திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்திலேயே தீபம் ஏற்ற தமிழக அரசு தயார்! தொல் திருமாவளவன்

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்றத்தில் உச்சி பிள்ளையார் கோயிலில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற தமிழக அரசு தயாராக உள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தாலும் அதை சந்திக்கும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் தொல் திருமாவளவன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில்: மதுரையில் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் தடையை மீறவில்லை. மத நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதே அரசின் நிலைப்பாடு.

Thirumavalavan

நாங்கள் அமைதிப் பேரணி நடத்துவதாகத்தான் அறிவித்திருந்தோம். பேரணிக்கு காவல்துறை அனுமதி அளித்திருக்கலாம். ஆனால், வேறு சூழல்களைக் கருத்தில் கொண்டு காவல்துறை அனுமதி மறுத்திருப்பதாகக் கருதுகிறோம். பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்த மாட்டோம். அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், காவல்துறையின் தடையை மீறி பேரணி நடத்தும் நடவடிக்கையில் நாங்கள் ஈடுபடவில்லை.

தமிழ்நாடு அரசு எடுத்திருக்கக் கூடிய நிலைப்பாட்டுக்கு மாறாக நீதிமன்றத் தீர்ப்பும், இன்றைய உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவும் அமைந்திருக்கிறது. தமிழ்நாடு அரசு பாரம்பரியமாக, வழக்கமாக எந்த இடத்தில் தீபம் ஏற்றப்பட்டதோ, அதே இடத்தில் தீபம் ஏற்றுவதற்குத் தயாராக இருக்கிறது. அதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு. அதுதான் தமிழ்நாட்டு மக்களின் உணர்வும் கூட!.

இந்து மக்களுக்கு எதிராக தமிழ்நாடு அரசும் இல்லை; கூட்டமைப்புகளும் இல்லை. மத அடிப்படையில் பிரச்சனையைத் தூண்டி நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க முயற்சிப்பதைத் தடுக்கவே தமிழ்நாடு அரசு போராடிக் கொண்டிருக்கிறது. சட்டரீதியாக இஸ்லாமிய கூட்டமைப்புகளைச் சார்ந்த நாங்களும் போராடிக் கொண்டிருக்கிறோம்.

அரசியல் ரீதியாகவும் இந்த விவகாரத்தில் எங்களுடைய நிலைப்பாடு தெளிவாக இருக்கிறது. உச்ச நீதிமன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், தமிழக அரசு உச்சிப்பிள்ளையார் கோவில் மேல் தீபம் ஏற்றினால், நீதிமன்ற அவமதிப்பு ஏற்படாதா என நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, உச்ச நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தால் அதனை சந்திப்பதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது எனவும் பேசினார்.

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் விளக்கேற்றுவது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த இரு தினங்களுக்கு முன்பு வந்தது. அப்போது இந்த முறை திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. அதே நேரம் ஒரு முறை தீபம் ஏற்ற அனுமதிப்பதை இறுதி அங்கீகாரமாக கருதக் கூடாது என்றும் அடுத்தடுத்த ஆண்டுகளில் இது போன்ற வழிபாடுகளைக் கோருவதற்கு இதை பயன்படுத்த முடியாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பை தமிழக அரசியல் கட்சியினர் ஒரு சாரார் வரவேற்கின்றனர், மறு சாரார் எதிர்கின்றனர். இந்த நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வரவில்லை. நாளை விடுமுறை என்பதால் எப்போது விசாரணைக்கு வரும் என்பது தெரியவில்லை.

இதனிடையே நாளை கார்த்திகை தீபம் என்பதால் திருப்பரங்குன்றத்தில் அசம்பாவிதங்களை தடுக்க 16 பட்டாலியன் படைகள் வருகை தந்துள்ளனர். மேலும் அந்த பகுதியில் பல்வேறு கட்டுப்பாடுகளை மதுரை மாநகர காவல் துறை விதித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+