சென்னை உட்பட 11 மாவட்டங்களில் இன்னைக்கு சம்பவம் இருக்கு! கொட்டப்போகும் கனமழை!
சென்னை: தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழையின் 2ம் கட்டம் தொடங்கியிருக்கிறது. இன்று காலை முதல் சென்னையில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில், இன்று முழுவதும் சென்னையில் மழை நீடிக்கும் என்றும், இது தவிர செங்கல்பட்டு, திருவள்ளூர் என 11 மாவட்டங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, விழுப்புரம் மற்றும் கடலூரில் இன்று கனமழை பெய்யும்" என எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

டெல்டா மாவட்டங்கள் தற்போது பாசனத்திற்கு நீர் இல்லாமல் காய்ந்து கிடக்கிறது. இப்படி இருக்கையில், டெல்டாவில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று அறிவித்திருப்பது விவசாயிகள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications
