இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை! ஜெயலலிதா காலத்தில் நடந்தது.. அப்படியே நடக்குது!

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: 'இளைய புரட்சித் தலைவி திரிஷா பேரவை' என்கிற அமைப்பை திரிஷா ரசிகர்கள் தொடங்க இருக்கின்றனர். ஏற்கெனவே நடிகை திரிஷாவை சுற்றி பல பேச்சுக்கள் இருக்கும் நிலையில், தற்போது இந்த அமைப்பு தொடங்கப்பட இருக்கிறது.

நடிகை திரிஷா, கடந்த 1999 ஆம் ஆண்டு திரைத்துறைக்கு வந்தாலும்.. 2022 ஆம் ஆண்டு மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலமாகத்தான் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனாலும், 2004ம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படத்தில் விஜய் உடன் சேர்ந்து நடித்த பின்னர்தான் பெரிய அளவுக்கு தமிழக திரைத்துறையில் கவனம் ஈர்க்கப்பட்டார்.

Trisha Jayalalitha tamil nadu

இந்த படத்தைத் தொடர்ந்து திருப்பாச்சி, ஆதி, குருவி ஆகிய படங்களில் விஜயுடன் சேர்ந்து நடித்த இவர்.. நீண்ட இடைவெளிக்கு பின்பு 2023 ஆம் ஆண்டு வெளியான லியோ திரைப்படத்திலும் விஜயுடன் சேர்ந்து நடித்திருந்தார்.

நிகழ்ச்சிகளில் ஒன்றாக பங்கேற்ற சம்பவங்கள்

திரைப்படத்தை தாண்டி.. விஜய் முழுநேர அரசியலில் ஈடுபட்டதில் இருந்து, முக்கிய நிகழ்வுகளில் அவருடன் திரிஷா கலந்து கொள்வது பரவலாக விவாதங்களை கிளப்பியிருந்தது. குறிப்பாக முதலமைச்சராக விஜய் பதவியேற்பு விழா மற்றும் சுதந்திர தின விழா கொண்டாட்டங்களில் திரிஷா பங்கேற்று இருந்தார். சமீபத்தில், செப்டம்பர் மாதம் இங்கிலாந்தில் நடந்த சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்திலும், நவம்பர் 5ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும், இருவரும் ஒன்றாக பங்கேற்று இருந்தனர்.

ஆட்சி நிர்வாக விவகாரங்களில்

இப்படி இருக்கையில், தமிழக வெற்றி கழகம் மற்றும் மாநில ஆட்சி நிர்வாகம் தொடர்பான விவகாரங்களிலும் திரிஷா பெயர் அடிக்கடி அடிபட்டு வருகிறது. நவம்பர் 20ஆம் தேதி இது தொடர்பாக செய்தி ஒன்று வெளியாகி இருந்தது. அதில், கட்சியின் முக்கிய ஆலோசகரான ஜான் ஆரோக்கியசாமிக்கு எதிராக.. கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வரும் நிலையில், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் விஜயின் ஆலோசகர் விஷ்ணு ரெட்டி ஆகியோர் திரிஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்ததாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பட்டத்திற்கான அரசியல் பின்னணி

இந்த சலசலப்புகளுக்கு இடையில்தான் தற்போது 'இளைய புரட்சித்தலைவி பட்டம்' திரிஷாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த பட்டத்திற்கு தமிழக அரசியலில் முக்கியமான பின்னணி உண்டு. அதாவது முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு.. அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா, அரசியலில் களம் இறங்கினார். அப்போது அவருக்கு இந்த பட்டத்தை அவரது ஆதரவாளர்கள் கொடுத்திருந்தனர். ஜெ.தீபா இப்போது அரசியலில் இல்லாத நிலையில்.. ரசிகர்கள் திரிஷாவுக்கு இளைய புரட்சித் தலைவர் பட்டத்தை சூட்டியுள்ளனர்.

அதிகாரப்பூர்வமானதா?

