180 சீட் கேட்ட காங்கிரஸ்.. 55க்கு மேல் வாய்ப்பே இல்லை.. அகிலேஷ் பிடிவாதம்! தொகுதி பங்கீடு குழப்பம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தர பிரதேச சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர்கள் இடையே இன்று முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது. காங்கிரஸ் 180 சீட் வரை கேட்டதாக சொல்லப்படும் நிலையில், 85 சீட்களுக்கு கீழ் குறையக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது. இருப்பினும் அதற்கு அகிலேஷ் தரப்பு தயங்குவதால் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்படும் என்றே தெரிகிறது.

உத்தர பிரதேசத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக அனைத்து கட்சிகளுமே ரெடியாகி வரும் நிலையில், பாஜகவை வீழ்த்த அகிலேஷ் யாதவ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. இருப்பினும், அந்த கூட்டணியில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை சுமுகமாக முடியாது என்றே தெரிகிறது.

Uttar Pradesh Election 2027 Congress Akhilesh Yadav

பேச்சுவார்த்தை

இரு கட்சிகளுக்குமே இடையே இன்றைய தினம் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது. டெல்லியில் இன்று நண்பகல் 12 மணிக்கு காங்கிரஸ் எம்பி பிரமோத் திவாரியின் இல்லத்தில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் இரு கட்சிகளையும் சேர்ந்த தலா நான்கு தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

காங்கிரஸ் தரப்பில் உத்தர பிரதேச பொறுப்பாளர் ராஜேந்திர பால் கவுதம், மாநில தலைவர் ஆராதனா மிஸ்ரா, மாநில செயல் தலைவர் இம்ரான் மசூத், சட்டமன்ற கட்சி தலைவர் வீரேந்திர சவுத்ரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சமாஜ்வாதி தரப்பில் பொதுச்செயலாளர் ராம்கோபால் யாதவ், மாநில தலைவர் ஷியாம்லால் பால் மற்றும் எம்பிக்கள் ராஜீவ் ராய், இக்ரா ஹசன் பங்கேற்கின்றனர். பிரியங்கா காந்தி நேரடியாக இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கவில்லை என்றாலும், பின்னணியில் இருந்து அவரே இறுதி முடிவை எடுப்பார் என கூறப்படுகிறது.

ஈஸியாக முடியாது

அதேநேரம் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை அவ்வளவு ஈஸியாக முடியும் என சொல்லிவிட முடியாது. கடந்த 2017 சட்டசபை தேர்தலில் சமாஜ்வாதி கட்சி காங்கிரஸுக்கு சுமார் 105 தொகுதிகளை ஒதுக்கியிருந்தது. மேலும், கடந்த லோக்சபா தேர்தலில் உத்தர பிரதேசத்தின் 80 தொகுதிகளில் 17 இடங்களில் காங்கிரஸ் போட்டியிட்டது.

உபியில் மொத்தம் 403 சீட் உள்ள சூழலில், முதலில் 180 சீட்களை கொண்ட லிஸ்ட்டை காங்கிரஸ் கொடுத்திருந்தது. 180க்கு வாய்ப்பில்லை என்றாலும் 100+ என்று அடுத்து சொன்னது. அதற்கும் அகிலேஷ் தரப்பு தயங்குவதால் 85க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்க வேண்டும் என்பதும் காங்கிரஸின் வாதமாக உள்ளது. உறுதியான வெற்றி வாய்ப்புள்ள இடங்களும், மரியாதைக்குரிய தொகுதி பங்கீடும் அவசியம் என காங்கிரஸ் தலைவர்கள் கருதுகின்றனர்.

அதிகபட்சமே 55 சீட் தான்

ஆனால், தொகுதிகளின் எண்ணிக்கையை விட வெற்றியே முக்கியம் என்று அகிலேஷ் யாதவ் கருதுகிறார். கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, 2 சதவீத வாக்குகளை கூட பெறவில்லை என்பதை சமாஜ்வாதி தரப்பு சுட்டிக்காட்டுகிறது. காங்கிரஸுக்குத் தனிப்பட்ட வாக்கு வங்கி வலுவாக இல்லை என்பதால், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை மட்டும் கேட்க வேண்டும் என்பதே அகிலேஷின் நிலைப்பாடு. அதன்படி அதிகபட்சமாகவே 55 தொகுதிகளை மட்டுமே அகிலேஷ் தரப்பு தர ரெடியாக உள்ளதாக கூறப்படுகிறது.

சஹாரன்பூர் தேஹாத், பெஹட், அமேதி, ரேபரேலி ஆகிய தொகுதிகள் பேச்சுவார்த்தையில் முக்கிய முட்டுக்கட்டையாக இருக்கலாம். சஹாரன்பூரில் இரண்டு தொகுதிகளையும் இம்ரான் மசூத் காங்கிரஸுக்குக் கோரியுள்ளார். அமேதி, ரேபரேலி தொகுதிகள் நேரு குடும்பத்துடன் தொடர்புடையது என்பதால் அதை காங்கிரஸ் விட்டுக்கொடுக்க விரும்பாது.

ராகுல் காந்தி- அகிலேஷ் யாதவ்

இருப்பினும், அகிலேஷ் யாதவ் மற்றும் ராகுல் காந்தி இடையே நல்ல உறவு இருப்பதாக கூறப்படுகிறது. நவம்பர் 16ஆம் தேதி இருவரும் முதற்கட்ட ஆலோசனை நடத்தியுள்ளனர். அதைத் தொடர்ந்தே தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடக்கிறது. இதனால் பேச்சுவார்த்தையில் எதாவது முட்டுக்கட்டை ஏற்பட்டாலும் கூட இரு தலைவர்களும் நேரடியாக பேசி உடன்பாட்டை எட்டுவார்கள் என்பதே அவர்களின் நம்பிக்கையாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+