அதிமுக எடுத்த அஸ்திரம்.. தவெக செம அப்செட்.. சிக்கலில் தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக ஆட்சி 6 மாதங்களை கடந்துவிட்டது. திமுக, அதிமுகவுக்கு மாற்று என சொல்லி ஆட்சிக்கு வந்த தவெக ஏராளமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. சட்டம் ஒழுங்கு பாதிப்பு, தவெக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் மீதான புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் 6 தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைக்க தவெக தேர்தலில் வெற்றி பெறுவது அவசியம். இந்நிலையில் தாராபுரம், மதுராந்தகம் தொகுதியில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது.

சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சிக்கு வந்தது. தவெக ஆட்சிக்கு வருவதை தடுக்க திமுக அதிமுக முயற்சித்ததாக தவெக குற்றம் சாட்டியது. காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்தது. அதிமுகவின் 6 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றதால், முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

TVK

தவெக வெற்றியை எதிர்த்து அதிமுக வழக்கு

அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தை வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அவர்கள் தவெகவில் இணைந்ததை சட்டப்படி ஏற்கப்பட்டதாக நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்தது. இதன் மூலம் திருச்சி கிழக்கு, கரூர், அம்பாசமுத்திரம், பெருந்துறை, விராலிமலை, கொளத்தூர் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பணிகளில் தவெக ஈடுபட்டுள்ளது.

முன்னதாக தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கு கடந்த அக்டோபர் மாதம் இடைத்தேர்தல் நடைபெற்றது. இரண்டு தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றது. அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்தவர்களுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. தாராபுரம் தொகுதியில் சத்யபாமா, மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். திமுக இரண்டாமிடத்தையும், அதிமுக மூன்றாமிடத்தையும் பிடித்தன.

சிக்கலில் தாராபுரம், மதுராந்தகம்

சிட்டிங் தொகுதிகள் கைமீறி போனதில் அதிமுக அதிர்ச்சியடைந்தது. தவெகவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அதிமுக சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளனர். தவெகவின் வெற்றி செல்லாது என வழக்கு தொடரப்பட்டுள்ளது. தாராபுரம் தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட பானுமதி இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. இதனால் தவெக தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+