அதேபோல, சில நாட்களுக்கு முன்னால் 'தியாக சுடர் திரிஷா பேரவை' என்ற பெயரில் ரசிகர்களால் நடத்தப்பட்ட மற்றொரு அமைப்பின் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பரவின. இருப்பினும் திருநெல்வேலியில் தொடங்கப்படும் 'இளைய புரட்சித் தலைவி திரிஷா பேரவை' அமைப்பு அதிகாரப்பூர்வமானதா? அல்லது திரிஷாவின் சம்மதத்துடன் உருவாக்கப்பட்டதா? என்பது குறித்து இன்னும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

ஜெயா பேரவையின் வரலாறு

இதற்கு முன்னர் தமிழக அரசியலில், 'புரட்சித்தலைவி அம்மா பேரவை' பரவலாக அறியப்பட்டிருந்தது. இது அதிமுக அதிமுகவின் ஒரு முக்கிய துணை அமைப்பாகும். கட்சியின் மறைந்த பொதுச் செயலாளரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஆன ஜெ.ஜெயலலிதாவின் பெயரால் இந்த அமைப்பு அழைக்கப்படுகிறது. அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு, ஜெயலலிதாவுக்கு விசுவாசமானவர்களை திரட்டுவதற்காக 1980களின் பிற்பகுதியில் 'ஜெயா பேரவை' என்கிற பெயரில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. ஜெயலலிதா கட்சியின் தலைமையை தன் வசப்படுத்தி, 1991 ஆம் ஆண்டு முதலமைச்சரான பிறகு.. இந்த பேரவை அதிமுகவின் முக்கியத்துணை அமைப்புகளில் ஒன்றாக அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது.

அம்மா பேரவையின் வரலாறு

'புரட்சித்தலைவி அம்மா பேரவை' உருவானதற்கு பின்னால் மாணவர்கள்தான் இருந்தனர். அதாவது, 1982 ஆம் ஆண்டு எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது.. ஜெயலலிதா அதிமுகவில் இணைந்து 1983 கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். அக்காலகட்டத்தில் ஜெயலலிதாவின் பேச்சாற்றல் மற்றும் ஆளுமையால் ஈர்க்கப்பட்ட அதிமுக இளைஞர்கள் அவரது பெயரில் நற்பணி மன்றங்களை தொடங்கினர். அப்போது அவருக்கு வழங்கப்பட்டிருந்த சிந்தனை செல்வி என்ற பட்டத்தை இணைத்து, 'சிந்தனை செல்வி ஜெயலலிதா நற்பணி மன்றம்' என்ற அமைப்பை உருவாக்கினர். இதுவே பிற்காலத்தில் 'ஜெயலலிதா பேரவையாகவும்' இன்று 'அம்மா பேரவையாகவும்' உருவெடுத்தது.

ரகசிய செயல்பாடுகள்

ஜெயலலிதா கொள்கை பரப்பு செயலாளராக பொறுப்பேற்றதும், சென்னையில் உள்ள குறிப்பிட்ட சில கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து.. இந்த நற்பணி மன்றத்தின் கீழ் கூட்டங்களை நடத்த தொடங்கினார். இந்த கூட்டங்கள் எதுவும் வெளிப்படையாக இல்லாமல், ரகசியமாக நடத்தப்பட்டது. காரணம் 1983 காலகட்டங்களில் அதிமுகவுக்குள் எம்ஜிஆர் மட்டுமே ஒற்றை தலைமை என்கிற நிலை இருந்தது. இப்படி இருக்கையில் கட்சியின் மூத்த தலைவர்கள் பலருக்கு ஜெயலலிதாவின் வேகமான அரசியல் வளர்ச்சி பிடிக்கவில்லை. அதனால் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைமையின் எதிர்ப்புக்கு ஆளாகாமல்.. ஜெயலலிதாவுக்கு ஆதரவான ஒரு தனி தளத்தை கட்டமைக்க இந்த மாணவர் குழுவினர் வெளிப்படையாக தெரியாமல் ரகசியமாகவே செயல்பட்டனர்.

மொத்தத்தில்.. 1987-ல் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா, அதிமுகவின் பொதுச்செயலாளராக உருவெடுப்பதற்கு தேவையான அடிமட்ட தொண்டர்கள் பலத்தை 4 ஆண்டுகளுக்கு முன்பே.. அதாவது 1983 ஆம் ஆண்டிலேயே இந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்தான் ரகசியமாக உருவாக்கினர்.

நிலைமை இப்படி இருக்கையில், தற்போது இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை தொடங்கப்பட இருப்பது, அரசியல் தளத்தில் பல்வேறு விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+