ஆலோசனையில் முதல்வர் விஜய்! அனைத்துக்கட்சிகள் சார்பில் வெளியான கூட்டறிக்கை! என்ன செய்யப்போகிறது அரசு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருப்பரங்குன்றம் தீப விஷயத்தில் உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு கொடுத்திருக்கிறது. இன்று முதலமைச்சர் விஜய் கூட்டணி கட்சி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார். இந்நிலையில் அனைத்துக் கட்சிகள் கூட்டறிக்கை வெளியாகியிருக்கிறது.

அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "திருப்பரங்குன்றத்தில் மதவெறி அரசியலை முறியடிப்போம்! அமைதியையும், மத நல்லிணக்கத்தையும் பாதுகாப்போம்! - அனைத்துக் கட்சிகள் கூட்டறிக்கை.

Tiruparankundram deepam

திருப்பரங்குன்றத்தை மையப்படுத்தி மதவெறி சக்திகள் பதற்றத்தை ஏற்படுத்த முயல்வதைப் புறக்கணித்து, மதுரை மாவட்ட மக்கள் தொடர்ந்து அமைதியையும், நல்லிணக்கத்தையும் பேணி பாதுகாத்து வந்துள்ளனர். இது வரவேற்கத்தக்கதாகும்.

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகளின் இடைக்கால உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதை வரவேற்கிறோம்.

இந்நிலையில், நவம்பர் 24-ம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று, காலம் காலமாக தீபம் ஏற்றப்பட்டு வரும் திருப்பரங்குன்றம் மலையில், உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே கோவில் நிர்வாகத்தின் சார்பில் வழக்கம்போல் தீபம் ஏற்றப்பட வேண்டும் என அனைத்துக் கட்சிகள் சார்பில் வலியுறுத்துகிறோம்.

மதவெறி சக்திகளின் ஆத்திரமூட்டலுக்கும், திசைதிருப்பும் முயற்சிகளுக்கும் இரையாகாமல், மதுரை மாவட்ட மக்கள் அனைவரும் அமைதியையும், மத நல்லிணக்கத்தையும் பாதுகாத்திட முன்வருமாறு இந்திய தேசிய காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள்,மதிமுக, சிபிஐ(எம்-எல்) ஆகிய கட்சிகளின் மதுரை மாவட்ட அமைப்புகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+