தனுசு வார ராசி பலன்: பணவரவு அதிகரிக்கும்.. கார், வீடு, சொத்து வாங்கும் யோகம்!

Subscribe to Oneindia Tamil

Rasi palan this week: நவம்பர் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையிலான (கார்த்திகை 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் தனுசு ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rasi-palan-this-week-what-kind-of-benefits-will-dhanusu-people-get-from-nov-23-to-29

கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. தனுசு ராசியில் சூரியன் வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதமாகும். தனுசு என்பது குரு வீடு. பகை வீட்டில் சூரியன் இருக்கிறார். பெரிய தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், இசைக் கலைஞர்கள் எல்லோரும் இந்த மாதத்தில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், நவம்பர் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையிலான (கார்த்திகை 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசியினருக்கு யோக பலத்தைப் பெறக்கூடிய காலகட்டம். குருவின் ஆசிர்வாதம் பிரமாதமான அமைப்பைத் தரும். உறவினர்களுடன் மனம் விட்டுப் பேசுவது யோகத்தைப் பெற்றுத் தரும். விநாயகர், துர்க்கை வழிபாடு செய்வது குடும்பத்தில் இருக்கும் ராகு கேது தோஷத்தில் இருந்து காப்பாற்றும். எதிர்பார்த்த நிறைய விஷயங்கள் தனிப்பட்ட செல்வாக்கைப் பெற்றுத் தரும்.

சிக்கல் நீங்கும்

இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் பரிபூரண நிவர்த்தியாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சிக்கல்கள் தீரும். தனிப்பட்ட தொழில், உத்தியோகம், சுபகாரியங்கள், இடமாற்றங்கள், தொழில் மாற்றங்கள், உத்தியோக மாற்றங்கள் ஏற்படக்கூடிய நல்ல காலகட்டம். கால் வலி, வேதனை, கழிவுப் பாதை தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.

பணவரவு கொட்டும்

பணம், காசுக்கு தட்டுப்பாடு இருக்காது. நண்பர்கள் வீட்டுக்கு வரிகை புரிவார்கள். வீடே சந்தோஷமாக இருக்கும். அடுத்த ஒருமாத காலம் பண்டிகைக் காலம் போல வீடே கோலாகலமாக இருக்கும். எல்லா விஷயத்தையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். நண்பர்கள் மூலமாக ஆதாயம் ஏற்படும். கணவனாக இருந்தால் மனைவிக்கு யோகம் ஏற்படும்.

கார், வீடு வாங்கும் யோகம்

மனைவிக்கு பெரிய வெற்றி கிடைக்கும். கார் வாங்குவது, வீடு வாங்குவது, சொத்து வாங்குவது, வேலை கிடைப்பது போன்ற அமைப்பு உள்ளது. விரயத்தில் சூரியன் இருப்பதால் முதுகு வலி, தூக்கமின்மை போன்றவை இருக்கும். இந்த மாதம் முழுவதுமே விட்டமின் குறைபாடு, எலும்பு பாதிப்பு, பின்பக்க வலிகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.

வழிபாடு

பெரிய பாதிப்புகள் எதுவும் ஏப்படாது. நினைத்தது அற்புதமாக நடக்கக்கூடிய காலகட்டம். செவ்வாய், கேது, குரு இருப்பதால் முருகர் வழிபாடு சகலவித நன்மைகளைத் தரும். சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. சந்தோஷமும், பொருளாதார முன்னேற்றமும் 85 சதவீதம் அற்புதத்தைத் தரக்கூடிய காலகட்டமாக உங்களுக்கு அமையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+