கஷ்டத்தில் இருக்கும்போது.. திருவண்ணாமலை ஆலயத்தில் கிடைத்த தீர்வு.. உருக்கமாக பேசிய நடிகர் வெங்கடேஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமாவில் எவ்வளவு தான் வெற்றி, புகழ், பணம் கிடைத்தாலும் மனதுக்குள் இருக்கும் சில கேள்விகளுக்கும், கவலைகளுக்கும் பதில் கிடைக்காமல் தவிப்பவர்கள் இருக்கிறார்கள். அப்படி ஒரு காலகட்டத்தை தான் கடந்து வந்ததாக நடிகர் வெங்கடேஷ் ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசி இருக்கிறார். அதிலும் அவருக்கு திருவண்ணாமலையில் கிடைத்த ஆன்மீக அனுபவத்தை பற்றி அவர் பகிர்ந்திருக்கும் விஷயங்கள் இப்போது இணையத்தில் பலருடைய கவனத்தை ஈர்த்து வருகிறது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் வெங்கடேஷ் தமிழிலும் பலருக்கு நன்கு அறிமுகமானவர். 90 காலகட்டத்தில் தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக குடும்ப கதைகள், காமெடி, ஆக்சன் என பல வகையான படங்களில் நடித்து தனக்கான ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர். ஆனால் திரையில் எப்போதும் ஆக்டிவாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும் அவருக்குள்ளும் ஒரு காலகட்டத்தில் மன அமைதி இல்லாத சூழல் இருந்திருக்கிறது.

Venkatesh

நடிகர் வெங்கடேஷ் பேட்டி

அந்த அனுபவத்தை பற்றி அவர் ஒரு பேட்டியில் பேசும்போது, "நான் ரொம்ப கவலையில் இருந்தேன். எனக்கு சரியான தீர்வு கிடைக்கல, கடைசியாக திருவண்ணாமலையில் தான் தீர்வு கிடைத்தது. அங்கு வந்து தியானம் பண்ணுனேன், மனதார கும்பிட்டேன். எனக்குள்ள ஏதோ ஒரு சக்தி பலம் என்னோட உடம்புக்குள்ள இறங்குறதை நானே உணர்ந்தேன். மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு கடவுள் சக்தியை நான் அந்த இடத்தில் உணர்ந்தேன்" என்று வெங்கடேஷ் பேசி இருக்கிறார்.

வாழ்க்கையை மாற்றிய அனுபவம்

அதாவது பல இடங்களுக்கு போய் மனதுக்கு நிம்மதி கிடைக்காத நிலையில், திருவண்ணாமலைக்கு வந்த பிறகு தியானம் செய்ததும் அங்கிருந்து ஆன்மீக சூழலில் மனதார வழிபட்டதும் தனக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியதாக அவர் சொல்லி இருக்கிறார். இது ஏதோ ஒரு கோவிலுக்கு சென்று வந்த அனுபவம் என்று மட்டும் கடந்து போகக்கூடிய விஷயமாக அவருக்கு இருக்கவில்லை. அதற்கு பிறகு வாழ்க்கையை பார்த்த தன்மை மாறியதாகவும், அவர் அந்த பேட்டியில் பேசி இருக்கிறார்.

ஆன்மீக பாதை

வெங்கடேஷ் பல வருஷங்களுக்கு முன்பே தனது வாழ்க்கையில் ஆன்மீகத்துக்கு இருக்கும் இடத்தை பற்றி பேசி இருக்கிறார். படங்களில் வெற்றி, தோல்வி இரண்டையும் ஒரே மாதிரியாக எடுத்துக் கொள்ள ஆன்மீக பார்வை தனக்கு உதவியதாகவும் கூட சில பேட்டிகளில் பேசி இருக்கிறார். ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து வெற்றி படங்களில் தான் நடித்தும் கூட மனதிற்குள் ஒரு அமைதி இல்லாமல் இருந்தது. அதற்கான பதிலை தேடிய பயணத்தில் ஆன்மீகம் தனக்கு வழிகாட்டியதாக கூறியிருக்கிறார்.

நடிகராக பல வெற்றி படங்களை கொடுத்த வெங்கடேஷ், தனது வாழ்க்கையில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக திருவண்ணாமலை அனுபவத்தை பார்க்கிறார். இப்போது அந்த பேட்டி மீண்டும் வைரலாகி வரும் நிலையில் திருவண்ணாமலைக்கு வந்து சென்றால் மனதுக்கு ஒரு தெளிவு கிடைக்கும் என்று நம்பும் பக்தர்களும் வெங்கடேஷின் அனுபவத்தை பாராட்டி வருகிறார்கள். சினிமா புகழுக்கு அப்பால் ஒரு மனிதனின் தனிப்பட்ட தேடலும், அதற்கு அவர் கண்டு கொண்ட ஆன்மீகப் பாதையும் இந்த பேச்சின் மூலம் மீண்டும் பேசு பொருளாகி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+