வன்னியரசு புலியை விரட்டியதாக சர்ச்சை வீடியோவில் ட்விஸ்ட்! பந்திப்பூர் வனத்துறை அதிகாரி விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: தமிழக சமூகநீதித் துறை அமைச்சர் வன்னியரசு சவாரி வாகனத்தில் இருந்து இறங்கி, வனவிலங்குகளை அச்சுறுத்துவது போல் சென்றது பந்திப்பூர் வனப்பகுதி அல்ல என வனத்துறை அதிகாரி விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து பந்திப்பூர் வனத்துறை துணை பாதுகாவலர் நந்தீஷ் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: பந்திப்பூர் சவாரி வாகனம் இடம்பெற்றிருப்பது உண்மைதான். ஆனால் பந்திப்பூரில் சவாரி சென்ற போது எடுக்கப்பட்ட வாகனத்தின் காட்சிகளையும் முதுமலையில் சவாரி சென்ற போது வாகனத்தில் இருந்து இறங்கிய காட்சிகளையும் ஒன்றாக இணைத்து ரீல்ஸ் தயாரித்துள்ளனர்.

பந்திப்பூர் வனப்பகுதியில் சவாரி வாகனத்தில் இருந்து கீழே இறங்குவதற்கு அனுமதி கிடையாது. முதற்கட்ட விசாரணையில் வாகனத்தில் இருந்து நடந்து சென்ற சம்பவம் பந்திப்பூரில் நடைபெறவில்லை. எனினும் எங்கள் மாநிலத்து சவாரி வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா பதிவுகளை மீண்டும் ஆய்வு செய்ய இருக்கிறோம் என நந்தீஷ் தெரிவித்துள்ளார்.

vanniarasu

வன்னியரசு என்ன செய்தார்?

தமிழக அமைச்சர் வன்னியரசு கடந்த 10-ஆம் தேதி கர்நாடகா மாநிலம், பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் சவாரி சென்றிருந்தார். அப்போது சவாரி வாகனத்தில் இருந்து கீழே இறங்கிய அவர் காட்டு யானை, புலியின் அருகே சென்றதாகவும் அவற்றை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

ரீல்ஸ்

மேலும் இந்த காட்சிகளை அவர் ரீல்ஸ்ஸாக வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. ஒரு காட்சியில் புலியை துரத்தி சென்றது போல் இருந்தது. இந்த நிலையில் வனவிலங்குகளை அச்சுறுத்திய விவகாரத்தில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த கர்நாடகா அரசு உத்தரவிட்டிருந்தது.

வன்னியரசு வெளியிட்ட ரீல்ஸ்

வன்னியரசு வெளியிட்டிருந்த ரீல்ஸ் வீடியோ குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்திருந்தார். அது போல் அவர் வெளியிட்ட அறிக்கையில் புலியை சிறுத்தை துரத்திச் செல்கிறதா என்ற கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் காட்டுப்பகுதியில் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளார் என தெரிவித்திருந்தார்.

அமைச்சர் விளக்கம்

இதற்கு வன்னியரசு விளக்கமளிக்கையில், "நான் புலிகள் காப்பகத்திற்கு சென்றதில் எந்த விதிகளும் மீறப்படவில்லை. நான் முறையாக அனுமதி பெற்றே சென்றேன். புலியை யாராவது விரட்ட முடியுமா? புலியை நேரில் பார்த்ததும் ஆர்வ மிகுதியால் அதை இன்னும் நன்றாக பார்ப்பதற்காக சென்றேன். மற்றபடி நான் விரட்டவில்லை. நான் மக்களை எப்படி நேசிக்கிறேனோ அது போல் விலங்குகள், காடுகள், கடலையும் நேசிப்பவன். எந்த ஒரு விலங்கிற்கும் என்னால் தீங்கு ஏற்படும் என சொல்ல முடியாது.

தினகரன் மீது மரியாதை உண்டு

அரசியல் ரீதியாக என் மீது விமர்சனங்களை முன் வைக்க முடியாதவர்கள் என் மீது இது போன்ற விமர்சனங்களை முன் வைக்கிறார்கள். தருமபுரியில் உள்ள வத்தல் மலைக்கு யாராலும் செல்ல முடியாது. அங்கும் நான் சென்றுள்ளேன். எந்த தீபாவளிக்கும் நான் வீட்டில் இருந்ததில்லை, காடுகளில்தான் இருப்பேன். அமமுக பொதுச் செயலாளர் தினகரன் மீது எனக்கு மரியாதை உண்டு. அவர் வருத்தப்படும் அளவுக்கு ஒன்றும் நடந்துவிடவில்லை 15 ஆண்டுகளுக்கு மேலாக நான் கால் பதிக்காத காடுகள் இல்லை. நான் ஒரு அமைச்சர், எனக்கு பொறுப்பிருக்கிறது. அமைச்சரானதும் முதல் முறையாக காட்டுக்கு சென்றேன் என விளக்கமளித்திருந்தார்.

நடந்தது என்ன?

நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் 10ஆம் தேதி சமூகநீதித் துறை அமைச்சர் வன்னியரசு ஆய்வு மேற்கொண்டார். அப்போது முதுமலை புலிகள் காப்பகத்திற்கு சென்றார். அங்கு தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் சென்று அவர் ரீல்ஸ் எடுத்துள்ளார். அந்த ரீல்ஸ் கடந்த 15 ஆம் தேதி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+