சுப்பிரமணியன் சாமி செய்த காரியம்.. கருணாநிதி ஸ்பாட்டில் வெளியேறிய பின்னணி! அது விஜய்க்கும் நடக்குமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்துள்ள விஜய் அரசுக்கு இப்போது புதிய சிக்கல் எழுந்துள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக அரசு செயல்பட்டால் என்ன நடக்கும்? இதற்கு முன்பு கருணாநிதி ஆட்சியில் இதேபோன்ற ஒரு சூழல் ஏற்பட்டபோது நடந்தது என்ன? தமிழக அரசியலில் மீண்டும் பேசப்படும் அந்த பழைய சம்பவம் என்ன? இதுகுறித்த எக்ஸ்க்ளூசிவ் தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் கார்த்திகைத் தீபம் ஏற்றுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதியளித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து, சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ள விஜய்யின் தவெக அரசு மீது இந்து அமைப்புகளும், பாஜக மற்றும் சிவசேனா உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் கடும் கோபத்தில் இருக்கின்றனவாம்.

இதற்காக தங்களின் கண்டனங்களை தெரிவித்திருப்பதால், தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம்.

Subramanian Swamy

சீராய்வு மனு விசாரணை

நவம்பர் 24-ந்தேதி கார்த்திகைத் தீபம் என்பதால், அதற்கு முன்னதாக தங்களின் சீராய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என விஜய் அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இந்து சமய அறநிலையத்துறை வலியுறுத்தியிருப்பதால், சீராய்வு மனு, இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுமா? அல்லது தள்ளி வைக்கப்படுமா? அல்லது மனு நிராகரிக்கப்படுமா? என்கிற கேள்விகளும் எதிர்பார்ப்புகளும் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு தவெக அரசு கட்டுப்ப டாமல் போனால், முக்கியமான சட்டச் சிக்கல்களை விஜய் அரசு எதிர்கொள்ள வேண்டியது வரலாம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

திமுக தலைவர் கருணாநிதி

குறிப்பாக, திமுக தலைவர் கருணாநிதியின் 2006-2011 ஆட்சி காலத்தில், அன்றைக்கு மத்தியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசில் திமுகவும் அங்கம் வகித்தது. அப்போது, சேது சமுத்திரம் திட்டத்தைக் கொண்டு வந்தார் மத்திய அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு. கருணாநிதியின் அனுமதியுடன் இந்த திட்டம் பெரிய பட்ஜெட்டில் கொண்டு வரப்பட்டது.

ஆனால், ஹிந்துக்களின் ஆன்மீக நம்பிக்கையை உடைக்கும் வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டதாக குற்றம்சாட்டி, திட்டத்துக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார் சுப்பிரமணிய சாமி. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், திட்டத்திற்கு தடை விதித்தது. இதனை ஜீரணிக்க முடியாத, டி.ஆர்.பாலு, கருணாநிதியிடம் விவாதித்தார். திமுக சீனியர் அமைச்சர்களும் அந்த விவாதத்தில் கலந்து கொண்டனர். உயர்மட்ட குழுவிலும் ஆலோசிக்கப்பட்டது.

கருணாநிதிக்கு போன தகவல்

இதனையடுத்து உச்சநீதிமன்றத்துக்கு எதிராக திமுக சார்பில் தமிழகம் தழுவிய பந்த் நடத்துவது என முடிவாகி, அதன்படி பந்த் நடந்தபோது, முதல்வராக இருந்த கருணாநிதியும் சென்னையில் பந்த் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

ஆனால், இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையி ட்ட சு.சாமி உள்ளிட்டவர்கள், நீதிமன்ற உத்தரவை மதிக்காமலும் அரசியலமைப்பு சட்டத்தை மீறுகிற வகையிலும் ஆளும் அரசே பந்து நடத்துவதும் அதில் முதல்வர் கலந்துகொள்கிறார் என்றும் சுட்டிக்காட்டி, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக உள்ள திமுக அரசு மீது உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

அமுங்கிப்போன விவகாரம்

இதனை கவனத்தில் கொண்ட உச்சநீதிமன்றம், தங்களின் உத்தரவுகளை மீறும் வகையிலும் அரசியல் அமைப்புக்கு எதிராகவும் தமிழக அரசு நடந்து கொண்டால், அந்த அரசை கலைக்கச் சொல்லி, மத்திய அரசுக்கு சிபாரிசு செய்ய வேண்டியதிருக்கும் என சொன்னது. இந்த தகவல் கருணாநிதிக்கு சொல்லப்பட்டதும், போராட்ட ஸ்பாட்டில் இருந்து வெளியேறினார் அன்றைய முதல்வர் கருணாநிதி. இதனால், திமுக அரசுக்கு எதிரான சட்டச் சிக்கல் அமுங்கிப் போனது.

அதேபோன்ற ஒரு சூழல் தற்போது தவெக அரசுக்கு, திருப்பரம்குன்றத்தில் தீபம் ஏற்றுவதில் ஏற்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முரணாக விஜய் அரசு நடந்து கொண்டால், சட்டச் சிக்கலை எதிர் கொள்வதிலிருந்து விஜய் தப்பிக்க முடியாது என்று நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்...!!!

- நமது சிறப்பு நிருபர் எழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+