புதுச்சேரி தனியார் மதுபான பாரில் தீ விபத்து.. உயிருக்கு போராடிய 3 பேர்.. காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள்

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள தனியார் மதுபான பாரில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து காரணமாக பாரில் மது அருந்தியவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினார்கள். எனினும் சிலர்கடுமையான புகையின் காரணமாக சிக்கிகொண்டனர். அப்படி உயிருக்கு போராடிய மூன்று பேருக்கு CPR செய்து தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றினார்கள். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

புதுச்சேரியில் ஏராளமான தனியார் மதுபானக்கடைகள் இயங்கி வருகின்றன. இங்குள்ள மதுபானக்கடைகளுக்கு தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறுமாநிலத்தைச் சேர்ந்த மதுபிரியர்கள் வார இறுதிகளில் அதிக அளவில் வந்து செல்கிறார்கள். இதனால் ஞாயிறுகளில் புதுச்சேரியில் வழக்கத்தைவிட மதுப்பிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். எல்லா மதுக்கடைகளிலும், பார்களிலும் கூட்டம் அதிகமாக இருக்கும்.

Puducherry

இந்த சூழலில் புதுச்சேரி அண்ணா சாலையில் முனியாண்டி ஒயின்ஸ் என்ற தனியார் மதுபான பார் இயங்கி வருகிறது. வழக்கம்போல் காலையில் மதுபான கடை திறக்கப்பட்டு மது குடிப்பவர்கள் உள்ளே மது அருந்து கொண்டிருந்தார்கள். மதுபான பாரில் இருந்த ஏசியிலிருந்து திடீரென ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் மதுபான பார் முழுவதும் கரும்புகையாக காட்சியளித்தது. மேலும் புகையானது ரெஸ்டாரன்ட் மற்றும் தங்கும் அறைகளுக்கு பரவியது. இதனால் கடும் தீ விபத்து ஏற்பட்டது.

தொடர்ந்து ஊழியர்கள் அங்கிருந்து தண்ணியைக் கொண்டு தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனாலும் மதுபான பார் முழுவதும் தீ பரவியது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு இரண்டு வாகனங்களில் விரைந்து வந்த தீ அணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.

தீ அணைக்கப்பட்டு இருந்தாலும் கடுமையான புகையின் காரணமாக உள்ளே யார் சிக்கிக் கொண்டனர் என தெரியவில்லை. இருப்பினும் மது குடித்த ஒரு சிலர் மது பாட்டிலுடன் வெளியே ஓடி வந்தனர். அதே நேரத்தில் உள்ளே சிக்கிக் கொண்ட சமையல் மாஸ்டர் மற்றும் இரண்டு ஊழியர்கள் மயக்க நிலையில் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக தீயணைப்பு வீரர்கள் உள்ளே சென்று அவர்களை தூக்கி வந்தனர்.. மயக்கமாக இருந்த அவர்களுக்கு சிபிஆர் செய்து உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. இந்த தீவிபத்து காரணமாக அண்ணா சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பாக காட்சி அளித்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+