மீன ராசிக்கு பண மழை கொட்டப்போகுது.. டென்ஷன் எல்லாம் ஓடிப்போகும்.. முக்கிய மாற்றம் காத்திருக்கு

Subscribe to Oneindia Tamil

Rasi palan this week: நவம்பர் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையிலான (கார்த்திகை 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மீனம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rasi-palan-this-week-what-kind-of-benefits-will-meenam-people-get-from-nov-23-to-29

கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. மீனம் ராசியில் சூரியன் வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதமாகும். மீனம் என்பது குரு வீடு. பகை வீட்டில் சூரியன் இருக்கிறார். பெரிய தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், இசைக் கலைஞர்கள் எல்லோரும் இந்த மாதத்தில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், நவம்பர் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையிலான (கார்த்திகை 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

மீனம் ராசி பலன்

மீனம் ராசியினருக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். பணத்திற்குப் பஞ்சமே இருக்காது. கொடுத்த வாக்கை காப்பாற்றக்கூடிய அற்புதமான அமைப்பு. திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். மற்றவர்கள் உங்களுக்கு லாபமாக மாறுவார்கள். இதுவரை இருந்து வந்த குடைச்சல், தொந்தரவுகள், டென்ஷன் நீங்கக்கூடிய காலகட்டம்.

கவனம்

வயிறு உபாதைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அல்சர் வரும். வயிற்றில் கல், அஜீரண கோளாறு போன்றவை ஏற்படும். 25, 26 ஆகிய நாட்களில் மனக் குழப்பம் வரும். எடுத்த காரியங்கள் தள்ளிப்போகும். அதிகமாக செலவுகள் ஏற்படுவது, பணத்தை கொடுத்து சிக்குவது போன்ற சூழல் இந்த இரு நாட்கள் உள்ளாதல் கவனம் தேவை. பயணம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெறும் யோகம் உண்டு.

திடீர் வளர்ச்சி

அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் சுக்கிரன், புதன் திடீர் வளர்ச்சியைக் கொடுப்பார். எதிர்பார்க்காத பண வரவு, திருப்தி, லாபம், மன சந்தோஷம் ஏற்படக்கூடிய நல்ல காலகட்டம். தோல் சம்பந்தப்பட்ட விஷயங்கள், இரவு நேர பயணங்களில் கவனம் தேவை. 5 ஆம் தேதிக்குப் பிறகு எல்லா விஷயத்திலும் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும்.

பொறுப்புகள் கூடும்

வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் ஏற்படும். இடமாற்றம், தொழில் மாற்றம், வேலை மாற்றம் ஏற்படும். பொறுப்புகள் அதிகரிக்கும் வாரமாக இருக்கும். வேலையில் சிறு அழுத்தம் இருக்கலாம். காமாட்சியம்மன் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். எந்த விஷயத்துக்கும் உடனடியாக பதில் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. சந்தோஷம், பொருளாதாரத்தில் 85 சதவீதம் அற்புதமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+