வேலுமணி பதிவுக்கு ஆர்.பி.உதயகுமார் நச்! சமரசத்துக்கு எடப்பாடி சம்மதமா? அதிமுகவில் நடப்பது என்ன?

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி , எஸ்.பி.வேலுமணி இடையே நடக்கும் கருத்து பரிமாற்றம் இப்போது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. முதலில் எடப்பாடி பழனிசாமி ஒரு பேட்டியில் வேலுமணி குறித்து பேசினார். அதற்கு பிறகு வேலுமணி சோஷியல் மீடியாவில் தனது கருத்தைப் பதிவு செய்தார். இந்த சூழலில், ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியிருப்பது மீண்டும் விவாதத்தை கிளப்பியுள்ளது. எடப்பாடிதான் எங்களுக்கு சுப்ரீம் கோர்ட் என்று அவர் சொன்னதன் பின்னணி என்ன? அதிமுகவில் என்ன நடக்கிறது?

அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் மீண்டும் இணைக்கப்படுவார்களா என்ற கேள்வி சமீபத்தில் எடப்பாடி பழனிசாமியிடம் எழுப்பப்பட்டது.

AIADMK

இதற்குப் பதிலளித்த எடப்பாடி, "சசிகலா தனிக்கட்சி தொடங்கியவர், அந்தக் கட்சியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுவிட்டார். டிடிவி தினகரனும் தனிக்கட்சி தொடங்கி பல தேர்தல்களில் போட்டியிட்டு, இப்போது அதிமுக கூட்டணியில் இருக்கிறார்" என்றார்.

உடனே செய்தியாளர்கள், எஸ்.பி.வேலுமணி குறித்துக் கேள்வி எழுப்பவும், "அதிமுக ஒன்றிணைப்பு குறித்து வேலுமணி பேசுகிறார் என்றால் அவர் ஒரு தனிநபர், அதிமுகவில் உள்ள 2 கோடி பேரில் அவரும் ஒருவர். அவர் பேசுவதையெல்லாம் வைத்து இப்படி கேள்வி கேட்காதீங்க" என்றார்.

எஸ்பி வேலுமணி பதிவு

எடப்பாடி பழனிசாமியின் இந்தப் பேட்டிக்குப் பிறகு, எஸ்.பி.வேலுமணி தனது சோஷியல் மீடியா பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், 2 கோடித் தொண்டர்களால்தான் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பொறுப்புக்கு வந்துள்ளார், ஒவ்வொரு தொண்டரின் குரலையும் தலைமை கேட்க வேண்டும்,

சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்டவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், கட்சியில் இருந்து விலகியவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்றும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார்

ஆர்.பி. உதயகுமார் பேட்டி

இப்படிப்பட்ட சூழலில்தான் ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது, "மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சியான திமுக அதிகார துஷ்பிரயோகம் செய்தும், பணப்பட்டுவாடா செய்தும், வாக்காளர்களை மிரட்டியும் வெற்றி பெற்றுள்ளது. முதல்வர் விஜய் 6 மாத கால ஆட்சியின் லட்சணம் மக்களுக்குத் தெரிந்துவிட்டது.

தவெக அரசுக்கு மெஜாரிட்டி இல்லை. அதிமுக எம்எல்ஏக்களை இழுத்து, பிள்ளை பிடிக்கும் வேலையைத்தான் தவெகவினர் செய்து வருகிறார்கள். எப்போது வேண்டுமானாலும் சட்டப்பேரவையில் மெஜாரிட்டியை நிரூபிக்கக் கோரும் உரிமை எதிர்க்கட்சிகளுக்கு உண்டு.

அதிமுக ஒரு ஜனநாயக இயக்கம். பொதுச்செயலாளர் மீது கொண்ட நம்பிக்கையில் கருத்துகளைச் சொல்ல எங்களைப் போன்ற நிர்வாகிகளுக்கும், 2 கோடி தொண்டர்களுக்கும் முழு உரிமை உண்டு.

"எங்கள் பொதுச்செயலாளர்"

ஆனால், "எங்கள் பொதுச்செயலாளர்" என உரிமையோடு கூறும் அண்ணன் எஸ்.பி.வேலுமணி போன்றவர்கள், தங்களது கருத்துகளை ஊடகங்கள் வழியாக விவாதிப்பதைக் காட்டிலும், பொதுச்செயலாளரிடம் நேரடியாக எடுத்துரைத்துத் தீர்வு கண்டால் தொண்டர்களுக்கு இன்னும் உற்சாகமாக இருக்கும். அறிவுரைகளும் ஆலோசனைகளும் நிச்சயம் கேட்கப்படும். உரிய முடிவைப் பொதுச்செயலாளர் எடுப்பார்."

கடந்த காலங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகச் செயல்பட்டவர்களையும் மன்னித்து, அவர்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கைகளைத் திரும்பப் பெற்று, மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்து வெற்றி பெறச் செய்தவர் எங்கள் பொதுச்செயலாளர். சமரசத்திற்கு அவர் எப்போதும் தயாராகவே இருக்கிறார்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

பிரிந்தவர்கள் சேர்வார்களா?

அதிமுக தலைவர்களின் அடுத்தடுத்த இந்த பேட்டிகள் தொண்டர்களின் கவனம் பெற்று வருகின்றன.. எடப்பாடி பழனிசாமியின் பேட்டியைப் பார்த்தால், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் அதிமுகவில் இணைப்பது தொடர்பாக அவர் எந்த சாதகமான அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது தெரிகிறது. அதேபோல், வேலுமணியின் கருத்தை ஒரு தனிநபரின் கருத்தாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், கட்சியின் முக்கிய முடிவுகளை எடுப்பது பொதுச்செயலாளர்தான் என்ற தனது நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

உதயகுமார் சொல்வது என்ன?

வேலுமணி உள்ளிட்ட நிர்வாகிகளுக்குக் கருத்து சொல்ல உரிமை உண்டு என்பதை உதயகுமார் ஏற்றுக்கொள்கிறார். அதே நேரத்தில், அந்தக் கருத்துகளை மீடியாக்களில் விவாதிக்காமல் எடப்பாடியிடம் நேரடியாகப் பேச வேண்டும் என்கிறார். இதன் மூலம், கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் மேலும் அதிகரிக்காமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்பதையே அவர் வலியுறுத்துகிறாரா என்ற கேள்வி எழுகிறது.

தேர்தல் கணக்கு

அதுமட்டுமல்ல, அடுத்தகட்ட தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில், அதிமுக தனது பலத்தைத் தக்கவைத்துக்கொள்வது முக்கியம். கட்சிக்குள் கருத்து மோதல்கள் நீடித்தால், ஆளுங்கட்சியை எதிர்கொள்வதிலும் தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பதிலும் சிக்கல் ஏற்படலாம். அதனால் கட்சியில் இருந்து விலகியவர்களை மீண்டும் இணைப்பதும், மூத்த நிர்வாகிகளின் கருத்துகளுக்கு இடமளிப்பதும் கட்சியை வலுப்படுத்த உதவும் என்பதே வேலுமணியின் பதிவில் வெளிப்படும் கருத்து.

இந்நிலையில், எடப்பாடி சமரசத்துக்குத் தயாராக இருக்கிறார் என்று உதயகுமார் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. கட்சிக்குள் இணக்கமான சூழலை உருவாக்கும் முயற்சி நடக்கிறதா என்பதுதான் இப்போதைய அரசியல் கேள்வி...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+