தனுஷின் "ஓம்” 3 நாளில் இத்தனை கோடி வசூலா? இது என்ன கண்கட்டி வித்தையா இருக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷின் ஓம் படம் வெளியான முதல் நாளிலிருந்து விமர்சனங்கள் ஒரே மாதிரியாக இல்லாமல் கலவையாகவே வந்து கொண்டிருக்கிறது. சிலர் படத்தை பாராட்டி வருகின்றனர். இன்னும் சிலர் எதிர்பார்த்த அளவுக்கு படம் இல்லை, சில விஷயங்கள் கதையோடு ஒட்டவே இல்லை என்று விமர்சிக்கிறார்கள். இப்படி படம் கலவையான கருத்துக்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் பாக்ஸ் ஆபீஸ் மட்டும் நல்ல வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறது. இப்போது 3 நாள் வசூல் நிலவரம் வெளியாகி அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமை நவம்பர் 20ஆம் தேதி தியேட்டரில் வெளியான "ஓம்" படம் முதல் நாளிலேயே இந்தியாவில் 18. 10 கோடி வசூல் செய்து, தனுஷுக்கு நல்ல ஓபனிங் கிடைத்த நிலையில் 2வது நாளில் வசூல் கொஞ்சம் குறைந்தது. முதல் நாளே படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வர தொடங்கி விட்டதால் இனி வசூல் அவ்வளவுதான் என்று எல்லோரும் நினைத்திருந்தனர். ஆனால் சனிக்கிழமை 16.25 கோடியும் ஞாயிற்றுக்கிழமையான நேற்று 3வது நாளில் 15. 90 கோடியும் வசூல் செய்ததாக ஆரம்ப கட்ட பாக்ஸ் ஆபிஸ் கணக்குகள் தெரிவிக்கின்றன.

Dhanush

3 நாட்கள் வசூல் நிலவரம்

முதல் நாள், இரண்டாவது நாள் என வசூலில் சின்ன சரிவு இருந்தாலும் 3வது நாளிலும் 15 கோடிக்கு மேல் வசூல் வந்திருப்பது தான் கவனிக்க வேண்டிய விஷயம். அதாவது வார இறுதி நாட்களில் படம் பார்க்க வரும் ரசிகர்களின் கூட்டம் பெரிதாக குறையாமல் தொடர்ந்து ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இதன் மூலம் 3 நாட்களில் இந்தியாவில் 50.25 கோடி நெட் வசூலை ஓம் தாண்டி இருக்கிறது. இந்திய கிராஸ் வசூல் 58.30 கோடி என்றும், வெளிநாடுகளில் 27 கோடி வசூல் கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் வசூல் நிலவரம்

இதனால் உலகம் முழுவதும் 3 நாள் முடிவில் 85.30 கோடி கிராஸ் வசூலை படம் எட்டி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்த படம் 100 கோடி கிளப்பில் இணையுமா? என்ற எதிர்பார்ப்பும் இப்போ ரசிகர்களிடம் இருக்கிறது. தமிழில் மட்டும் 3 நாட்களில் 37.30 கோடி நெட் வசூல் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. இப்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அடுத்த நாட்களிலும் இந்த வசூல் குறையாமல் தொடருமா? என்பதுதான். காரணம் வார இறுதி நாட்கள் முடிந்து இன்று திங்கள்கிழமை முதல் படம் எந்த வேகத்தில் செல்கிறது என்பதுதான் உண்மையான கெத்தை காட்டும்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும் வசூலில் தனுஷின் ஓம் நல்ல தொடக்கத்தை பெற்றிருப்பது மட்டும் இப்போதைக்கு தெளிவாக தெரிகிறது. இதை பார்க்கும்போது, யார் எப்படி விமர்சனம் செஞ்சாலும் செஞ்சுட்டு இருங்க, நாங்க படத்துக்கு ஆதரவு கொடுப்போம் என்று ரசிகர்கள் சொல்கிறார்களா? அல்லது வெளியான வசூல் நிலவரம் பொய்யான தகவலா? என்பதும் பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதனாலயே பட குழு அதிகாரப்பூர்வமான வசூல் நிலவரத்தை வெளியிடுவதை பார்ப்பதற்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+