கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ்! தலைமைச் செயலாளருக்கு புகார் வரவில்லை! காவல் துறை விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக சொல்லப்படும் விவகாரத்தில் தலைமைச் செயலாளருக்கு எந்தவித புகாரும் வரவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல் துறை தரப்பு விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் திரிசூலி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக செய்தித்தாள்கள், செய்தி தொலைக்காட்சி மற்றும் சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளிவந்துள்ளன.

kallakurichi

இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் முறைப்படி புகார் அளிக்க வேண்டும் என காத்திருக்காமல் பொதுவெளியில் உள்ள தகவல்களை வைத்து விசாரணை நடத்த வேண்டும்.

எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு டிஜிபி, கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பிக்கும் உத்தரவிட வேண்டும். டிஜிட்டல் ஆதாரங்களை சேகரித்து பத்திரப்படுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்றைய தினம் நீதிபதி லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது செய்தித்தாள்களில் வெளிவந்த செய்தியின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு எப்படி உத்தரவிட முடியும்? ஆபாச குறுஞ்செய்தி தொடர்பாக மாவட்ட ஆட்சியர் எதுவும் புகார் அளித்துள்ளாரா?

ஆட்சியருக்கு எம்எல்ஏ குறுஞ்செய்தி அனுப்பியதற்கான ஆதாரங்கள் உள்ளதா என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு காவல் துறை தரப்பில் "இந்த விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், தலைமைச் செயலாளர் உள்பட யாரிடமும் புகார் அளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

அப்போது மனுதாரர் தரப்பில், இந்த விவகாரம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. ஆளுங்கட்சி எம்எல்ஏவை அனைத்து உயரதிகாரிகளும் பாதுகாப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.

தேசிய மகளிர் ஆணையமே செய்தித் தாள்களில் வந்த தகவலின் அடிப்படையில்தான் விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருக்கிறது என்றார். அப்போது நீதிபதி, " இந்த விவகாரம் குறித்து ஆட்சியரிடம் இருந்து எந்த புகாரும் அளிக்காத நிலையில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள போவதில்லை. மாவட்ட ஆட்சியர் புகாரளிக்காமல் இதில் தலையிட முடியாது. ஒரு வேளை எம்எல்ஏ குறுஞ்செய்தி அனுப்பியது உண்மையாக இருந்தால், அது துரதிருஷ்டவசமானது.

இந்த விவகாரம் தொடர்பாக அரசு, மாவட்ட ஆட்சியரிடம் கருத்துகளை கேட்டு விளக்கம் அளிக்கும் படி அரசுத் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டு இந்த வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தார்.

ஆட்சியர் விவகாரத்தில் அவரது கணவரும் விழுப்புரம் ஆட்சியருமான ஷேக் அப்துல் ரகுமான், தனது மனைவிக்கு எம்எல்ஏ குறுஞ்செய்தி அனுப்பியதையும் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு வந்து தொல்லை கொடுத்ததையும் தலைமைச் செயலாளருக்கு புகாராக அளித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அதை காவல் துறை மறுத்துள்ளது.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து மதுரை கிளை நீதிபதி விக்டோரியா கௌரி ஒரு பொது நிகழ்வில் பேசியுள்ளார். அவர் பேசுகையில், கள்ளக்குறிச்சி ஆட்சியரின் கணவர் புகார் அளித்தும் காவல் துறை இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் இல்லையா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+