நாளை கார்த்திகை தீபம்! வீட்டில் எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்? எந்த திசையில் வைத்தால் நல்லது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருக்கார்த்திகை தீபத்திருவிழா நாளை கொண்டாடப்படும் நிலையில் எத்தனை விளக்குகளை ஏற்ற வேண்டும், எந்தெந்த திசையில் வைத்தால் சகல ஐஸ்வர்யமும் பெருகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அது போல் தப்பித் தவறியும் குறிப்பிட்ட ஒரு திசையில் விளக்கு வைக்கவே கூடாதாம்.

கார்த்திகை மாதத்தில் பவுர்ணமி திதியும் கிருத்திகை நட்சத்திரமும் இணைந்து வரும் நாளில் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு நாளை திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உள்ள மலை உச்சியில் நாளை மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதையடுத்து வீடுகளிலும் அகல் விளக்கு ஏற்றப்படும். அண்ணாமலையார் கோயிலில் மட்டுமல்லாமல் எல்லா கோயில்களிலும் தீபமேற்றப்படும். ஜோதி வடிவில் இறைவனை வழிபடுவதே ஆகும்.

karthigai deepam

எத்தனை விளக்குகள்?

நமது வீட்டில் விளக்குகளை ஏற்றும் போது மண்ணால் செய்யப்பட்ட அகல்விளக்குகளில் தீபமேற்ற வேண்டும். அதிலும் 27 விளக்குகள் இருந்தால் சிறப்பு, அதாவது 27 விளக்குகள் 27 நட்சத்திரங்களை குறிக்கும். அவ்வாறு 27 விளக்குகளை ஏற்ற முடியாவிட்டால் குறைந்தது 9 விளக்குகளையாவது ஏற்றுங்கள். அவரவர் வசதிக்கேற்ப 21, 54, 108 என விளக்குகளை ஏற்றலாம்.

அகல்விளக்கு + பஞ்சு திரி

அகல்விளக்குகளில் மஞ்சள், குங்குமம் வைத்து பஞ்சு திரி போட்டு நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். எல்லா விளக்குகளுக்கும் நெய் ஊற்ற முடியாவிட்டாலும் குறைந்தது ஒரு தீபத்திற்காவது நெய் ஊற்றி விளக்கு ஏற்றுங்கள். ஒரு தீபத்தை தீக்குச்சியால் ஏற்றிவிட்டு மற்ற தீபங்களை அதில் இருந்து ஏற்றிக் கொள்ள வேண்டும். இதுதான் கார்த்திகை தீபத்தின் சிறப்பாகும்.

புதிய விளக்குகள் வாங்க வேண்டுமா?

தீபத்தன்று விளக்கேற்ற புதிய விளக்குகளை வாங்குவது ஐதீகம். அதற்காக எல்லா விளக்குகளையும் புதிதாக ஏற்ற வேண்டும் என்றில்லை. சாஸ்திரத்திற்கு குறைந்தது 2 விளக்குகளை வாங்கி, அதை நில வாசலில் ஏற்றலாம். மற்றவைகளை கழுவி துடைத்துவிட்டு மஞ்சள் குங்குமமிட்டு தீபம் ஏற்றலாம்.

எந்த திசையில் தீபமேற்றலாம்?

தீபத்தன்று எங்குமே இருள் இல்லாதபடி தீபம் ஏற்றுங்கள். கார்த்திகை தீபத்தன்று எந்த திசையில் விளக்கு வைத்தால் ஐஸ்வர்யம் பெருகும் என்பதை காணலாம். அதாவது கிழக்கு, வடக்கு ஆகிய திசைகளை நோக்கி ஏற்றுவது நல்லது.

வடக்கு திசை என்பது குபேர திசையை குறிக்கும். செல்வத்திற்கு அதிபதியான குபேரனின் திசை வடக்கு ஆகும். இங்கு தீபம் ஏற்றினால் பணவரவு அதிகரிக்கும்.

கிழக்கு திசை

அது போல் கிழக்கு திசை என்பது சூரிய திசையை குறிக்கிறது. மங்களகரமான திசையாகும். இந்த திசையில் தீபமேற்றினால் துன்பங்கள் விலகி குடும்பத்தில் அமைதி நிலைக்கும். மேற்கு திசையில் தீபமேற்றினால் கடன் தொல்லைகள் நீங்கும். சனி தோஷங்களும் நிவர்த்தியாகும்.

தெற்கு திசை வேண்டாம்

ஆனால் தெற்கு திசையில் மட்டும் தீபமேற்றவே கூடாது. அந்த திசை எமதர்மனுக்கு உரிய திசை என்கிறார்கள். எனவே வீட்டுக்குள் தெற்கு திசையை தவிருங்கள். அதே வேளையில் வீட்டிற்கு வெளியே வாசலில் தெற்கு திசையில் தீபமேற்றினால் பித்ருக்களின் ஆசியைப் பெற்றுத் தரும் என சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+