரு பதிலும் வரவில்லை.

திருமாவளவன் பேச்சு

இது தொடர்பாக சென்னை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் தொல் திருமாவளவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-

ஜாதி, மதத்தின் பெயரால் நடைபெறும் ஆணவக்கொலைகளை தடுக்க தனி சட்டம் வேண்டும். அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், பெண்கள், மனித உரிமை அமைப்புகள் உள்ளிட்டோர் இந்த குழுவை நேரில் சந்தித்து தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். விசிக சார்பில் எங்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளோம்.

சரியான பாதையில் செல்கிறது

கள்ளக்குறிச்சி விவகாரம் என்பது, பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் முறைப்படி புகார் கொடுத்த பிறகு சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. அந்த குறிப்பிட்ட தவெக எம்.எல்.ஏ. மீது வழக்குகள் பதிவாகியுள்ளது. சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக நான் நம்புகிறேன். எடப்பாடி பழனிசாமி சொல்வது போல், பாதிக்கப்பட்டவர்கள் முறைப்படி புகார் கொடுத்தால், நடவடிக்கை எடுக்க அரசை நாங்களும் வலியுறுத்துவோம்.

இந்த பிரச்சினை ஆட்சியை கவிழ்க்கக்கூடிய அளவுக்கு, அல்லது ஆட்சியை இழக்கக்கூடிய அளவுக்கு அழுத்தத்தை தரும் என நம்பவில்லை. அவர் மீது உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு. அதை அரசே செய்துள்ளது. தேவைப்பட்டால் தவெக எம்.எல்.ஏவை அரசே கைது செய்ய வாய்ப்புள்ளது. என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+